Biscuits for Babies in Tamil : சமீபகாலமாக அனைத்து அம்மாக்களும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று என் குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கலாமா? என்பதுதான். பிஸ்கட் என்பது நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிற்றுண்டி. மேலும் குழந்தைகள் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் நாம் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களில் பிஸ்கட் கண்டிப்பாக இடம்பெறும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் சமீபகாலமாக அன்னையர்களிடம் பெருகிவரும் விழிப்புணர்வு காரணமாக குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா என்ற சந்தேகம் அவர்களின் மனதில் எழுந்துள்ளது. இது சரியான கேள்வியும் கூட.
இதற்கு நான் அளிக்கும் திட்டவட்டமான பதில் என்னவென்றால் “பிஸ்கட் கொடுக்கக் கூடாது” என்பது ஆகும். ஆறு மாத காலம் ஆகிவிட்டாலே குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து பிஸ்கட்டை கிண்டி உணவாகக் கொடுக்கும் அம்மாக்களுக்கு இந்த பதில் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் விதமாகத்தான் இருக்கும்.
Biscuits for Babies in Tamil
Biscuits for Babies in Tamil
அந்த அளவிற்கு பிஸ்கட் என்பது நம் அன்றாட உணவுகளில் ஒன்றாக கலந்து விட்டது. மேலும் இதை கொடுப்பது எளிதும் கூட. என் குழந்தைக்கு நான் ஆறு மாத காலம் ஆரம்பித்தவுடன் சத்துமாவு, பழங்கள்,காய்கறிகள் ஆகியவற்றை கொடுக்க ஆரம்பித்தபோது குழந்தைக்கு பிஸ்கட்டை நீங்கள் இன்னும் கொடுக்க ஆரம்பிக்கவில்லையா? என்ற கேள்வி என்னிடம் பலரும் கேட்டார்கள்.
“டாக்டர் மம்மி” என்கிற முறையில் பிஸ்கட் குழந்தைகளுக்கு ஏன் கொடுக்கக் கூடாது? என்று அறிவியல் பூர்வமாக உங்களுக்கு விளக்கிச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். பிஸ்கட் சாப்பிட்டால் “நான்கு கிளாஸ் பால் அருந்துவதற்கு இணையான கால்சியம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
மேலும், கோதுமையின் சக்தி குழந்தைகளுக்கு கிடைக்கும்” என ஏமாற்றி நம் குழந்தைகளுக்கு பிஸ்கட்டை கொடுக்க வைக்கும் விளம்பரங்களுக்கு மத்தியில் நான் கூறும் விளக்கத்தையும் சற்று பொறுமையாக கேளுங்கள்.
நாம் கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளில் உண்மையில் இருப்பது என்ன? நாம் குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் பிஸ்கட்டுகள் என்றால் அது பார்லே ஜி மற்றும் மில்க் பிக்கிஸ் ஆகிய பிஸ்கட்டுகள் தான்.
இதில் கலந்துள்ள மூலப்பொருட்களை நான் ஆராய்ந்த பொழுது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்கின்றேன். தற்பொழுது பிஸ்கட்டில் கீழ்வரும் ஆரோக்கியமான பொருட்கள் கலந்துள்ளன என்று தம்பட்டம் அடிப்பவர்களுக்கு நான் கூறும் விளக்கத்தை கூறுங்கள்.
Biscuits for Babies in Tamil
கோதுமை மாவு
பிஸ்கட்டில் நாம் படிக்கும் பொழுது முதன்மையான மூலப்பொருள் கோதுமை மாவு என்று தான் எழுதப்பட்டிருக்கும்.ஆனால் அது நாம் நினைக்குமாறு வீட்டில் உபயோகிக்கும் உண்மையான கோதுமை மாவு அல்ல.
மாறாக அது ரீபைண்டு செய்யப்பட்ட கோதுமை மாவு.சுருக்கமாக உங்களுக்கு விளங்கும்படி சொல்ல வேண்டும் என்றால் அதில் கலந்திருப்பது மைதா.கோதுமை மாவினை மைதா மாவாக மாற்றும்பொழுது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள், நார்ச் சத்துக்கள்.புரோட்டீன் ஆகியவை அதில் இருந்து நீக்கப்படும்.
இப்படி அனைத்து சத்துக்களும் நீக்கப்பட்ட மைதாவால் குழந்தைகளுக்கு எவ்வித சத்தும் கிடைக்கப்போவதில்லை.மாற்றாக மலச்சிக்கல் மட்டுமே ஏற்படும் என்பதே உண்மை.
சுகர்(சீனி)
சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையானது குழந்தைகளுக்கு நல்லதல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்பொழுது நம் குழந்தைகளுக்கு சீனிக்கு மாற்றாக நாட்டுச்சக்கரை, கருப்பட்டி பனங்கற்கண்டு ஆகியவற்றை கொடுக்க ஆரம்பித்து விட்டோம். எனவே இதைப்பற்றி நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை.
வெஜிடபிள் ஆயில்
தாவர எண்ணெய் என்று பொருள்படும் இந்த எண்ணெயானது ஆரோக்கியமானதாக நாம் கருதினாலும் இதில் ஹைட்ரஜன் ஏற்றம் செய்யப்பட்ட காய்கறி கொழுப்புகள் சேர்க்கபடுவதால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகும்.
இன்வர்ட் சுகர் சிரப் என்பது பிஸ்கட்டுகளின் லேபிள்களில் காணப்படும் ஒரு முக்கியமான மூலப்பொருள் ஆகும். சுக்ரோஸ் (குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸின் டி-சாக்கரைடு) என்பது ஃபிரீ குளுக்கோஸ் மற்றும் ஃபிரீ பிரக்டோஸாக உடைக்க படுவதே இன்வேர்ட் சுகர் ஆகும்.
இந்த சர்க்கரையானது வெள்ளைசர்க்கரையை விட (சுக்ரோஸ்) இனிப்பானது , ஏனெனில் பிரக்டோஸ் என்பது சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் இரண்டையும் விட இனிப்பானது.
Biscuits for Babies in Tamil
இன்வர்ட் சுகர் ஏன் பிஸ்கட்டுகளில் உபயோகிக்கப்படுகின்றது?
Biscuits for Babies in Tamil: பிஸ்கட்டுகளில் காணப்படும் சர்க்கரையானது சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை படிகங்களை விட மிகவும் சிறியதாகவும்.எனவே பிஸ்கட் செய்யும் போது மென்மையான பதத்தினை பெறுவதற்காக இன்வர்ட் சுகர் சேர்க்கப்படுகின்றது.
இன்வர்ட் சுகர் என்பது எளிதில் கரையக்கூடியது மட்டுமல்லாமல் அறைவெப்பநிலையில நீண்ட காலம் இருக்கக்கூடியது. எனவே இவை பிஸ்கட்டுடன் சேர்க்கப்படுகின்றன.
சர்க்கரை என்பது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதா? இன்வர்ட் சுகர் கலந்திருக்கும் கலந்திருக்கும் தின்பண்டமானது பெரியவர்களின் உடல் நிலைக்கு உகந்ததல்ல என கூறபடும்போது குழந்தைகளுக்கு இதனை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.
ரைசிங் ஏஜெண்டுகள்
பிஸ்கட்டுகளில் கலக்கப்படும் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் போன்றவையே ரைசிங் பவுடர் என அழைக்கப்படுகின்றன.இது பொதுவாக குழந்தைகளுக்கும்,சிறுவர்களுக்கும் உணவில் சேர்க்க ஏற்றதல்ல.
உப்பு
குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் உப்பின் அளவானது ஒரு கிராம்க்கும் குறைந்த அளவே ஆகும்.இந்த அளவான உப்பானது குழந்தைகளுக்கு பொதுவாக தாய்ப்பால் மற்றும் பார்முலாக்கள் இருந்து கிடைக்கின்றது.இதற்கு மேல் உப்பு சேர்க்கப்படும்போது அது குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆபத்தாக அமையும்.பிஸ்கட்டுகளில் உப்பின் அளவானது எங்கும் காண்பிக்கப்பட்டு இருக்காது.எனவே இது குழந்தைகளுக்கு ஏற்புடையது அல்ல.
மில்க் சாலிட்
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால் பவுடரே மில்க் சாலிட் எனப்படுவதாகும்.பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பிஸ்கட்டை கொடுக்கும் போது இதில் கலந்திருக்கும் மூலப்பொருள் தீங்கு விளைவிக்கலாம்.மேலும் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு நாம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கொடுக்கக்கூடாது..
Biscuits for Babies in Tamil
எமல்சிபையர்
பிஸ்கட்டில் உள்ள கொழுப்பு மற்றும் தண்ணீரை உறுதிப்படுத்துவதற்காக எமல்சிபையர் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலான எமல்சிபையர் உணவு கட்டுப்பாடு துறையால் நிராகரிக்கப்பட்டவை ஆகும்.மேலும் இதில் ரசாயனங்கள் கலந்துள்ளன.
இவை நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுடன் சேர்ந்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.மேலும்,சோயா லெசித்தின் போன்ற வகையான எமல்சிபையர்கள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
மாவு கண்டிஷனர்
மைதா மாவினை பண்ப்படுத்துவதற்கு அதனுடன் சேர்க்கப்படும் பொருள் தான் கண்டிஷனர. இதில் உள்ள கெமிக்கல்கள் மாவை பிஸ்கட் செய்வதற்கான சரியான பதத்திற்கு கொண்டு வருவதற்காக உபயோகப்படுகின்றன. இவை குழந்தைகளின் வயிற்றுக்கு கேடு விளைவிப்பவை ஆகும்.
பிளேவர்ஸ்
பிஸ்கட்டுகளின் சுவைக்கேற்ப வெண்ணிலா முதல் பலவகையான பிளேவர்ஸ் சேர்க்கப்படுகின்றன.அவை 100% கெமிக்கல்கள் ஆகும். இவை குழந்தைகளுக்கு ஏற்புடையதல்ல.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மில்க் பிக்கிஸ் எனப்படும் பிராண்டில் கால்சியம்,உப்பு,வைட்டமின் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகியவை உள்ளன.
இவை பிஸ்கட்டுகளின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துவதாகத் தோன்றினாலும், உண்மை என்னவென்றால், அவை மிக சிறிய அளவில் சேர்க்கப்படுவதால் அவற்றால் குழந்தைகளுக்கு எவ்வித பயனும் இல்லை என்பதே உண்மை.
Biscuits for Babies in Tamil
என் குழந்தைக்கு என்ன பிஸ்கட் கொடுக்கலாம்?
இதுவரை குழந்தைகளுக்கு என்னென்ன பிஸ்கட்டுகள் கொடுக்கக்கூடாது அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் மூலப்பொருட்களை பற்றி பார்த்தோம். இப்பொழுது குழந்தைகளுக்கு எந்த வகையான பிஸ்கட்டுகள் கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்
- முழு கோதுமையால் தயாரிக்கப்பட்டவை.
- பிரசர்வேட்டிவ்ஸ் மற்றும் ரசாயனம் கலக்கப்படாதவை
- சர்க்கரை சேர்க்கப்படாதவை
- உப்பு சேர்க்கப்படாதவை
- பேக்கிங் பவுடர் மற்றும் சோடா சேர்க்கப்படாதவை .
ஆனால் இவை அனைத்தும் இல்லாத பிஸ்கட்டுகளை நீங்கள் கண்டறிவது மிகவும் கடினம். மேலும் பிஸ்கட்டுகள் எங்களது ஷாப்பில் உள்ளதா? அவற்றை விரைவில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்ற கேள்விகள் பல வருடங்களாக வந்த வண்ணமாக இருந்த நிலையில் நீண்ட முயற்சிக்கு பின்பு நாங்கள் தயாரித்ததே “லிட்டில் மொப்பெட் குக்கீஸ்”.
எங்களது பிஸ்கட்டுகள் அனைத்தும் முழு கோதுமை மற்றும் சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்படுபவை.மேலும் இவற்றில் வெள்ளை சர்க்கரை,உப்பு பேக்கிங் பவுடர்,கெமிக்கல்கள் மற்றும் ரசாயன கலவைகள் சேர்க்கப்படுவதில்லை. மேலும் ஒவ்வொரு சர்தாருக்கும் பிரஷ்ஷாக தயாரித்து வழங்கப்படுகின்றது. எங்களது புதிய ஆரம்பம்.“லிட்டில் மொப்பெட் குக்கீஸ்”.
Biscuits for Babies in Tamil
லிட்டில் மொப்பெட் குக்கீசினை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா ?நீங்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்தால் போதும் பிரெஷாக தயாரித்து உங்கள் வீட்டிற்கே வந்து தருகின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply