Dates and Nuts Burfi: இதுவரை நாம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக கொடுக்கக்கூடிய காலை சிற்றுண்டிகள் தான் அதிகமாக பார்த்து வந்தோம். சிறு தானியங்கள் குழந்தைகளுக்கு சிறந்தது என்பதால் அவற்றை வைத்து குழந்தைகளுக்கு சுவையாக உணவினை எப்படி சமைத்து தருவது என்பது குறித்து பல ரெசிபிகளை நாம் பார்த்து விட்டோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதுவரை சிறுதானியங்களை சாப்பிடாத குழந்தைகளும் இப்பொழுது விரும்பி சாப்பிடுகின்றார்கள் என்று நீங்கள் பலரும் கூறி வருவதை கேட்டு மகிழ்ச்சி கொள்கின்றேன். உங்களுடைய இந்த அன்பு தான் மேலும் மேலும் உங்களுக்கு ஏதாவது சிறப்பான உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கின்றது.
மேலும் பெரும்பாலான அம்மாக்கள் குழந்தைகளுக்கு கடையில் வாங்கி தரும் ஸ்னாக்ஸ் அல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் குறித்து கேட்டு வருவதால் இந்த ரெசிபியினை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பேரிச்சை, கடலைப்பருப்பு சேர்த்து வேறு இனிப்புகள் சேர்க்காமல் செய்யக்கூடிய ரெசிபி ஆகும். குழந்தைகள் விரும்பி உண்பதற்கு ஏற்ப இயற்கையான கோகோ பவுடரும் இதில் சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு பிடித்த ரெசிபி ஆக இது இருக்கும்.
பேரிச்சையில் குழந்தைகள் செய்ய இரும்புச்சத்தும் கடலைப்பருப்பில் குழந்தைகள் தேவையான இரண்டும் சேர்வதால் மாலை நேரம் பள்ளி முடிந்து வந்த குழந்தைகளுக்கு இந்த ஆரோக்கியமான இனிப்பினை கொடுக்கலாம்.
Dates and Nuts Burfi:
இதை பார்ப்பதற்கு முன்னால் இந்த ரெசிபியில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- இதில் இயற்கையாக அடங்கியுள்ள இனிப்பு சுவை குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது. பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து அதிகம் என்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துகின்றது.
- மேலும் நார்சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாது.
பேரிச்சையில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளுக்கு வலிமை அளிக்கின்றது. - மேலும் இதில் ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கடலைப்பருப்பில் ப்ரோட்டீன் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் என்பதால் மூளை வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன.
- கடலைப்பருப்பில் இயற்கையாகவே வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் போலேட் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் எலும்புகள், நரம்புகள் மற்றும் செல்களுக்கு வலிமை அளிக்கக்கூடியது.
Dates and Nuts Burfi:
- பேரிச்சம்பழம்- 10 -12
- கடலைப்பருப்பு- 1 கிண்ணம்
- கோகோ பவுடர்- அரை கிண்ணம்
- நெய்- தேவையான அளவு
- உப்பு- 1 சிட்டிகை
Dates and Nuts Burfi:
செய்முறை
1.மிக்ஸி ஜாரில் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் கடலைப்பருப்பு கோகோ பவுடர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
2.சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3.இந்த கலவையினை பட்டர் சீட்டில் பரப்பவும். மேலே கடலை பருப்பினை பொடிப்பொடியாக நறுக்கி தூவவும்.
4.சிறிது நேரம் கழித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
5.கடைகளில் விற்கும் விதவிதமான சாக்லேட்டுகள், இனிப்புகள் ஆகியவற்றை கொடுப்பதை காட்டிலும் இவ்வாறு வீட்டிலேயே செய்த ஆரோக்கியமான இனிப்புகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுத்த திருப்தி நமக்கு ஏற்படும்.
இதனை மேலும் ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு எப்படி செய்து தரலாம் இதில் தேவைப்பட்டால் நீங்கள் சியா விதைகள், ஆளி விதைகள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான வேறு விதமான உலர் பருப்பு வகைகளான பாதாம், முந்திரி போன்றவற்றை சேர்ந்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Dates and Nuts Burfi:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இதில் இனிப்புகள் சேர்க்கலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் நாட்டு சக்கரை போன்ற இயற்கையான இனிப்புகளை சேர்த்து செய்து கொடுக்கலாம்.
வேறு எந்தெந்த உலர் பழங்கள் சேர்க்கலாம்?
உலர் திராட்சை, சூரியகாந்தி விதைகள், அத்திப்பழம், பூசணி விதைகள் ஆகியவற்றை சேர்த்தும் பர்பி செய்யலாம்.
எத்தனை நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்?
காற்று போகாத டப்பாவில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து 15 நாட்கள் வரை இதனை பத்திரப்படுத்தலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குளிர்ச்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Leave a Reply