Apple Barley for babies in tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் ஆரம்பித்தவுடன் நாம் ஆப்பிள் கூழ் தருவதென்பது வழக்கமான ஒன்றுதான் ஆனால் பார்லி தரலாம் எனது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.ஏனென்றால் பார்லி என்பது பெரியவர்கள் உட்கொள்ளும் உணவு என்றே நாம் நினைத்திருப்போம்.அதை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கான எனர்ஜியினை அள்ளித்தரும் உணவுதான் பார்லி.இதை சத்துக்கள் நிறைந்த ஆப்பிளுடன் சேர்ந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக அமையும்.மேலும் குழந்தைகள் வயிறு நிரம்ப எடுத்துக்கொள்ளும் உணவாகவும் இது அமையும்.
மேலும் இதில் நெய் சேர்த்துள்ளதால் சுவையினை கூட்டுவதோடு குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்யும்.
Apple Barley for babies in tamil:
தேவையானவை
- ஆப்பிள்-1
- பார்லி- 3 டே.ஸ்பூன்
- நெய்- 1 டீ.ஸ்பூன.
இதையும் படிங்க: குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்
Apple Barley for babies in tamil:
செய்முறை
1.பார்லியை நன்றாக கழுவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2.கடாயினை சூடாக்கி நெய் ஊற்றவும்.
3.ஊறவைத்த பார்லியினை போட்டு சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
4.நறுக்கிய ஆப்பிள் சேர்த்து வதக்கவும்.
5. 1 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
குறிப்பு: 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதில் பால் சேர்க்கலாம்.
6.மிதமான தீயில் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
7.நன்றாக மசிக்கவும்.
8.இதமாக பரிமாறவும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான சிறந்த உணவுகள்
உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து பார்லி உடலினை ஆரோக்கியமாக வைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் பார்லி கீழ்கண்ட நன்மைகளையும் அளிக்க வல்லது.
- பார்லியில் நார்ச்சத்துக்கள் அதிகமிருப்பதால் உணவினை எளிதில் செரிமான அடைய செய்கின்றது.
- இயற்கையிலேயே புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் பார்லிக்கு உண்டு.
- பார்லியில் கால்சியம்,பாஸ்பரஸ்,மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகமிருப்பதால் எலும்புகளுக்கும்,பற்களுக்கும் பலமளிக்கக்கூடியது.
- பார்லி தானியங்களில் பீட்டா குளுகான் சத்துக்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மணடலத்தினை வலுவாக்குகிறது.
- தோலின் ஈரப்பதம் காக்கப்பட்டு சருமத்திற்கு நன்மையளிக்க வல்லது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
குழந்தைகளுக்கு பார்லி கொடுக்கலாமா?
பார்லியில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. மேலும் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடிய என்பதால் பார்லியினை தாராளமாக கொடுக்கலாம்.
எந்த மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு பார்லி கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்த உடன் ஆறாவது மாதத்தில் இருந்தே பார்லியை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஆப்பிள் பார்லி கஞ்சி
Ingredients
- ஆப்பிள்-1
- பார்லி- 3 டே.ஸ்பூன்
- நெய்- 1 டீ.ஸ்பூன்.
Leave a Reply