Siruthaniyam Kanji for Babies: நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவு பட்டியலில் சிறு தானியத்திற்கு பிரதான இடமிருந்தது.அரிசி உணவினை அளவாக உண்டு சிறு தானியத்தை பிரதான உணவாக்கினர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகிவிட்டது.அரிசியினை பிரதான உணவாக்கி சிறுதானியம் என்பது அரிதாகிவிட்டது.சிறுதானியங்கள் என்பவை எண்ணிலடங்கா சத்துக்களை உள்ளடக்கியவை.அவற்றின் நன்மைகளை காணலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சிறுதானியங்களின் நன்மைகள் :
- உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன.
- இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன.
- இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
- சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
- நாம் சிறுதானியங்களை உட்கொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பன்மடங்காக உயர்கிறது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் ஐந்து வகையான சிறுதானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான கஞ்சி ரெசிபியை நாம் காணலாம்.
Siruthaniyam Kanji for Babies:
- கம்பு – 1 கப்
- திணை- 1 கப்
- சாமை – 1 கப்
- ஓட்ஸ் -1/2 கப்
- ஆளி விதைகள் -1/2 கப்
இதையும் படிங்க: பூச்சி கடிக்கான எளிமையான வீட்டு வைத்தியங்கள்
Siruthaniyam Kanji for Babies:
செய்முறை
1.பானை சூடாக்கவும்.
2.தானியங்களை தனி தனியாக வறுக்கவும்.
3.மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
4.3 முதல் 4 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.குளிர்சாதன பெட்டியில் வைத்து 6-8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
சிறுதானிய கஞ்சி செய்வது எப்படி?
1)1 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
2) 2 டே.ஸ்பூன் கஞ்சி பொடியை சேர்க்கவும்.
3)கட்டிகள் இல்லமால் நன்றாக கரைக்கவும்.
4)கஞ்சி பதத்திற்கு வரும்வரை மிதமான தீயில் இடைவிடாமல் கிளறவும்.
5)சத்துமாவு கஞ்சி ரெடி. இதமாக குழந்தைக்கு பரிமாறவும்.தயார் செய்த 2 மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கொடுத்து விடவும்.
குழந்தைகளுக்கு 6 மாதத்தில் அடிப்படை உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் இந்த சிறுதானிய கஞ்சியினை கொடுக்கலாம்.இதில் கொடுக்கப்பட்டுள்ள தானியங்ககளை தனி தனியாக கொடுக்க ஆரம்பித்தவுடன் இந்த சிறுதானிய கஞ்சியினை கொடுக்கலாம்.இந்த கஞ்சியினை வீட்டில் தயாரிக்க நேரமில்லையா? கவலை வேண்டாம்.நாங்களே பிரெஷாக தயாரித்து உங்களுக்கு தேடி வந்து தருகின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply