Soya Aval Kanji in Tamil : குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் பல்வேறு உணவு வகைகளை நாம் இதுவரை பார்த்துவிட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் சோயா அவல் கஞ்சியானது நாம் வழக்கமாக கொடுக்கும் உணவு வகைகளில் இருந்து சற்று மாறுபட்டது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சோயா குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது பலரும் அறியாத ஒன்று. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கர் எனப்படும் உணவினை தான் நாம் இதுவரை உணவில் சேர்த்து இருப்போம். ஆனால் சோயாவினை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
உண்மையில் சோயா என்பது குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீன்கள்,வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆகும்.மேலும் இதில் நார்ச்சத்து,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை இருப்பதால் அசைவ உணவிற்கு இணையான சத்தினை தரக்கூடியது.
மேலும் பால் பொருட்கள் சார்ந்த ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கும் இந்த சோயா பொருத்தமாக இருக்கும். மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள அவலானது குழந்தைகளுக்கு கார்போஹைட்ரேட்,இரும்புச் சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி சத்துகளை தருவதாகும்.
இவற்றை இரண்டையும் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான அதேநேரம் வயிறு நிரம்ப கொடுக்கும் சுவையான உணவாக இருக்கும். மேலும் இதனை இன்ஸ்டன்ட் உணவாக தயாரித்து வைத்துக் கொள்வதன் மூலம் சுடுதண்ணீர் சேர்த்தால் போதும் பயணம் செய்யும்போது குழந்தைகளுக்கு கொடுக்க இந்த பொடியினை உடன் எடுத்துச் செல்லலாம்.குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு மேல் இந்த ரெசிபியை நீங்கள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
Soya Aval Kanji in Tamil:
Soya Aval Kanji in Tamil:
- சோயா 2 டே.ஸ்பூன்
- அவல் இரண்டு கப்
- ஓமம்-சிறிதளவு
Soya Aval Kanji in Tamil
செய்முறை
1.எண்ணெய் சேர்க்காமல் அவலை வறுக்கவும்.
2.சோயாவை வறுக்கவும்.
3.ஓமத்தை வறுக்கவும்.
4.ஆறவிடவும்.
5.மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.
குறிப்பு : நைசாக வேண்டும் என்றால் சலித்து எடுக்கவும்.
7.காற்று புகாத டப்பாவில் வைத்து 3-4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
இன்ஸ்டன்ட் சோயா அவல் கஞ்சி செய்வது எப்படி?
1.ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
2.சுடு தண்ணீரை சேர்க்கவும்.
3.கட்டிகளில்லாமல் நன்கு கரைக்கவும்.
4.சோயா அவல் கஞ்சி பவுடர் ரெடி.
குழந்தைகளுக்கு தேவையான இன்ஸ்டன்ட் உணவு வகைகளை தயாரிக்க நேரமில்லாத பிஸியான பெற்றோரா நீங்கள்?உங்களுக்கு தேவையான ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் உணவு வகைகளை நாங்கள் தயாரித்து தருகின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்க கூடாது என்பதால் எங்களது பொருட்கள் அனைத்தும் உப்பு,சர்க்கரை,கெமிக்கல் மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படாதது. மேலும் டாக்டரான எனது மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு முழு உத்திரவாதம்.
இன்ஸ்டன்ட் சோயா அவல் கஞ்சி
Ingredients
- 2 டே.ஸ்பூன் சோயா
- 2 கப் அவல்
- சிறிதளவு ஓமம்
Notes
- எண்ணெய் சேர்க்காமல் அவல்,சோயா,ஓமத்தை வறுக்கவும்.
- ஆறவிடவும்.
- மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.
- நைசாக வேண்டும் என்றால் சலித்து எடுக்கவும்.
- இன்ஸ்டன்ட் சோயா அவல் கஞ்சி செய்வது எப்படி?
- ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
- சுடு தண்ணீரை சேர்க்கவும்.
- கட்டிகளில்லாமல் நன்கு கரைக்கவும்.
- சோயா அவல் கஞ்சி பவுடர் ரெடி.
Leave a Reply