Arisi Pori Recipe in Tamil: அப்பொழுது முதல் இப்பொழுது வரை குழந்தைகளுக்கு பிடித்த சலிக்காத தின்பண்டம் என்றால் அது நிச்சயமாக அரிசி பொரி தான். குழந்தைகளுக்கும் சாப்பிட எளிது மற்றும் எளிதில் செரிமானமாகும்,வயிற்றுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்பதால் ஒரு எவர் கிரீன் ஸ்நாக்ஸ் ஆக இந்த அரிசி பொரி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல பண்டிகைகள் வரும்பொழுதும் கடவுளுக்கு எளிதாக படைத்து குழந்தைகளுக்கு விருப்பத்துடன் தரும் தின்பண்டமாகவும் இது இருந்து வருகின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Arisi Pori Recipe in Tamil:
Arisi Pori Recipe in Tamil:
இந்த சத்தான அரிசி பொரியை குழந்தைகளுக்கு அப்படியே தராமல் விதவிதமான பிளேவரில் ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆர்வத்துடன் விரும்பி உண்பார்கள். ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் பொரியில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்.
- அரிசியை போலவே இதிலும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கான ஆற்றலை தரவல்லது. பொதுவாவே குழந்தைகள் அங்குமிங்கும் ஆடி ஓடி திரியும் பொழுது குழந்தைகள் உடலில் உள்ள ஆற்றல் வீணாகும். அரிசி பொரியை நீங்கள் சிற்றுண்டியாக கொடுத்தால் அவர்களுக்கு நல்ல எனர்ஜியை தரும்.
- இதில் கலோரிகள் குறைவு. எனவே குழந்தைகளுக்கு சிற்றுண்டி தர வேண்டும் அதே நேரம் கலோரி குறைவாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அரிசி பொரி நல்ல தேர்வாக இருக்கும்.
- சில குழந்தைகளுக்கு உணவில் உள்ள க்ளோட்டின் என்னும் பொருள் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் பொரியில் அலர்ஜியினை ஏற்படுத்தும் எந்தவித காரணிகளும் இல்லை என்பதால் தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- பொதுவாகவே பொரியானது எளிதி9/ல் செரிமானம் ஆகக் கூடியது என்று நமக்கு தெரிந்த விஷயம் தான். எனவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- கலோரி குறைவாக இருந்தாலும் இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.
- வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
- இதில் கொழுப்பு சத்து குறைவு என்பதால் எளிமையான சிற்றுண்டியாக இருக்கும்.
ஒரே ஒரு அரிசி பொரியை வைத்து உங்களுக்கு பிடித்தமான பொருள்கள் பலவற்றை சேர்த்து விதவிதமான சுவையுடன் வித்தியாசமாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவுப் பொருளாகும்.
வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது எடுத்து செல்வதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும் அதே நேரம் சாப்பிடுவதற்கு விருப்பமான பொருளாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த பொரி நல்ல தீர்வாகும்.
எனவே இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த அரிசி பொரியை வைத்து எப்படி எளிதான சிற்றுண்டி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
Arisi Pori Recipe in Tamil
மஞ்சள் பொரி
- ஒரு கடாயில் அரை டீஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றவும்.
- 2-3 கருவேப்பிலை போட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- அதற்கு பின்னர் ஒரு கப் பொரியை சேர்த்து மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு கிளறி விடவும்.
மசாலா பொரி
- கடாயில் அரை டீஸ்பூன் நெய்யை ஊற்றவும்.
- அதில் அரை டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் ஓமத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்க்கவும்.
- அதற்கு பின்னால் ஒரு கப் பொரியை சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் வைத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விடவும். வடநாட்டில் செய்யக்கூடிய ஒரு வித்தியாசமான சிற்றுண்டி தான் இதுவாகும்.
கருவேப்பிலை பொரி
- ஒரு கடாயில் அரை டீஸ்பூன் நெய்யினை ஊற்றவும்.
- அதில் அரை டீஸ்பூன் கருவேப்பிலை பொடி சேர்க்கவும்.
- அதன் பின்னர் ஒரு கப் பொரி சேர்த்து கிளறி விடவும்.
- தேவைப்பட்டால் நெல்லிக்காய் பொடியையும் சேர்க்கலாம். மிதமான சூட்டில் ஐந்து மடங்கு ஏழு நிமிடங்களுக்கு கிளறி விடவும்.
நட்ஸ் பொரி
- கடாயில் அரை டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- ஒரு கப் பொரி சேர்த்து நன்றாக கிளறவும்.
- கால் டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் நட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு கிளறி விடவும்.
நீங்கள் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் பொழுது ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான சிற்றுண்டி வேண்டும் என நினைத்தால் இந்த விதவிதமான பொரி வகைகளை நீங்கள் செய்து ஸ்நாக்ஸ் பாக்ஸில் அடைத்து செல்லலாம். அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும் பொழுது வித்தியாசமான ஸ்நாக்ஸ் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு ஃப்ளேவரில் பொரியினை இந்த மாதிரி செய்து கொடுத்துவிட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாக இது அமையும்.
இவை அனைத்தும் வீட்டிலேயே எளிதே கிடைக்கும் பொருள் என்பதால் நீங்கள் மிகவும் மெனக்கிட தேவை இல்லை. சட்டென்று இரண்டு நிமிடத்தில் செய்து முடித்து விடலாம்.
Arisi Pori Recipe in Tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு அரிசி பொரி நல்லதா?
அரிசி பொரி குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற எளிதான உணவுப் பொருள் என்பதால் அதை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அரிசி பொரியில் குழந்தைகளுக்கான சத்துக்கள் உள்ளதா?
அரசு பொரியில் குழந்தைகளுக்கான கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. மேலும் இதனை கடலைப்பருப்பு, பொறிகடலை மற்றும் பாதாம், முந்திரி ஆகியவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இன்னும் ஆரோக்கியமானதாக இது மாறும்.
குழந்தைகளுக்கு எத்தனை மாதத்தில் இருந்து அரிசி பொரி கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்தவுடன் திடஉணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது பொரியினை கொடுக்கலாம். முதல் முதலாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அப்படியே கொடுக்காமல் குழந்தைகள் சப்பி சாப்பிடுகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு கொடுக்க ஆரம்பிக்கவும். அப்படி இல்லையென்றால் ஊற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Leave a Reply