4 Fruit Yogurt Recipe for Babies in Tamil: குழந்தைகளுக்கு பழங்கள் கொடுத்து பழக்கிய ஆறு மாத காலத்திற்கு பின் தயிருடன் கலந்து இந்த ரெசிபியினை கொடுக்கலாம். பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு வயது வரை பசும்பால் கொடுக்க கூடாது.பசும்பாலில் உள்ள புரதங்களை செரிப்பதற்கு குழந்தைகளுக்கு கடினமாக இருக்கும்.ஆனால் தயிர் அப்படியல்ல… உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியது தயிர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எலும்புகளுக்கு வலுவளிக்கும் கால்சியத்தினை அளிக்க கூடியது.உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அளிக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வல்லது.அதுமட்டுமல்லாமல் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே 91% தயிர் ஜீரணமாகிவிடும். குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திலிருந்து இந்த ரெசிபியினை கொடுக்கலாம்.கோடை காலத்தில் அளிப்பது குழந்தைகளின் உடலினை குளிர்ச்சியாக வைக்கும்.
குழந்தைகளுக்கான 4 வகையான தயிர் பழக்கலவை ரெசிபி
4 Fruit Yogurt Recipe for Babies in Tamil
மாம்பழம் தயிர் ரெசிபி
- மாம்பழம்
- தயிர்
செய்முறை
1.மாம்பழத்தை மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
2.பவுலில் ஊற்றவும்.
3.தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வாழைப்பழம் தயிர் ரெசிபி
- வாழைப்பழம்
- தயிர்
செய்முறை
1. வாழைப்பழத்தை கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.
2.தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பைன் ஆப்பிள் தயிர் ரெசிபி
- பைன் ஆப்பிள்
- தயிர்
செய்முறை
1.பைன் ஆப்பிளை மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
2.பவுலில் ஊற்றவும்.
3.தயிர் சேர்த்து கலக்கவும்.
திராட்சை தயிர் ரெசிபி
- திராட்சை
- தயிர்
செய்முறை
1.திராட்சை பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி மிக்சியில் அரைக்கவும்.
2.பவுலில் ஊற்றவும்.
3.தயிர் சேர்த்து கலக்கவும்.
குழந்தைகளுக்கு பாக்கெட் தயிரினை பயன்படுத்துவதை காட்டிலும் பசும் பால் தயிரினை கொடுப்பது நல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply