6 maatha kulanthaiklaukkana sadham:குழந்தைகளுக்கு ஆறு மாதம் தொடங்கி விட்டால் அவர்களுக்கு சத்தான திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.முதலில் எளிமையான உணவு வகைகளான காய்கறி மற்றும் பழக்கூழ் ஆகியவற்றை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.பின்பு படிப்படியாக சாதம்,கிச்சடி போன்றவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம்.நாம் கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாக,குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க வல்லதாக இருக்க வேண்டியது அவசியம்.அதற்கான ரெசிபிதான் தயிர் ஓட்ஸ் கிச்சடி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதில் கலந்துள்ள ஓட்ஸ்,தயிர் மற்றும் கேரட் மூன்றுமே ஆரோக்கியமானவை.எளிதில் செரிமான ஆகக்கூடிய நார்ச்சத்துக்கள்,கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டின் நிறைந்தது ஓட்ஸ்.குழந்தைகளுக்கு தேவையான எனெர்ஜியை அளிக்க வல்லது.தயிரில் உள்ள கால்சியம் சத்துக்கள் குழந்தைகளின் எலும்புகளுக்கு பலமளிக்கக்கூடியது.கேரட்டில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் கண்களுக்கு தேவையான சத்துக்களை அளிக்க வல்லது.
குழந்தைகளுக்கான தயிர் ஓட்ஸ் கிச்சடி
- தயிர்- 4 டே.ஸ்பூன்
- ஆர்கானிக் ஓட்ஸ் பவுடர்- 2 டே .ஸ்பூன்
- துருவிய கேரட்- 1 டே.ஸ்பூன்
- நெய்- 1 டே.ஸ்பூன்.
6 Maatha Kulanthaiklaukkana Sadham
செய்முறை
1.பானில் 1.5 கப் தண்ணீர் சேர்க்கவும்.
2.ஓட்மீல் பவுடரை சேர்க்கவும்.
3.கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.
4.மிதமான தீயில் கெட்டியாகும் வரை சமைக்கவும்.
5.கலவையை ஓரமாக வைக்கவும்.
6.பாத்திரத்தில் நெய் சேர்க்கவும்.
7.சீரகம் சேர்க்கவும்.
8.சீரகம் பொரிந்ததும் துருவிய கேரட் சேர்க்கவும்.
9. 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
10.ஓட்ஸ் கலவையுடன் தயிர் சேர்க்கவும்.
11.துருவிய கேரட் சேர்க்கவும்.
12.நன்கு கிளறவும்.
13.சுவையான தயிர் ஓட்ஸ் கிச்சடி ரெடி.
குழந்தைகளுக்கு தயிர்,ஓட்ஸ் மற்றும் கேரட்டை தனி தனியாக அறிமுகப்படுத்திய பின்பு இந்த கிச்சடியை கொடுக்கலாம்.இந்த சத்தான கிச்சடியை நீங்களும் குழந்தைகளுக்கு கொடுங்க.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply