ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு வகைகளை வீட்டிலேயே எப்படி செய்து தருவது என்பதை தான் முதல் குறிக்கோளாக வைத்து நான் உங்களுக்கான ரெசிபிகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றேன்.
மேலும் சிறுதானியங்கள் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால் அதை வைத்து சுவையாக எப்படி காலை உணவு செய்து கொடுக்கலாம் மற்றும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்பதை பற்றி பல ரெசிபிகளை நாம் இதுவரை பார்த்து வந்தோம்.
ஆனால் அவற்றை எல்லாம் தொடர்ந்து கொடுத்தால் நம் குட்டிகளுக்கு போர் அடித்து விடும் என்பதால் அவ்வப்போது இதேபோன்று பேக்கரி ஸ்டைலில் ஸ்நாக்ஸ்களையும் வீட்டில் செய்து கொடுத்தால் நாம் கொடுக்கும் மற்றவற்றையும் தவிர்க்காமல் வாங்கி சாப்பிடுவர்.
Konda Kadalai Cutlet:

வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கொண்டக்கடலையை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு எளிதான ஸ்னாக்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதை பார்ப்பதற்கு முன்னால் கொண்டைக்கடலையில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Konda Kadalai Cutlet:
- கொண்டைக்கடலையில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளின் தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- நார்ச்சத்து அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு உணவினை நன்கு செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.
- இரும்பு சத்து அதிகம் என்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தசோகை வராமல் தடுக்க கூடியது.
- கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் என்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- சிங்க் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் நிலையை பாதுகாக்கின்றது.
- குழந்தைகள் உடல் ஆற்றலுடன் இயங்க இதில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.
- இதில் போலேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- வயிறு நிரம்பிய திருப்தியை தருவதால் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை குழந்தைகள் தொட மாட்டார்கள்.
Konda Kadalai Cutlet:
- வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப்
- ரஸ்க் தூள்- கால் கப்
- துருவிய கேரட் -கால் கப்
- நறுக்கிய வெங்காயம்- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
Konda Kadalai Cutlet:
செய்முறை
- கொண்டைக்கடலையை ஒரு பவுலில் நன்றாக மசிக்கவும்.
- அதனுடன் தயாராக உள்ள கேரட், வெங்காயம், ரஸ்க் தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து மாவு போல் உருட்டவும்.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் போன்ற தட்டவும்.
- கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெடி.
வெளிப்புறம் நன்கு மொறுமொறுப்புடன் கடைகளில் விற்கும் கட்லெட் போன்றே இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
வெளியில் வாங்கிக் கொடுக்கும் பொழுது என்ன எண்ணையில் பொறுத்து எடுக்கிறார்களோ என்ற சந்தேகம் இருக்கும். மேலும் கட்லெட் செய்ய என்னென்ன பொருட்கள் உபயோகிக்கின்றார்களோ என்ற சந்தேகம் நம் மனதிற்குள் இருக்கும்.
இவ்வாறு வீட்டிலேயே செய்து கொடுக்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸினை செய்து கொடுத்த திருப்தி இருக்கும்.
இதனை பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக மட்டுமல்லாமல் டிபன் பாக்ஸில் சட்னியுடன் வைத்தோ அல்லது இரவு நேர உணவாகவோ செய்து கொடுக்கலாம்.
Konda Kadalai Cutlet:
குழந்தைகளுக்கு விருப்பமான சட்னியுடன் வைத்து சாப்பிடும்பொழுது ஒரு மினி டிபன் போன்ற இருக்கும் என்பதால் இதை உணவாகவும் செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இந்த கட்லட்டை கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதற்கு கடினம் என்பதால் ஒரு எதற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கக் கூடாது. மேலும் உப்பு சேர்த்துள்ளது என்பதால் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.
ரஸ்க் தூளிற்கு பதிலாக வேறு ஏதேனும் உபயோகிக்கலாமா?
ஓட்ஸ் பவுடர் அல்லது வறுத்த ரவை இரண்டையும் உபயோகிக்கலாம்.
எண்ணெயில் வறுப்பதற்கு பதிலாக பேக்கிங் செய்யலாமா?
180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு, இடையில் பிரட்டி விட்டு இதனை தாராளமாக பேக் செய்யலாம்.
கொண்டைக்கடலை கட்லட்
Ingredients
- வேகவைத்த கொண்டைக்கடலை -1 கப்
- ரஸ்க் தூள் -கால் கப்
- துருவிய கேரட் -கால் கப்
- நறுக்கிய வெங்காயம் -2 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய் -பொறிப்பதற்கு தேவையான அளவு
Notes
அதனுடன் தயாராக உள்ள கேரட், வெங்காயம், ரசகுத்தூள்,, சீரகத்த மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து மாவு போல் உருட்டவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் போன்ற தட்டவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெடி.
Leave a Reply