Fever Home remedies in Tamil: குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் நமக்கு என்ன செய்வதென்றே தெரியாது.மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க என்ன செய்வதென்று தடுமாறுவோம்.லேசான காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் உடல் வெப்பநிலை அதிகமாகாமல் பார்த்து கொள்ளலாம்.அதற்கு முன் காய்ச்சல் வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- குழந்தைகள் உள்ள வீட்டில் தெர்மோ மீட்டர் வைத்திருப்பது நலம். குழந்தைகளின் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போல் உணர்ந்தால் உடனடியாக தெர்மோ மீட்டர் கொண்டு அளவிடுவது அவசியம்.
- காய்ச்சல் 100 டிகிரி செல்சியசிற்கு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- குழந்தைகளை மெல்லிய பருத்தியாடை அணியும்படி செய்வது நலம்.உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்காமல் இது தடுக்கும்.
- ஏ.சி அறையில் உறங்க வைக்காமல் ஃபேனிற்கு கீழ் உறங்கவைப்பதே நலம்.
Fever Home remedies in Tamil:
1.ஈரத்துணி வைத்தியம்
இது நம் வீடுகளில் செய்யும் வழக்கமான வைத்தியம் தான்.உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.வெது வெதுப்பான நீரில் சிறிது பருத்தி துணியை நனைக்க வேண்டும்.தண்ணீரை பிழிந்து துணியினை நெற்றி பகுதியில் சிறிது வைக்க வேண்டும்.குழந்தைகளின் உடலிலும் துடைத்து எடுக்கலாம்.நீர் குளிர்ந்த நீராக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டுமென்றால் இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.
2.நீர்ச்சத்து அவசியம்
அதிகப்படியான வெப்பநிலையால் நீர்ச்சத்து குறைந்து சருமத்தில் வறட்சி ஏற்படக்கூடும்.குழந்தைகளை தண்ணீர் அதிக அளவில் பருக வைப்பது நல்லது.ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தை என்றால் அடிக்கடிதாய்ப்பால் தர வேண்டும்.ஆறு மாத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் பழச்சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்.தண்ணீர் கொதித்து ஆறவைத்த தண்ணீராக இருப்பது நல்லது.
3.வெங்காயம்
உடலின் வெப்பநிலை குறைக்க வெங்காயம் பெரிது உதவும்.வெங்காயத்தை வட்டமான பெரிய துண்டுகளாக நறுக்கி குழந்தையின் பாதத்தில் நன்றாக 2 நிமிடம் தேய்க்க வெப்பநிலை குறையும்.ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்யலாம்.
4.துளசி தண்ணீர்
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தவுடன் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடலாம்.ஆறியவுடன் சிறிது சிறிதாக அந்த தண்ணீரை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சல் நன்கு குணமாகும் வரை துளசி தண்ணீரை கொடுக்கலாம்.
5.எலுமிச்சை,இஞ்சி மற்றும் தேன்
இந்த வைத்தியத்தினை 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பின்பற்றலாம்.1 டே.ஸ்பூன் எலுமிச்சை சாறை தண்ணீர் கலக்காமல் எடுத்து கொள்ளவும். இதனுடன் 1 டே.ஸ்பூன் தேன் மற்றும் 4 சொட்டு இஞ்சி சாறு சேர்க்கவும்.காலை,மாலை இரு வேளை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
6.மல்லி கஷாயம்
இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 டே.ஸ்பூன் மல்லித்தூளை சேர்க்கவும்.ஒரு டம்ளர் அளவிற்கு வற்றும் வரை நன்றாக காய்ச்சவும்.இதனுடன் கருப்பட்டி சேர்த்து இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
7.உலர் திராட்சை
அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும் திராட்சை மிருதுவாகிவிடும். இதனை அரைத்து பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து காலை,மாலை இரு வேளை கொடுக்கலாம்.
8.நல்ல ஓய்வு
காய்ச்சலின் பொழுது கஞ்சி போன்ற எளிமையான உணவினை உட்கொள்வதும் ஓய்வும் மிக மிக அவசியம்.உடலின் வெள்ளையணுக்களானது நோய் கிருமிகளை அளிக்கும் வேலை செய்து கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் உடலுக்கு ஓய்வளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
- குழந்தைகளின் உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகள் நுழையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது எதிர்த்து போராடும் நிகழ்வே காய்ச்சல் ஆகும்.
- காய்ச்சலின் பொழுது வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உபாதைகள் இருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நலம்.
- காய்ச்சலின் பொழுது குழந்தைகளை குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க கூடாது.வெது வெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வைக்க வேண்டும்.
- 1 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என்றால் டவலை வெது வெதுப்பான நீரில் நனைத்து துடைத்து எடுப்பதே நலம்.
குழந்தைகளுக்கான தெர்மோ மேட்டரை உபயோகிக்கும் பொழுது பாதரசம் உபயோகிக்காத தெர்மோமீட்டரை பயப்படுத்துவது நல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply