Cauliflower Puree in Tamil: குழந்தைகளுக்கு காய்கறிகள் ஆரோக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை குழந்தைகளுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்பதில் தான் அம்மாகளுக்கு சவால்கள் நிறைந்துள்ளன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அச்சிரமத்தை போக்குவதற்காகவே காய்கறிகளை வைத்து தயாரிக்கக்கூடிய விதவிதமான ரெசிபிக்களை நான் உங்களுக்கு பரிந்துரைத்து கொண்டே இருக்கிறேன்.
அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ரெசிபி. பொதுவாக காலிஃப்ளவர் ஃப்ரை என்றால் போதும் குழந்தைகள் துள்ளிக் குதித்து வந்து முதலில் சாப்பிட்டுவர்.
அதனால் வளர்ந்த குழந்தைகளுக்கு காலிஃப்ளவரை கொடுப்பதில் சிரமம் இருக்காது ஆனால் பச்சிளம் குழந்தைகளுக்கு காலிஃப்ளவரை எப்படி கொடுப்பது என்ற கேள்விக்கான பதில்தான் இந்த காலிஃப்ளவர் மசியல்.

Cauliflower Puree in Tamil:
தேவையானவை
- காலிஃப்ளவர் -10 முதல் 15 இதழ்கள்
- பட்டர் -ஒரு டீஸ்பூன்
- சீரகத்தூள் – இம்மியளவு
- மிளகுத்தூள் – இம்மியளவு
செய்முறை
1.காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.தண்ணீரை கொதிக்க வைத்து சில நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு கொதிக்க விடவும்.
3.கொதித்த காலிஃப்ளவர் இலைகளை குளிர்ந்த நீரில் போடவும்.
4.கடாயில் பட்டர் ஊற்றி சூடாக்கவும்.
5.அதனுடன் சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
6.காலிஃப்ளவர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காலிஃப்ளவர் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
7.கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
8.குழந்தைகளுக்கான காலிபிளவர் மசியல் ரெடி.
குறிப்பு: மிகவும் நைசாக வேண்டும் என்று நினைத்தால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..
மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெசிபி 8 மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி ,வைட்டமின் கே வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. மேலும்,நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க வல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான காலிபிளவர் மசியல்
Ingredients
- 10-15 இதழ்கள் காலிஃப்ளவர்
- 1 டீ.ஸ்பூன் பட்டர்
- இம்மியளவு சீரகத்தூள்-
- இம்மியளவு மிளகுத்தூள்
Notes
- காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தண்ணீரை கொதிக்க வைத்து சில நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு கொதிக்க விடவும்.
- கொதித்த காலிஃப்ளவர் இலைகளை குளிர்ந்த நீரில் போடவும்.
- கடாயில் பட்டர் ஊற்றி சூடாக்கவும்.
- அதனுடன் சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
- காலிஃப்ளவர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காலிஃப்ளவர் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
- கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
- குழந்தைகளுக்கான காலிபிளவர் மசியல் ரெடி.
Leave a Reply