Badam Laddu: கடந்த சில வாரங்களாகவே குழந்தைகளுக்கான சத்தான காலை உணவு எப்படி வித விதமாக கொடுக்கலாம் என்பதை பற்றி பார்த்தோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபிகளான ஈஸியான கட்லெட் வகைகளை பற்றி பார்த்து வந்தோம்.
இன்றைக்கும் நாம் பார்க்கப் போகும் ரெசிபி குழந்தைகளுக்கான ஆரோக்கியமான பாதாம் லட்டு. லட்டுவை பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ரெசிபி என்றால் அது லட்டு தான்.
ஆனால் கடைகளில் வாங்கும் லட்டுகளில் சீனி கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி நாம் வாங்கி தர முடியாது. அதிக இனிப்புள்ள தின்பண்டங்களை குழந்தைகளுக்கு தற்போது கொடுக்கவே பயமாக இருக்கின்றது.
அதனால் குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு வகைகளை வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டால் குழந்தைகள் விரும்பும் பொழுது நாம் தாராளமாக கொடுக்கலாம்.
இதற்கு முன் பேரிச்சம்பழம் லட்டு, அவல் லட்டு, சத்து மாவு லட்டு என்று பல வகையான லட்டு வகைகளை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது பாதாம் லட்டு.
பொதுவாக பாதாம் என்றாலே எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். அதில் லட்டு செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாம் என்றால் சொல்வார்கள்?
இதில் சீனிக்கு பதிலாக நாட்டு சக்கரை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். மேலும் ஏலக்காய் தூள் போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு செரிமான தொந்தரவு ஏற்படாது.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்.
Badam Laddu:

Badam Laddu:
குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை அள்ளித் தருவதால் பாதாமினை குழந்தைகளுக்கான ஆற்றல் மையம் என்றே சொல்லலாம்.
- பாதாமில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியத்தை வழங்குகின்றது.
- பாதாமில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்றவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- பாதாமில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டின், நார் சத்துக்கள் மற்றும் பாதாம் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜி வழங்குகின்றது.
- பாதாமில் நிறைந்திருக்கும் நார்ச்சத்துக்கள் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- மேலும் பாதாமில் நிறைந்துள்ள புரோட்டின், இரும்பு சத்து மற்றும் ஜிங்க் போன்றவை குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு பணிபுரிகின்றது.
Badam Laddu:
- பாதாம்- ஒரு கப்
- நாட்டுச்சக்கரை-3-4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
- நெய்-1-2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் அல்லது ஓட்ஸ் பவுடர் (மேலே தூவ)-1-2 டேபிள் ஸ்பூன்
Badam Laddu:
செய்முறை
1. ஒரு கப் பாதாமை 4-5 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். கூறியதும் பாதாமின் தோலை நீக்கவும்.
2. தோல் உரித்த பாதாமினை நன்கு நைசாக மிக்ஸியில் அரைக்கவும். பவுடர் மென்மையாக இருக்க வேண்டும்.
3. மூன்று முதல் நான்கு டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து பாதாம் பவுடருடன் நன்றாக கலக்குமாறு செய்யவும்.
4. ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5. கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி இந்த மிக்ஸரை கொட்டி இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு லேசாக வறுக்கவும்.
6. ஆரிய உடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டை பிடிக்கும் பொழுது சிறிதளவு நெய் சேர்த்து உருண்டை பிடித்தால் எளிதாக இருக்கும்.
7. தேவைப்பட்டால் துருவிய தேங்காய் அல்லது ஸ்போர்ட்ஸ் பவுடரில் இதனை உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
பாதாம் மற்றும் நாட்டு சக்கரை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இது இருக்கும். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆக இது இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Badam Laddu:
Badam Laddu:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.வீட்டில் பாதாம் அரைப்பதற்கு பதிலாக கடைகளில் வாங்கும் பாதாம் பவுடரை சேர்க்கலாமா?
சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அந்த பாதாம் பவுடரில் பிரஷர்வேட்டிவ்ஸ், சக்கரை போன்றவை கலந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்த அளவு வீட்டிலேயே செய்வது சிறந்தது.
2.பாதாம் லட்டுவினை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?
பாதாம் லட்டுவினை காற்று புகாத டப்பாவில் அடைத்து 5 முதல் 7 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
3.பாதாம் தவிர வேறு நட்ஸ்கள் சேர்க்கலாமா?
பாதாமை தவிர முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்றவை சேர்த்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் அவற்றை அடைக்கும் பொழுது நன்றாக அரைபட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சுவையான பாதாம் லட்டு
Ingredients
- பாதாம்- ஒரு கப்
- நாட்டுச்சக்கரை-3-4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
- நெய்-1-2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் அல்லது ஓட்ஸ் பவுடர் மேலே தூவ-1-2 டேபிள்ஸ்பூன்
Notes
2. தோல் உரித்த பாதாமினை நன்கு நைசாக மிக்ஸியில் அரைக்கவும். பவுடர் மென்மையாக இருக்க வேண்டும்.
3. மூன்று முதல் நான்கு டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து பாதாம் பவுடருடன் நன்றாக கலக்குமாறு செய்யவும்.
4. ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5. கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி இந்த மிக்ஸரை கொட்டி இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு லேசாக வறுக்கவும்.
6. ஆரிய உடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டை பிடிக்கும் பொழுது சிறிதளவு நெய் சேர்த்து உருண்டை பிடித்தால் எளிதாக இருக்கும்.
7. தேவைப்பட்டால் துருவிய தேங்காய் அல்லது ஸ்போர்ட்ஸ் பவுடரில் இதனை உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
Leave a Reply