Urulaikilangu Recipe for Babies in Tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலமென்பது திட உணவு அளிப்பதற்கு சரியான தருணம்.குழந்தைகளுக்கு ஆப்பிள் கூழ்,பருப்பு சாதம்,பால் சாதம்,நெய் சாதம் என பார்த்து பார்த்து அக்கறையுடன் ஊட்டுவோம்.இந்த பட்டியலில் சேர்க்கவேண்டிய மற்றுமொரு ரெசிபிதான் உருளைக்கிழங்கு மசியல்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆம் ! குழந்தைகளுக்கு ஆறு மாத காலக்கட்டத்திலிருந்தே கொடுக்கக்கூடிய உருளைக்கிழங்கு எண்ணற்ற நன்மைகளை கொண்டது. அதோடுமட்டுமல்ல உடலுக்கு ஊட்டமளிக்கும் உருளைக்கிழங்கு பல சுவாரசிய தகவல்களையும் உள்ளடக்கியது.ஆம்.உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது.
ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கின் பூர்வீகம் தென் அமெரிக்காவாகும்.இன்று நம் நாட்டிலும் அனைவரும் விரும்பி உண்ணும் கிழங்காக உள்ளது.எளிதில் செரிமானம் ஆகக்கூடியதால் குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுக்க ஏற்றது.
Urulaikilangu Recipe for Babies in Tamil:
தேவையானவை
- உருளை கிழங்கு
- சீரகத்தூள்-இம்மியளவு.
குழந்தைகளுக்கான உருளைக்கிழங்கு மசியல்
செய்முறை
1.உருளைக்கிழங்கின் தோலை நீக்கவும்.
2.சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3. மிதமான தீயில் 3-4 விசில் வரும்வரை காத்திருக்கவும்.
4.சிறிது நேரம் ஆறவிடவும்.
5.நன்கு மசிக்கவும்.
6.சீரகத்தூளினை தூவவும்.
7.உருளைக்கிழங்கு மசியல் தயார்.
ரெசிபி மிகவும் எளிதாக உள்ளதல்லவா.இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமானம் சீராக இருக்கும்.குழந்தைகளுக்கு மலசிக்கல் அண்டாது,அமினோ அமிலங்கள்,ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை அதிகமாக இருப்பதால் மூளையினை சுறுசுறுப்பாக இயங்க செய்கின்றது.
இதிலுள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்கின்றது. இவ்வளவு நன்மைகள் உள்ள உருளைக்கிழங்கின் சிறு குறைபாடு என்னவென்றால் இது வாயுத்தொல்லையினை ஏற்படுத்தும்.அதனால் தான் நன்மை இங்கு சீரகதூளினை சேர்த்துள்ளேன்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply