6 Months Baby Food in Tamil: ஆறு மாத குழந்தைக்கு ஒவ்வொரு உணவாய் பார்த்து பார்த்து சமைத்து தருவதே அம்மாக்களுக்கு தனி சுகம் தான்! மழலையின் சுவை மொட்டுக்கள் உணவினை ரசித்து சுவைக்கும் போது நம் மனதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.அம்மாவின் எண்ணம் முழுவதும் குழந்தை இந்த உணவை கொடுத்தால் சாப்பிடுமா? அந்த உணவை கொடுத்தால் சாப்பிடுமா? என்பதிலேயே இருக்கும். குழந்தைக்கு பொதுவாக ஆப்பிள் கூழ், கேரட் கூழ், பருப்பு சாதம் ஆகியவற்றையே நாம் முதல் உணவாக கொடுப்பது வழக்கம். பேரிக்காய் கூழினை நாம் கொடுத்திருக்க மாட்டோம். ஆனால் நாம் கொடுக்கும் மற்ற பழக்கூழ்களை காட்டிலும் பல மடங்கு சத்துக்கள் நிறைந்தது தான் இந்த பேரிக்காய். ஆப்பிள் கூழினை போன்றே இதை மிகவும் எளிதாக செய்து கொடுக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
6 Months Baby Food in Tamil:
- பேரிக்காய் -1
- லவங்கப்பட்டைத்தூள் -இம்மியளவு
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான பால் சாதம்
குழந்தைகளுக்கான பேரிக்காய் கூழ்
செய்முறை
1.பேரிக்காயின் தோலினை சீவி நடுவில் உள்ள பாகத்தை நீக்கவும்.
2.சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3.குக்கரில் தண்ணீர் ஊற்றி பேரிக்காய் கிண்ணத்தினை வைத்து மூடியால் மூடவும். 2-3 விசில் வரும்வரை காத்திருக்கவும்.
4.பேரிக்காயினை நன்கு மசிக்கவும்.
5.லவங்கத்தூளினை சேர்க்கவும்.
6.நன்கு கலக்கவும்.
7.பேரிக்காய் கூழ் ரெடி.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்
வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை பேரிக்காயில் நிறைந்துள்ளன.பேரிக்காய் குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றது. மேலும் இது உடல் சூட்டைத் தணிக்க வல்லது. நரம்புகளை புத்துணர்வடைய செய்து உடலை வலுப்பெறச்செய்யும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply