athipalam benefits in tamil: அத்திப்பழத்தை பற்றி முன்பு நாம் சரியாக அறிந்திருக்காவிட்டாலும் இன்று பல வீடுகளிலும் அன்றாடம் உண்ணப்படும் உலர் பழங்களில் ஒன்றாக அத்திப்பழம் இருக்கின்றது. அதற்கு காரணம் இதில் நிறைந்திருக்கும் அபரிமிதமான சத்துக்கள் தான். இரத்த சோகையை நோயை குணப்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க டாக்டர்களால் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது அத்திப்பழம் தான். இதனை உலர் பழங்களாகவும் சாப்பிடலாம் மற்றும் பிரஷ்ஷாக கடைகளிலும் கிடைக்கிறது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இத்தகைய நன்மைகள் அடங்கிய அத்திப்பழத்தை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் இதனை குழந்தைகள் விரும்பி உண்பது என்பது குறைவு தான். இதன் சுவையானது பெரும்பாலும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்காது என்பதால் நாம் சிறிது சாப்பிட வைப்பதற்கு சிரமப்பட வேண்டியது இருக்கும் ஆனால் அத்திப்பழத்தை லட்டாக செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்வார்கள்.
அதற்கான ரெசிபி தான் இந்த அத்திப்பழம் லட்டு இது நீங்கள் இதற்கு முன்னர் கேள்விப்படாத ரெசிபியாக இருக்கலாம். என் வீட்டில் குழந்தைகள் அத்திப்பழம் சாப்பிட அடம்பிடிப்பதால் அதை எவ்வாறு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் என்று யோசித்த பொழுது கிடைத்த ரெசிபி தான் இந்த அத்திப்பழம் லட்டு.
இதில் டிரை ஃப்ரூட்ஸ் உடன் அத்திப்பழமும் கலந்து இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் கேட்டு விரும்பி உண்பர் அது மட்டுமல்லாமல் குழந்தைகள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று நாம் விருப்பப்படுகின்றோமோ அத்தனை ஆரோக்கியமான நட்புகளையும் இந்த லடுடன் சேர்த்துக் கொடுக்கலாம் என்பதை இந்த ரெசிபியின் சிறப்பு.
athipalam benefits in tamil:
athipalam benefits in tamil
அத்தி பழத்தின் நன்மைகள்
- அத்திப்பழம் ரத்த சோகையை தடுத்து ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது
- அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க வல்லது.
- அத்திப்பழமானது வயிற்றில் ஏற்படும் புண்கள் மற்றும் அமில சிறப்பால் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றை சரி செய்கின்றது. பெருங்குடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வல்லது.
- அத்திப்பழத்தில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எளிதில் செரிமானமாக கூடியது மேலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- இந்த அத்திப்பழ லட்டுவில் வைட்டமின்கள், மினரல்ஸ், பொட்டாசியம், கால்சியம் மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இந்த லட்டு சிறந்ததாகும்.
- இதில் கலந்து இருக்கும் அத்திப்பழம் மற்றும் பேரிச்சை ஆகியவை இயற்கையிலேயே இனிப்பு சுவை நிறைந்துள்ளதால் குழந்தைகள் உடல் நலனுக்கு ஆரோக்கியமானதாகும்.
- இதில் ஆண்டி ஆக்சிடெண்ட் கள் நிறைந்துள்ளதால் செல்கள் சிதைவடையாமல் தடுக்க கூடியது.
- அத்திப்பழத்தில் இயற்கையிலேயே நிறைந்து இருக்கும் இனிப்பு சுவையானது குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியினை அளிக்கவல்லது.
- மேலும் இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்றவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக கூடியது.
- இந்த லட்டில் செயற்கையான வேதிப்பொருட்கள் எதுவும் சேர்க்காததால் குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான சிற்றுண்டியை செய்து கொடுத்த திருப்தி நமக்கு ஏற்படும்.
athipalam benefits in tamil
- அத்திப்பழம்- 1 கப்
- மிக்ஸ்டு நட்ஸ் -அரை கப்
- துருவிய தேங்காய்- கால் கப்
- பேரிச்சம்பழம் – 4-5
- நெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
athipalam benefits in tamil:
செய்முறை
- உலர் அத்தி பழத்தை 15 முதல் 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- அதன் பிறகு அத்திப்பழம் மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழத்தினை நன்றாக அரைக்கவும்.
- நட்ஸ்களை ஒன்று இரண்டாக உடைத்து லேசாக மனம் வரும் வரை வறுக்கவும்.
- மிக்சியில் அரைத்த பேஸ்ட்டில் நட்ஸ், தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- நெய்யை லேசாக உருக்கி அதில் ஊற்றவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- 30 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
- லட்டினை காற்று போவதாக டப்பாவில் அடைக்கவும்.
குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்களான அத்திப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் ஆகிய அனைத்தும் கலந்துள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு சத்தான ஸ்னாக்ஸாக இது இருக்கும்.
athipalam benefits in tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அத்திப்பழம் லட்டினை குழந்தைகளுக்கு எப்பொழுது இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்.
அத்திப்பழம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
நிச்சயம் அத்திப்பழம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதுதான். குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு அத்திப்பழத்தின் எவ்வாறு கொடுப்பது?
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது உலர் அத்திப்பழத்தினை நன்றாக ஊற வைத்து பின்பு மிக்ஸியில் அரைத்து அதனை பேஸ்ட் போன்று அரைத்து கொடுக்கலாம். பிரஷான அத்திப்பழம் என்றால் தோலை நீக்கி சதைப்பகுதியை மட்டும் நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
எத்தனை நாள் வரை வைத்திருக்கலாம்?
நீங்கள் வெளியில் வைக்கின்றீர்கள் என்றால் தேங்காய் சேர்த்திருப்பதால் ஐந்து நாட்கள் வரை வைத்திருக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம் ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்துக் கொடுப்பதை சிறந்தது.
அத்திப்பழம் நட்ஸ் லட்டு
Ingredients
- அத்திப்பழம்- 1 கப்
- மிக்ஸ்டு நட்ஸ் -அரை கப்
- துருவிய தேங்காய்- கால் கப்
- பேரிச்சம்பழம் – 4-5
- நெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
Notes
- உலர் அத்தி பழத்தை 15 முதல் 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- அதன் பிறகு அத்திப்பழம் மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழத்தினை நன்றாக அரைக்கவும்.
- நட்ஸ்களை ஒன்று இரண்டாக உடைத்து லேசாக மனம் வரும் வரை வறுக்கவும்.
- மிக்சியில் அரைத்த பேஸ்ட்டில் நட்ஸ், தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- நெய்யை லேசாக உருக்கி அதில் ஊற்றவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- 30 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
- லட்டினை காற்று போவதாக டப்பாவில் அடைக்கவும்.
Leave a Reply