Kothamalli Thayir Sadam for Babies: 6 மாத குழந்தைகளுக்கான சத்தான சாதம்.தயிர்,துவரம் பருப்பு மற்றும் கொத்தமல்லியின் நற்குணங்கள் நிறைந்தது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நாம் குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்கும் பொழுது என்னவெல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்தாலும் நம் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது சாத வகைகள்.பருப்பு சாதம்,நெய் சாதம்,காய்கறி சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கும் சாத வகைகள்.ஆனால் இவற்றையே அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அலுத்து போகும் அல்லவா? அப்படியானால் இந்த கொத்தமல்லி தயிர் சாதத்தை கொடுத்து பாருங்கள்.இதில் கலந்துள்ள துவரம் பருப்பு , கொத்தமல்லி மற்றும் தயிர் ஆகிய மூன்றும் குழந்தைகளுக்கு எண்ணற்ற நன்மைகள் பயப்பன.இவையெல்லாம் கலந்த சத்தான மற்றும் சுவையான சாதத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
Kothamalli Thayir Sadam :
தேவையானவை
- அரிசி – 2 டே.ஸ்பூன்
- துவரம் பருப்பு – 1 டே.ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்-1 டே.ஸ்பூன்
- தயிர் – 4 டே.ஸ்பூன்
- நெய் – ½ டீ.ஸ்பூன்
- சீரகத்தூள் – ½ டீ.ஸ்பூன்
- பெருங்காயம் – இம்மியளவு (தேவைப்பட்டால்)
இதையும் படிங்க: குடற்புழுவிற்கான வீட்டு வைத்தியம்
செய்முறை
1. அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக பவுலில் எடுத்து கொள்ளவும்.
2.நன்றாக கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. குக்கரை சூடாக்கி நெய் சேர்க்கவும்.
4.அரிசி மற்றும் பருப்பு சேர்த்து சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
5.அதனுடன் கொத்தமல்லி, சீரகத்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
6.1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
7. 3-4 விசில் விடவும்.
8.சிறிது ஆற விடவும்.
9.4 டே.ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு மசிக்கவும்.
10.இதமாக பரிமாறவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான பச்சைப்பயிறு மசியல்
வீட்டிலேயே செய்யப்பட்ட பசும்பால் தயிரை உபயோகிப்பது நல்லது.உடல் உறுப்புகள் சீராக இயங்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது.
- உடல் உறுப்புகள் சீராக இயங்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது.துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
- தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நன்மை அளிக்கக்கூடியது.
- கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன
காரம் இல்லாமல் சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.நீங்களும் உங்க செல்ல குழந்தைக்ளுக்கு செய்து கொடுங்கள்.
Leave a Reply