Cauliflower Paneer Puree in Tamil:எட்டு மாத குழந்தைகளுக்கான புரதச்சத்து நிறைந்த காலிபிளவர் பன்னீர் மசியல். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்திருப்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்கு அடுத்த கட்டமாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை நாம் கொடுப்பது மிகவும் முக்கியம்.
குறிப்பாக எட்டு மாத காலத்தில் பிறகு நாம் ஊட்டி வளர்த்த குழந்தைகளை அவர்களாகவே உணவின் மீது நாட்டம் கொண்டு உண்ண வைக்க வேண்டிய காலம்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்து கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாக மட்டுமல்லாமல் சுவையானதாகவும் இருக்க வேண்டும். அதுவே உணவின் மீதான ஆர்வத்தினை தூண்டும். அதற்கேற்ற ரெசிபி தான் இந்த காலிபிளவர் பன்னீர் மசியல்.
Cauliflower Paneer Puree in Tamil:
Cauliflower Paneer Puree in Tamil:
தேவையானவை
- காலிஃப்ளவர் இதழ்கள் -கால் கப்
- பன்னீர்- 2 துண்டுகள்
- தாய்ப்பால் அல்லது பால் மில்க்
- மிளகுதூள்- இம்மியளவு
குழந்தைகளுக்கான காலிபிளவர் பன்னீர் மசியல்
செய்முறை
1.காலிஃப்ளவர் துண்டுகளை நன்றாக கழுவவும்.
2.10 முதல் 15 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.
3.துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பன்னீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
4.அதனுடன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
5.காலிபிளவர் என்கின்ற காய்கறியானது இதயம் மற்றும் மூளைக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றது.
மேலும் இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்புகளை வலுவடையச் செய்யும்.குழந்தைகளுக்கு காலை மற்றும் மத்திய நேரத்தில் கொடுக்கக்கூடிய சத்தான ரெசிபியிது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான காலிபிளவர் பன்னீர் மசியல்
Ingredients
- கால் கப் காலிஃப்ளவர் இதழ்கள்
- 2 பன்னீர்
- தாய்ப்பால்அல்லது பார்முலா மில்க்
- இம்மியளவு மிளகுதூள்-
Leave a Reply