Suraikkai Palakeerai Soup:இதுவரை குழந்தைகளுக்கான வித விதமான டிபன் ரெசிபிகளையும் ஸ்நாக்ஸ் ரெசிபிகளையும் பார்த்த நாம் இன்று சற்று வித்தியாசமான சூப் ரெசிபியை பார்க்கப் போகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாக குழந்தைகளுக்கு நாம் மூன்று நேரமும் என்னென்ன கொடுக்கலாம் என்று விதவிதமான கேள்விகளை அம்மாக்கள் கேட்பது உண்டு. குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகளில் கவனம் செலுத்தும் நாம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் என்னென்ன கொடுக்கலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்னாக்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதையும் தாண்டி குழந்தைகள் ஆரோக்கியமாக குடிக்கும் வகையில் சூப் போன்றவையும் தரலாம் என்பதை நாம் யோசிக்க பழக வேண்டும். சூப் என்றால் அசைவ சூப் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
சைவத்திலும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சூப் வகைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் இன்று நாம் பார்க்க போகும் ஒன்றுதான் சுரைக்காய் கீரை சூப்.
Suraikkai Palakeerai Soup
இந்த சூப் வகையை பார்ப்பதற்கு முன்னால் சுரைக்காய் மற்றும் பசலைக்கீரையில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

சுரைக்காயின் நன்மைகள்:
- அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுகிறது.
- நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
- வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன.
- குறைந்த கலோரி கொண்ட காய்கறியாகும்.
பசலைக்கீரையின் நன்மைகள்:

- இரும்புச்சத்து சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது.
- ஃபோலேட் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
- வைட்டமின் K எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
Suraikkai Palakeerai Soup
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய சுரைக்காய் – 1 கப்
- நறுக்கிய பசலைக்கீரை – ½ கப்
- பூண்டு – 1 சிறிய பல்
- இஞ்சி – சிறிய துண்டு
- நெய் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1 கப்
- சீரகத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
1. சுரைக்காய் மற்றும் பசலைக்கீரையை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, பூண்டு மற்றும் இஞ்சியை லேசாக வதக்கவும்.
3. நறுக்கிய சுரைக்காய் மற்றும் கீரையைச் சேர்த்து 1–2 நிமிடங்கள் வதக்கவும்.
4. தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகள் நன்கு மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
5. சிறிது ஆறியதும் மிக்ஸியில் அரைத்து மிருதுவான சூப்பாகத் தயாரிக்கவும்.
6. ஒரு சிட்டிகை சீரகத்தூள் சேர்த்துக் கலந்து, மிதமான சூட்டில் பரிமாறவும்.
குறிப்பு: சுரைக்காய் கசப்பு தன்மையுடன் இருந்தால் அதனை பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகளுக்கு காலை உணவு அருந்திய பெண் காலை நேர சிற்றுண்டியாக சுமார் 11 மணியளவில் இந்த சூப்பை நீங்கள் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் மதிய உணவு அருந்திய பின்பு மதிய நேர சிற்றுண்டியாக இதனை நீங்கள் கொடுக்க குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Suraikkai Palakeerai Soup
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. சுரைக்காய் பாலக்கீரை சூப் குழந்தைகளுக்கு நல்லதா?
ஆம், சுரைக்காய் மற்றும் கீரையால் தயாரிக்கப்படும் சூப் குழந்தைகளுக்குச் சத்தான உணவாக இருக்கலாம். காய்கறிகளை நன்றாக வேகவைத்து, குழந்தையின் வயதுக்கு ஏற்றவாறு மிருதுவாக அரைத்துக் கொடுக்கவும்.
2. எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்?
பொதுவாக, குழந்தை 6 மாதங்கள் நிறைவடைந்து திட உணவுகளைச் சாப்பிடத் தயாராக இருக்கும்போது கொடுக்கலாம். முதலில் சுரைக்காய், கீரை ஆகியவற்றைத் தனித்தனியாக அறிமுகப்படுத்தி, ஒத்துக்கொள்கிறதா என்பதைப் பாருங்கள்.
3. உப்பு சேர்க்கலாமா?
ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு உணவில் கூடுதல் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
4. மசாலா சேர்க்கலாமா?
சிறிதளவு சீரகத்தூள் போன்ற மிதமான மசாலாக்களைச் சேர்க்கலாம். காரமான மசாலாக்களைத் தவிர்க்கவும்.
முக்கியக் குறிப்பு: சுரைக்காய் கசப்பாக இருந்தால் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். கசப்பான சுரைக்காயில் நச்சுத்தன்மை இருக்கலாம்.
சுரைக்காய் பாலக்கீரை சூப்
Ingredients
நறுக்கிய சுரைக்காய் – 1 கப்
நறுக்கிய பசலைக்கீரை – ½ கப்
பூண்டு – 1 சிறிய பல்
இஞ்சி – சிறிய துண்டு
நெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
சீரகத்தூள் – ஒரு சிட்டிகை
Notes
1. சுரைக்காய் மற்றும் பசலைக்கீரையை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, பூண்டு மற்றும் இஞ்சியை லேசாக வதக்கவும்.
3. நறுக்கிய சுரைக்காய் மற்றும் கீரையைச் சேர்த்து 1–2 நிமிடங்கள் வதக்கவும்.
4. தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகள் நன்கு மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
5. சிறிது ஆறியதும் மிக்ஸியில் அரைத்து மிருதுவான சூப்பாகத் தயாரிக்கவும்.
6. ஒரு சிட்டிகை சீரகத்தூள் சேர்த்துக் கலந்து, மிதமான சூட்டில் பரிமாறவும்.











Leave a Reply