Paneer Gravy for Babies: குழந்தைகள் சுவைத்து சாப்பிட கூடிய ஆரோக்கியமான,டேஸ்டியான பன்னீர் பெப்பர் கிரேவி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பன்னீர் என்றாலே அலாதி பிரியம் தான். பொதுவாக பன்னீர் என்றாலே ஹோட்டலில் சாப்பிடக்கூடிய பன்னீர் ரெசிபி தான் சட்டென்று நம் நினைவிற்கு வரும்.
ஆனால் ரெஸ்டாரன்ட் சுவையில் டேஸ்டியான பன்னீரை அதேசமயம் ஆரோக்கியத்திற்கும் சற்றும் குறைவில்லாமல் குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செய்யலாம் என்பதை இப்பொழுது நாம் காணலாம்.
இதில் பால்,முந்திரி ஆகியவை சேர்த்துள்ளதால் குழந்தைகள் ரசித்து ருசித்து உண்பர். மேலும்,குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு மசாலாப் பொருட்கள் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆவதோடுமட்டுமல்லாமல் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வல்லது.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் பன்னீர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்:
- பொதுவாக அசைவ உணவில் புரோட்டின் அதிகம் என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கு இணையான புரோட்டின் பன்னீரில் அதிகமாக உள்ளது.
- மேலும் இதில் அமினோ அமிலங்கள் உள்ளதால் உடலுக்கு நன்மை அளிக்கின்றது.
- புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமாக தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பன்னீரில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமை தரக்கூடியது.
- இதில் வைட்டமின் பி 12 எனப்படும் சத்து நிறைந்துள்ளதால் மூளைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் பன்னீருடன் இஞ்சி, மிளகுத்தூள் மற்றும் சீரகம் போன்றவை சேர்த்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவாக இது அமையும்.
Paneer Gravy for Babies
Paneer Gravy for Babies
- பன்னீர்-150 கிராம்
- பால் – ½ கப்
- எண்ணெய்- 1 டே. ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- வெங்காயம் -1 (நறுக்கியது)
- முந்திரிப் பருப்பு -கால் கப்
- பூண்டு- 2 பல்
- இஞ்சி -1/2 இன்ச்
- மிளகுத் தூள் 2 டீ.ஸ்பூன்
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
- சீரகம்- ஒரு டீ.ஸ்பூன்
- கரம் மசாலா -1/2 டீ.ஸ்பூன்
Paneer Gravy for Babies
Paneer Gravy for Babies
செய்முறை
1.முந்திரிப்பருப்பை சூடான தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2.ஊற வைத்த முந்திரி பருப்புடன்,வெங்காயம்,பூண்டு இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
4.சீரகத்தினை போட்டு பொரியவிடவும்.
5.அதனுடன் அரைத்து வைத்த முந்திரி விழுது சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
6.பச்சை வாசனை போகும் அளவிற்கு 5 நிமிடங்களுக்கு தொடர்ந்து கிளறவும்.
7.மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து 30 வினாடிகளுக்கு வதக்கவும்.
8.தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
9.பன்னீர் சேர்க்கவும்.
10.பால் மற்றும் கரம் மசாலா பவுடர் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
11.சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
இந்த பன்னீர் கறியானது ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது. குழந்தைகளுக்கு முதல் முதலாக கொடுக்கும்பொழுது மிளகு தூள் சிறிதளவு சேர்த்து குழந்தைகளுக்கு காரம் ஏற்றுக் கொள்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் மிளகானது குழந்தைகளுக்கு சளி இருமல் ஆகியவை அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த சுவையான பன்னீரினை நான் மற்றும் சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Paneer Gravy for Babies
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Paneer Gravy for Babies
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பன்னீரை குழந்தைகளுக்கு எந்த மாதத்தில் இருந்து கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்திய பின்பு எட்டு மாதத்திற்கு மேல் பன்னீரை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பன்னீர் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுமா?
சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே பால் சார்ந்த பொருட்களின் மீது ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு பன்னீரை உட்கொள்வதே சிறந்தது.
பன்னீர் சாப்பிடுவதால் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்குமா?
குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க பன்னீர் உதவுகின்றது.
குழந்தைகளுக்கான பன்னீர் பெப்பர் கிரேவி
Ingredients
- 150 கிராம் பன்னீர்
- ½ கப் பால்
- 1 டே.ஸ்பூன் எண்ணெய்
- தேவையானஅளவு உப்பு
- 1 வெங்காயம்
- ¼ கப் முந்திரிப் பருப்பு
- 2 பல் பூண்டு
- ½ இன்ச் இஞ்சி
- 2 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
- ¼ டீ.ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 டீ.ஸ்பூன் சீரகம்
- 1 டீ.ஸ்பூன் கரம் மசாலா
Notes
- முந்திரிப்பருப்பை சூடான தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- ஊற வைத்த முந்திரி பருப்புடன்,வெங்காயம்,பூண்டு இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- சீரகத்தினை போட்டு பொரியவிடவும் .
- அதனுடன் அரைத்து வைத்த முந்திரி விழுது சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
- பச்சை வாசனை போகும் அளவிற்கு 5 நிமிடங்களுக்கு தொடர்ந்து கிளறவும்.
- மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து 30 வினாடிகளுக்கு வதக்கவும்.
- தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- பன்னீர் சேர்க்கவும்.
- பால் மற்றும் கரம் மசாலா பவுடர் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
Leave a Reply