Home remedies for indigestion:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது நீங்கள் நிச்சயம் ஒரு டாக்டர் போலவோ நர்ஸ் போலவோ செயல்பட்டு கொண்டு இருப்பீர்கள்… காரணம் குழந்தைகளுக்கு அதிகமான அளவில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்த வண்ணம் இருக்கும். அதில் அதிக அளவில் அவர்கள் பாதிக்கப்படுவது வயிற்று வலி சார்ந்த உபாதைகளாக தான் இருக்கும். அதற்கு காரணம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்களின் வயிறு தான் முதலில் பாதிக்கப்படும் என்பது தான். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் போது கவனம் அதிகம் செலுத்த வேண்டும். இதற்கு தனியாக மருத்துவரை சந்தித்து அறிவுரை பெற வேண்டும் என்பதும் அவசியம். ஆனால் மற்ற வயிறு சார்ந்த பிரச்சினைகள் என்றால் அதிகம் பதற்றமடைய வேண்டாம் குழந்தைகளுக்கு வயிறு உபாதையாக இருக்குமே தவிர (அம்மாக்களுக்கும் தான்) இது வெறும் அஜீரணக் கோளாறு தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அஜீரணக் கோளாறு என்றால் என்ன ?
இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பேச வேண்டும் என்றால் குழந்தைகள் தங்கள் உணவை சாப்பிட்டு முடித்ததும் அவர்களின் வயிற்றில் ஏற்படும் உபாதைகள் தான் அஜீரணக் கோளாறை ஏற்படுத்துகிறது. இதை மருத்துவ மொழியில் சொல்வதென்றால் டிஸ்பெப்சியா எனலாம். அஜீரணக் கோளாறு என்பது ஒரு நோய் அல்ல. முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றாத போது தான் இது ஏற்படுகிறது. இதனை ஆரம்ப நிலையிலே நீங்கள் கண்டறியலாம்.
அஜீரணக் கோளாறு ஏற்படும் போது சில நேரங்களில் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் போன்று இருக்கலாம். சிலருக்கு இது ஏற்படாமல் கூட இருக்கும். இதற்கு காரணம் அவர்களின் வயிற்றில் சுரக்கும் அமிலமானது மேல் நோக்கி வருவது தான். வயிற்றின் உள்ளே இருக்கும் அமிலமானது மேல் நோக்கி வரும் போது நம் தசைகளை உராய்ந்து செல்லும். அது நெஞ்சுப் பகுதிக்கு வரும் போது தான் ஒரு விதமான எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த அஜீரணக் கோளாறு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக பச்சிளம் குழந்தைகளை இது தாக்கும். அதிலும் 4 மாதங்களுக்கு குறைவாக உள்ள குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு அதிமாக நெஞ்சு எரிச்சல் பிரச்சினை ஏற்படுமாம். குழந்தைகள் 12 மாதங்களை எட்டிய பிறகு இந்த பிரச்சினை படிப்படியாக குறையும். ஆனால் சில குழந்தைகள் பள்ளி செல்லும் வரை அஜீரணக் கோளாறால் அவதிப்படும் நிலையும் உள்ளது.
Home remedies for indigestion:
குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?
அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் சில காரணங்கள் மோசமான விளைவை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் பெரும்பாலானவை சாதாரண காரணங்களை கொண்டே உருவாகிறது.
* சரியாக வளர்ச்சியடையாத ஜீரண மண்டலம் (குழந்தைகளுக்கு)
* அதிக அளவிலான மசாலா பொருட்களால் ஏற்படும். குழந்தைக்கு அது பழக்கம் இல்லை என்றாலும் கூட
* போதிய தூக்கமின்மை. ஆழ்ந்து தூங்குவதற்கு நேரமில்லாததுடன், குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படலாம்.
* உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் புகை பிடிப்பதால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு
* மன அழுத்தம், குறிப்பாக சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை இது.
* உடல் எடை அதிகமாக இருத்தல்
* வேகமாக சாப்பிடுதல் மற்றும் தண்ணீர் குடித்தல், குறிப்பாக நடக்கும் பருவத்தில் உள்ள குழந்தைகள் ஓடிக் கொண்டே சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
* கார்பனேட் தன்மை அதிகம் கொண்ட பொருட்களை அதிகம் சாப்பிடுவது.
How to cure indigestion fast:
சிறுவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் :
குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டதற்கான அறிகுறிகள்
- முதுகை வளைத்தபடி இருப்பது, குறிப்பாக பால் குடிக்கும் நேரங்களில் இதுபோல் இருப்பது
- பால் குடிக்கும் போது அதில் நாட்டம் இல்லாமல் இருப்பது
- உணவை சரியாக சாப்பிட முடியாமல் இருப்பது
- விக்கல்
- தொண்டையில் அடைப்பு ஏற்படுதல்
- மூச்சு விடுவதில் சிரமம்.
Home remedies for indigestion:
சிறுவர்கள் மற்றும் நடக்கும் குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?
- அடி வயிறு மற்றும் மேல் வயிற்றில் ஏற்படும் வலி
- மேல் வயிறு அல்லது நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் தன்மை
- வயிறு எப்போதும் மந்தமாக இருப்பது போல் இருப்பது, உணவை சாப்பிட முடியாத நிலை
- குமட்டல் தன்மை அல்லது வாந்தி வருவது போல இருப்பது
- தொடர்ச்சியான விக்கல் மற்றும் ஏப்பம்
- தொடர்ந்து இருமிக் கொண்டு இருப்பது
அஜீரணக் கோளாறு என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு வலி அறிகுறியில் தான் இருக்கும். ஒருவேளை இதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை சந்தித்து விடுங்கள். ஒருவேளை அஜீரணக் கோளாறை நீங்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டால் அது உங்கள் குழந்தைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்துவதுடன் குழந்தையின் உடல் எடையை குறைக்கும். மேலும் குழந்தைகள் வளரும் போது அவர்களின் உடலில் சத்துகள் இழப்பு தன்மையை இது ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள்.
Home remedies for indigestion and gas:
குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறை சரிசெய்ய வீட்டு வைத்திய முறைகள் என்ன இருக்கிறது ?
1. குழந்தைகளின் அஜீரணக் கோளாறை போக்க முக்கியமான விஷயம் அவர்கள் சரியான நேரத்தில் ஏப்பம் விடுவது தான். குழந்தைக்கு பால் கொடுத்து முடித்த உடனே அவர்கள் ஏப்பம் விடுவது அவசியம். குழந்தைகள் பால் குடிக்கும் போது பாலுடன் சேர்த்து காற்றையும் உள்ளே இழுத்துக் கொள்வார்கள். இதனை சரி செய்வதற்கு அவர்களை சரியான முறையில் ஏப்பம் விட வைப்பது அவசியம். பச்சிளம் குழந்தைகள் சில நேரங்களில் ஏப்பம் விடும் போது பாலையும் சேர்த்து வெளியே தள்ளுவார்கள். இதை வைத்து நீங்கள் உங்கள் குழந்தைக்கு தொடர்ந்து உணவு கொடுக்கலாமா? வேண்டாமா என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.
2. குழந்தைகள் சில நேரங்களில் சாப்பிடுவதை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தாலோ உணவை புறக்கணித்தாலோ கவலைப்பட வேண்டாம். அவர்களை மேல் நோக்கியவாறு சில நிமிடங்கள் தூக்கி பிடித்தால் போதும். குழந்தைகளை சுமார் 30 நிமிடங்கள் வரை தூக்கி பிடித்தபடி இருந்தால் அவர்கள் சாப்பிடுவதற்கு இது உதவியாக இருக்கும் என பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் தூங்கும் போது கூட இதே நிலையில் படுத்தபடி தூங்குவதும் ஆரோக்கியமானது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
3. குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சரிசெய்ய அவர்களின் தூங்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவது தான். அவர்கள் தூங்கும் போது தலை 6 முதல் 8 இன்ச் வரை உயரமாக வைத்து இருக்க வேண்டும். மெத்தையின் அடியில் செங்கற்கள் அல்லது மரத்தால் ஆன பலகைகளை வைத்து உயரத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக தலையணையை வைத்து உயரத்தை அதிகரித்தால் அது அவர்களின் நிலையை இன்னமும் மோசமானதாக மாற்றி விடும்.
4. இதுபோன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஒரு கப் நிறைய பால் குடிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்றால் பசும்பாலை நன்றாக குளிர வைத்து கொடுங்கள். இதன் மூலம் குழந்தையின் அஜீரணக் கோளாறை நீங்கள் ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். ஆனால் குழந்தைகளுக்கு லாக்டோஸ் அலர்ஜி இல்லாமல் இருக்க வேண்டும்.
5. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்ய பெற்றோர் க்ரைப் வாட்டர்களை கொடுப்பது சரி என்று நினைக்கிறார்கள். ஆனால் கடைகளில் வாங்கும் க்ரைப் வாட்டர்கள் குழந்தைகளுக்கு அந்த அளவிற்கு பாதுகாப்பானது அல்ல. இதனை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். சோம்பு, இஞ்சி மற்றும் கெமோமில் தேயிலை ஆகியவற்றை எல்லாம் நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி உங்கள் குழந்தைக்கு கொடுங்கள். இதனை சிறுவர்களுக்கும் நீங்கள் கொடுக்கலாம்.
Remedy for indigestion and burping:
6. குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறு மற்றும் குமட்டல் பிரச்சினைக்கு இஞ்சி மிட்டாய் தீர்வாக இருக்கும். இதனை பெரும்பாலான குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடுவார்கள்.
7. 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிது பட்டைத் தூளை சேர்த்து உங்கள் குழந்தைக்கு கொடுங்கள். இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்து விடும். தேனை ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கவும். ஏனெனில் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்க தேன் ஏற்றதல்ல.
8. குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு இருக்கும் போது நீங்கள் அவர்களுக்கு வெறும் பால் மட்டும் கொடுப்பதற்கு பதிலாக அதில் பட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். வெது வெதுப்பான பாலுடன் சிறிது தேனையும் கலந்து கொடுக்கும் போது அது அவர்களின் வயிற்றில் உள்ள பிடிப்புகளை சரி செய்வதுடன் அஜீரணக் கோளாறு பிரச்சினைக்கு தீர்வு தரும்.
9. பச்சிளம் குழந்தைகள் மட்டுமின்றி சிறுவர்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை சரி செய்ய பெப்பர் மிண்ட் ஆயில் உதவி செய்யும். இந்த ஆயிலை சிறிது காட்டன் துணியில் தேய்த்து குழந்தைகள் தூங்கும் தொட்டியை சுற்றிலும் வைத்து விட வேண்டும். இதனை குழந்தைகள் சுவாசிக்கும் போது அவர்களின் வயிறு தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் போய் விடும்.
10. குழந்தையின் வயிற்றில் எண்ணெய் வகைகளை தடவும் போது அது அவர்களுக்கு தீர்வு தரக் கூடியதாக இருக்கும். அதிலும் சோம்பு கலக்கப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்துவது பலன் தரும். மருத்துவ குணம் கொண்ட எண்ணெய் வகைகளில் ஒரு துளி எடுத்து அதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து அவர்களின் அடிவயிற்றில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தைகளை அஜீரணக் கோளாறில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் :
Home remedies for indigestion and vomiting:
* குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட கொடுக்காமல் முறையான இடைவெளியில் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பது நல்லது.
* குழந்தை இரவில் தூங்குவதற்கு முன் அதாவது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் தங்கள் உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும்.
* சாப்பிட்டு முடித்த உடனே உங்கள் குழந்தையை ஓய்வெடுக்க வையுங்கள் அல்லது அவர்களை சிறிது நேரம் விளையாட அனுமதியுங்கள்.
* கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை தவிர்க்கவும், கார்பனேட்டட் தன்மை கொண்ட குளிர்பான வகை, அளவுக்கு அதிகமான சாக்லேட் இவற்றையும் தர வேண்டாம்.
* குழந்தைகளை மெதுவாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதை விட டேபிளின் மீது உட்கார வைத்து நிதானமாக சாப்பிட பழக்குங்கள்.
* குழந்தைகள் தங்கள் உணவை வாயில் வைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என கூறுங்கள். உணவை முறையாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.
Home remedies for gastric and acidity:
எப்போது நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் ?
ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது. சில குழந்தைகளுக்கு அது குடல் சார்ந்த பிரச்சினைகளையும், மலம் கழிக்கும் போதும், உணவு அலர்ஜியையும் ஏற்படுத்தி விடும். இதுவே வயிற்று வலியை ஏற்படுத்தி பால் ஒப்புக் கொள்ளாத தன்மையை உருவாக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் தாய் தன் சாப்பிட்ட உணவை பற்றி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை உங்கள் குழந்தைக்கு கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் :
* வாந்தி, (இடைவிடாமல் குழந்தைகள் வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பது)
* குழந்தைகளின் வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுவது போல இருந்தால்
* குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை
* மூச்சு விடுதலில் சிரமம்
* மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும் போது
அஜீரணக் கோளாறு என்பது இங்கு எளிதாக தீர்க்க கூடிய பிரச்சினை தான். இதனை பெரும்பாலானோர் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் இது குழந்தைகளுக்கு வரும் போது அதை அவர்கள் எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை நீங்கள் பின்பற்றுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தை அஜீரணக் கோளாறு பிரச்சினையில் இருந்து விடுபட்டு உங்களை பார்த்து புன்னகை செய்யும்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply