Vegetable Milk Recipe: பல ஆண்டுகளாக தொன்று தொட்டு பசும் பாலினை பருகுவது தான் நம் வழக்கமாக இருந்து வருகின்றது. பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் டீ, காபி போன்றவற்றை காலை எழுந்தவுடன் குடிப்பதுதான் நம் வீடுகளில் வழக்கம். ஆனால் பசும்பால் என்பது விலங்குகளிடமிருந்து பெறக்கூடிய பாலாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சில பேருக்கு பசும்பால் ஒவ்வாமை இருப்பதால் பசும்பால் அருந்த மாட்டார்கள். மேலும் தற்பொழுது பெருகிவரும் விழிப்புணர்ச்சியின் காரணமாக தாவரம் சார்ந்த பொருட்களை உண்ண வேண்டும், பசுவிலிருந்து கிடைக்கக்கூடும் பாலை கூட அருந்தக்கூடாது என்று சிலர் விரும்புகின்றனர்.
உடலுக்கு தேவையான கால்சியத்தில் பெரும்பாலான அளவு நமக்கு பாலில் இருந்து கிடைக்கின்றது. எனவேதான் மருத்துவர்களும் பாலில் உள்ள கால்சியம் காரணமாக அதை உட்கொள்ள நமக்கு பரிந்துரைக்கின்றனர். அப்படி பசும்பாலை குடிப்பதை நிறுத்தி விட்டால் அதற்கு பதிலாக கால்சியம் என்பது நம் உடலுக்கு எப்படி கிடைக்கும் என்று கேள்வி நம்மில் தோன்றும்.
அதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் பிளான்ட் பேஸ்டு மில்க் எனப்படும் தாவரப்பால். அதாவது தாவரங்கள் மற்றும் நட்ஸ்களில் இருந்து கிடைக்கும் பாலின் மூலம் பசும்பாலில் இருந்து பெறக்கூடிய கால்சியம் மட்டுமல்லாமல் பிற வகையான சத்துக்களையும் சேர்ந்து நாம் பெறலாம். இன்னும் சொல்லப்போனால் அதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொள்ளலாம்.
அதை தயாரிப்பது எப்படி மற்றும் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன என்ற சந்தேகம் உங்களில் இருந்தால் இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் வீட்டில் தாவர பாலை நாம் தயாரித்துக் கொள்வதன் மூலம் பிரசர்வேட்டிஸ்,கெமிக்கல்ஸ் ஆகியவை இல்லாமல் இயற்கையாகவே தயாரித்துக் கொள்ளலாம்.
தாவரங்களின் மூலம் கிடைக்கக்கூடிய பாலினை நாம் சோயா, தேங்காய், பாதாம், முந்திரி,கடலைப்பருப்பு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றிலிருந்து எளிதாக தயாரிக்கலாம். இதில் பாலில் காணப்படும் லாக்டோஸ் எனப்படும் நொதி காணப்படாது. எனவே லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் இந்த தாவர பாலினை பருகலாம். பாலை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்பதற்கு முன்னால் பாலில் உள்ள நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
Vegetable Milk Recipe:
Vegetable Milk Recipe:
சோயா பால்
- சோயாபாலில் இயற்கையாகவே புரோட்டின் மிகவும் அதிகம். எனவே நாம் வழக்கமாக அருந்தும் பசும்பாலுக்கு பதிலாக சோயாபாலினை பயன்படுத்தலாம்.
- மேலும் இதில் அமினோ அமினங்கள் நிறைந்துள்ளதால் தசை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- மேலும் சோயாவானது கொலஸ்ட்ராலை குறைவாகக் கொண்டிருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
தேங்காய் பால்
- உடலுக்கு தேவையான எனர்ஜியை எனர்ஜியை அள்ளி வழங்குவதில் தேங்காய்பால் முதலிடம் வகிக்கின்றது.
- தேங்காய் பாலில் இருக்கும் அமிலமானது ஆன்ட்டி வைரஸ் மற்றும் ஆன்ட்டி பாக்டரியல் எதிர்ப்புபண்புகளை கொண்டிருப்பதால் நுண்ணுயிர்களை எதிர்த்து போராடுகின்றது
- நல்ல கொழுப்பினை அதிகரித்து உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது.
கடலைப்பருப்பு பால் (பீனட் பால்)
- கடலை பருப்பானது ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- பீனட் பாலில் நல்ல கொழுப்புகள் நிறைந்திருப்பதால் கெட்ட கொழுப்புகளை அண்டாமல் தடுக்கிறது. எனவே இதயத்திற்கு நன்மை அளிக்கின்றது.
பாதாம் பால்
- கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும்; உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும்; அதே சமயம் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பாதாம் பால் சரியான தீர்வாக இருக்கும்.
- இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் தோலிற்கு நன்மை பயக்கக் கூடியது.
- மேலும் பசும்பாலில் இருப்பதை விட பல மடங்கு அதிகமான கால்சியம் இதில் இருப்பதால் எலும்புகளுக்கும் நன்மை பயக்கக் கூடியது.
ஓட்ஸ் மில்க்
- ஓட்ஸில் இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கக் கூடியது.
- மேலும் இதில் பீட்டா குளுகன் எனப்படும் பொருள் இருப்பதால் உடலில் கொழுப்பு சத்தினை கட்டுக்குள் வைக்கக் கூடியது.
- இத்தகைய நன்மைகள் நிறைந்த தாவர பாலினை சிறிது மெனக்கெடுத்தாலே வீட்டில் எளிதாக செய்யலாம்.
பாதாம் அல்லது முந்திரிப்பால்
தேவையானவை
- பாதாம் அல்லது முந்திரி-ஒரு கப்
- தண்ணீர்-3 கப்
செய்முறை
- ஒரு கப் முந்திரி அல்லது பாதாமை தண்ணீரில் குறைந்தது நாலு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பாதாம் பாலை தயாரிக்க வேண்டும் என நினைத்தால் ஊறியவுடன் பாதாமின் தோலை நீக்கவும்.
- மிக்சியில் ஊறவைத்த பாதாம் முந்திரியுடன் மூன்று கப் தண்ணீரை சேர்க்கவும்.
- ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு நைசாக அரைக்கவும். நன்றாக வடிகட்டவும்.
- பால் முழுதும் வெளிவர திரும்பவும் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து நன்கு வடிகட்டிக் கொள்ளலாம்.
- இதனுடன் இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
கடலைப்பருப்பு பால் பீனட் மில்க்
தேவையானவை
- கடலைப்பருப்பு -1 கப்
- தண்ணீர்- 2 கப்
செய்முறை
- ஒரு கப் கடலை பருப்புடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- ஊற வைத்த கடலை பருப்பு நன்றாக தண்ணீரில் தோல் நீங்குமாறு கழுவவும்.
- மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலை பருப்புடன் ரெண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து எடுக்கவும்.
சோயா பால்
தேவையானவை
- சோயா பீன்ஸ்- 1 கப்
- தண்ணீர்- இரண்டரை கப்
செய்முறை
- சோயாவினை இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நாலு மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் சோயா பருப்பின் தோலை நீக்கவும்.
- கையில் வைத்து உரசினால் தோல் தனியாக வந்து விடும்.
- தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்கு அரைத்து பாலை மட்டும் தனியாக பிழிந்து எடுக்கவும்.
ஓட்ஸ் பால்
தேவையானவை
- ஓட்ஸ் – 1 கப்
- தண்ணீர் -3.5 கப்
செய்முறை
- ஒரு கப் ஓட்சினை தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைக்கும் போது அதனுடன் ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் சேர்த்துக் கொண்டு அரைத்து எடுக்கவும்.
- ஐஸ் வாட்டர் சேர்க்காமல் சாதாரணமாக அரைத்தால் ஓட்ஸ் ஆனது கூழ் போல் மாறிவிடும். அதன் பாலை தனியாக பிரித்து எடுக்க முடியாது எனவேதான் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து அரைக்கிறோம்.
தேங்காய் பால்
- துருவிய தேங்காய்- 1 கப்
- தண்ணீர் -1 கப்
செய்முறை
- ஒரு கப் துருவிய தேங்காவை மிக்ஸியில் அரைத்து முதலில் பால் எடுத்துக் கொள்ளவும்.
- எஞ்சிய தேங்காயுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து பிழிந்து மீதமுள்ள பாலினையும் எடுத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள சக்கையினை நீங்கள் சப்பாத்தி தயாரிக்கும் பொழுது அல்லது சட்னியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
மேலே சொன்ன ஐந்து வகையான தாவர பாலினை நீங்கள் பசும்பாலுக்கு பதிலாக அருந்திக் கொள்ளலாம். சாதாரணமாக பசும்பால் அருந்துபவர்கள் கூட வார ஒருமுறை இதில் ஏதாவது ஒரு பாலினை செய்து அருந்தினால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சோயாபாலின் நன்மைகள் என்னென்ன?
சோயாபாலில் புரோட்டீன் அதிகம். எனவே பசும்பால்க்கு பதிலாக இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
பசும்பாலுக்கு பதிலாக தாவர பாலினை அருந்தினால் தேவையான சத்துக்கள் கிடைக்குமா?
பசும்பாலில் கால்சியம் சத்துக்கள் மட்டுமே நிறைந்துள்ளது.ஆனால் தாவர பாலில் கால்சியம் சத்துடன் இணைந்து உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்களும் கிடைக்கும் எனவே பசும்பாலுக்கு பதிலாக நீங்கள் மேலே சொன்ன தாவர பால் ஏதாவது ஒன்றை தினமும் ஒரு முறை செய்து கொடுக்க உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
Leave a Reply