Beetroot Laddu Recipe in Tamil: ஸ்வீட் வகைகள் என்றாலே குழந்தைகளை முதலில் கவர்வது அதன் வண்ணம் தான். அதன் பிறகுதான் சுவை. ஆனால் கண்ணை கவரும் வண்ணத்தோடு சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து இருந்தால் நாமும் திருப்தியோடு செய்து கொடுக்கலாம் அல்லவா. இதோ குழந்தைகளை கவரும் வண்ணத்தில் செயற்கை வண்ணங்கள் கலக்காத சுவையான பீட்ரூட் லட்டு ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Beetroot Laddu Recipe in Tamil:
- துருவிய பீட்ரூட் -1 கப்
- தேங்காய் பவுடர்- ½ கப்
- ஏலக்காய் தூள்- ½ டீ.ஸ்பூன்
- ட்ரை புரூட்ஸ் பவுடர் – 4 டீ. ஸ்பூன்
- நெய் – 6 டீ. ஸ்பூன்
இதையும் படிங்க: சோளம் குழி பணியாரம்
Beetroot Laddu Recipe in Tamil:
செய்முறை
1.பானில் 2 டீ. ஸ்பூன் நெய்யினை எடுத்து கொள்ளவும்.
2.துருவிய பீட்ரூட்டினை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
3.சிறிது நேரம் ஆறவிடவும்.
4.தேங்காய் பவுடர்,ஏலக்காய் தூள் மற்றும் ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
5.நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கவும்.
6.டேஸ்டியான பீட்ரூட் லட்டு ரெடி.
பீட்ரூட்டின் நன்மைகள்
- பீட்ரூட் உடலில் உள்ள ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க செய்கின்றது.
- பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
- பீட்ரூட் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றி சுத்தமாக்க உதவுகின்றது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டினை நாமும் குழந்தைகளுக்கு லட்டாக செய்து கொடுத்து மகிழலாமே!
இதையும் படிங்க: ஹெல்தி அண்ட் டேஸ்டி ஸ்பான்ஜ் கேக்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply