Kalan Masiyal : கடந்த சில வாரங்களாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சத்தான சிறுதானிய வகைகளையும், குழந்தைகளுக்கான ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெசிபிகளையும் பார்த்து வந்தோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் குழந்தைகளுக்கு முதன்முதலாக கொடுக்கக்கூடிய உணவுகளை பற்றி பல கேள்விகள் அம்மாக்களிடம் இருந்து வருகின்றன.
ஏற்கனவே குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை கொடுக்கக்கூடிய தெளிவான உணவு அட்டவணை நம்மிடம் உள்ளது.
உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் எங்களிடம் கேட்டு அந்த உணவு அட்டவணைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இப்பொழுது குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் கொடுக்கக் கூடிய ஒரு வித்தியாசமான ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். அந்த ரெசிபி தான் ஆரோக்கியமான காளான் மசியல்.
குழந்தைகளுக்கு காளான் தரலாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு இருக்கும். அதற்கான பதில் தாராளமாக தரலாம் என்பதுதான்.
அப்படி என்றால் அதை எப்படி தர வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்காக தான் நாம் இன்று காளான் மசியல் ரெசிபியை பற்றி பார்க்க போகின்றோம். அந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் காளான் மசியலில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்.
Kalan Masiyal :

- காளானில் வைட்டமின்- பி நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- காளானில் நிறைந்துள்ள செலினியம், பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றது.
- இதில் நிறைந்துள்ள வைட்டமின் டி எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- காளானில் இயற்கையாகவே உள்ள பீட்டா க்ளுகான் எனப்படும் ஒரு வகையான நார்ச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இது நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் செல்கள் சிதைவிடாமல் தடுக்கின்றன.
- மேலும் நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- இது நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய திருப்தியை தரும்.
- குழந்தைகளின் மூளையானது சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இதில் உள்ள வைட்டமின்கள் உதவுகின்றன.
மேலும் நரம்புகளின் ஆரோக்கியமாக வளர்ச்சிக்கும் இவை துணை புரிகின்றன.
Kalan Masiyal :
- காளான்- அரை கப்
- வெங்காயம்- 1 (நறுக்கியது)
- பூண்டு – கால்
- நெய்- 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்
- சீரகத்தூள்
Kalan Masiyal :
செய்முறை
1.கடாயை சூடாக்கி நெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
2.காளான் சேர்த்து வதக்கவும்.
3.மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
4.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்கவும்.
5.ஆறியதும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
6.குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு முதல் குழந்தைகளுக்கு காளான் கொடுப்பது பாதுகாப்பானதா?உணவு கொடுக்க ஆரம்பித்ததும் சில வாரங்களுக்கு பின்பு இந்த காளான் மசியலை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
Kalan Masiyal :
Kalan Masiyal :
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Kalan Masiyal :
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு காளானை எப்பொழுது அறிமுகப்படுத்தலாம்?
குழந்தைகளுக்கு 6-8 மாதங்களுக்குள் காளானை அறிமுகப்படுத்தலாம். அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
தாராளமாக குழந்தைகளுக்கு காளான் கொடுக்கலாம். ஆனால் குழந்தையை சாப்பிடுவதற்கு ஏற்றவாறு நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எந்த காளான் தரலாம்?
கடைகளில் சாதாரணமாக விற்கப்படும் பட்டன் காளான் எனப்படும் காலா குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
காளான் செய்யும் பொழுது உப்பு சேர்க்கலாமா?
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை உப்பு சேர்க்க கூடாது என்பதால் காளான் மசியல் செய்யும் பொழுது உப்பு சேர்க்க வேண்டாம்.
குழந்தைகளுக்கான காளான் மசியல்
Ingredients
- காளான்- அரை கப்
- வெங்காயம்- 1 நறுக்கியது
- பூண்டு - கால்
- நெய்- 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்
- சீரகத்தூள்
Notes
காளான் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்.
Leave a Reply