ulunthu kali recipe:ஆறு மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வகைகள் என்னென்ன தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கான மற்றுமொரு ட்ரீட் தான் இந்த கருப்பு உளுந்து களி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கருப்பு உளுந்து களியானது நம் பாரம்பரிய உணவு பட்டியலில் இடம் பெற்ற ஒரு உணவு வகையாகும். அதிகாலை எழுந்தவுடன் டீ, காபி போன்றவை அருந்துவதற்கு முன்பாகவே வெறும் வயிற்றில் உளுந்து களியுடன் நல்லெண்ணெய் ஊற்றி உண்ணும் பழக்கம் நம் முன்னோர்கள் இடையே இருந்தது.
முதலில் பூப்பெய்தும் பெண்களுக்கு உளுந்து களி பிரதான உணவாகும். மனித உடலில் உள்ள எலும்புகளை வலுவாக்கும் சக்தி உளுந்துக்கு உண்டு என்பதால் நம் முன்னோர்கள் கண்டறிந்த அற்புதமான உணவு தான் இந்த களியாகும்.
ஆனால் இன்று இது காலப்போக்கில் நம்மிடையே மறைந்து வரும் ஒரு உணவுப் பொருளாகும். இன்று இருக்கும் தலைமுறைகளுக்கு இவற்றை செய்வதற்கு நேரமும், மெனக்கிடுதலும் இல்லாத காரணத்தினால் இவை இன்று மறைந்து வரும் உணவுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.
ஆனால் குழந்தைகளின் ஆரோக்கிய விஷயத்தில் சிரமம் பார்க்காமல் கஞ்சி பவுடரை மாதம் ஒரு முறை அரைத்து வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை செய்து கொடுக்கலாம். மேலும் இதை செய்வது மிகவும் எளிது.
ulunthu kali recipe
ulunthu kali recipe
- கருப்பு உளுந்து- 4 டே.ஸ்பூன்
- அரிசி -2 டே.ஸ்பூன்
- வெந்தயம் -2 டீ.ஸ்பூன்
குழந்தைகளுக்கான கருப்பு உளுந்து களி
ulundhu kali recipe
செய்முறை
1.கருப்பு உளுந்தினை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
2.அரிசியினை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
3.வெந்தயத்தினை வறுக்கவும்.
4.மூன்றையும் ஆறவிடவும்.
5.மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
6. நைஸாக அரைக்கவும்.
குறிப்பு :தேவைப்பட்டால் சலித்துக் கொள்ளவும்.
7.இந்த பவுடரை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து 2 முதல் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
கருப்பு உளுந்து அரிசி கஞ்சி செய்வது எப்படி ?
1.ஒரு பவுலில் 2 டேபிள்ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
2.ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
3.மிதமான தீயில் அடுப்பில் வைத்து களி பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறவும்.
4.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
ulundhu kali recipe
கருப்பு உளுந்து களியினை ஆறு மாதம் முதல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.மேலு ம் இதில் நார்ச்சத்துக்கள்,பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் சீரான இரத்த ஓட்டத்திற்கும் உதவுகின்றது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான கருப்பு உளுந்து களி
Ingredients
- 4 டே.ஸ்பூன் கருப்பு உளுந்து
- 2 டே.ஸ்பூன் அரிசி
- 2 டீ.ஸ்பூன் வெந்தயம்
Notes
- கருப்பு உளுந்தினை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
- அரிசியினை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
- வெந்தயத்தினை வறுக்கவும்.
- மூன்றையும் ஆறவிடவும்.
- மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
- நைஸாக அரைக்கவும்.
- தேவைப்பட்டால் சலித்துக் கொள்ளவும்.
- இந்த பவுடரை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து 2 முதல் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
- ஒரு பவுலில் 2 டேபிள்ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
- மிதமான தீயில் அடுப்பில் வைத்து களி பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறவும்.
- குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
Leave a Reply