Chapathi Laddu snacks for Kids:குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் அதே ஸ்னாக்சினை கொடுத்து போர் அடித்து விட்டதா? இதோ உங்களுக்கான சிம்பிளான ஸ்னாக்ஸ் ரெசிபி.அதிகமாக மெனக்கிட தேவையில்லை.நீங்கள் டிபன் செய்யும் பொழுது மீதமுள்ள சப்பாத்தி போதும்.இனி குழந்தைகளுக்கான வித்யாசமான சப்பாத்தி லட்டு ரெடி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நாம் வழக்கமாக உண்ணும் லட்டினை விட வித்யாசமான சுவையுடன் இருக்கும்.கோதுமை குழந்தைகளுக்கு ஹெல்தியானது.மேலும் கடைகளில் வாங்கும் லட்டுகளில் சர்க்கரை கலந்திருப்பார்கள்.இதில் நான் நாட்டுச்சர்க்கரை சேர்த்துள்ளேன்.நீங்கள் விருப்பப்பட்டால் பனங்கற்கண்டு,கருப்பட்டி மற்றும் டேட்ஸ் பவுடர் சேர்த்து கொள்ளலாம்.
இதில் மிக்சுடு நட்ஸ் பவுடர் கலந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும்.சுவையையும் அதிகரிக்கும். மிக்சுடு நட்ஸ் பவுடரில் பாதாம்,முந்திரி,பிஸ்தா,குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்துள்ளதால் குழந்தைகளுக்கு நன்மையளிக்கக்கூடியது.
மிக்சுடு நட்ஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
இன்ஸ்டன்ட் சப்பாத்தி லட்டு
தேவையானவை
- சப்பாத்தி – 3
- வெல்லம்- 2 டே .ஸ்பூன்
- நெய்- 1 டே .ஸ்பூன்
- மிக்சுடு நட்ஸ் பவுடர் – 1 டீ.ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் – இம்மியளவு.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான பூசணி அல்வா
Chapathi Laddu snacks for Kids:
செய்முறை
1.சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2.ஈரப்பதம் இல்லாத மிக்சி ஜாரில் எடுத்து கொள்ளவும்.
3.வெல்லத்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
4.ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.
5.நட்ஸ் பவுடர் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
6.நெய் சேர்க்கவும்.
7.நன்றாக கலக்கவும்.
8.சிறிது சிறிதாக மாவு எடுத்து லட்டு போன்று உருட்டவும்.
9.பரிமாறவும்.
இதையும் படிங்க: காய்ச்சலுக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply