Guava for babies in Tamil:குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான கொய்யாப்பழம் மசியல்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பழங்கள் கொடுப்பதால் உடல்நலத்திற்கு நன்மை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதுவரை குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய பல வகையான காய்கறி மசியல் மற்றும் பழமசியல்களை நாம் பார்த்துவிட்டோம். ஆனால் கொய்யாப்பழ மசியல் என்பது நாம் கேள்விப்படாத ஒன்று.
ஏனென்றால்,கொய்யாப் பழத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு.
ஆனால் கொய்யா பழத்தின் பக்குவமாக தர வேண்டிய விதத்தில் கொடுத்தால் குழந்தைகளுக்கு அதுபோல ஊட்டச்சத்துள்ள பழம் வேறு எதுவும் இல்லை என்பதே உண்மை.
ஏனென்றால் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய பல்வேறு வகையான சத்துக்களை உள்ளடக்கியது கொய்யாப்பழம். இதில் பொட்டாசியம், நார்ச்சத்துக்கள்,வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிகமுக்கியமான சத்தான வைட்டமின் சி இதில் நிறைந்துள்ளன.எனவே ஆறு மாத காலம் முதலே குழந்தைகளுக்கு முதல் உணவாக இந்த ரெசிபியினை நாம் கொடுக்கலாம்.
பொதுவாகவே கொய்யாப்பழத்தில் சிறு சிறு விதைகள் நிறைய இருக்கும்.எனவே அதனை கொடுக்கும் போது குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுமா? என்ற சந்தேகம் நமக்குள் இருக்கும் என்பதால் அந்த விதைகளை நீக்கி பக்குவமாக குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கலாம் என்பதை காணலாம்.
மேலும் கொய்யா பழத்தில் மற்ற பழங்களை போல செயற்கை முறையில் பழுக்க வைத்தல்,ரசாயனம் பூசுதல் போன்றவை குறைவு என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக இந்த பழத்தினை கொடுக்கலாம்.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன.
- அதுமட்டுமல்லாமல் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
- குறிப்பாக சொல்லப்போனால் வைட்டமின் சி அதிகரிக்கும் அஸ்கார்பிக் எனப்படும் அமிலம் கொய்யாவில் நிறைந்து காணப்படுகின்றது.
- இவை தவிர கொய்யா பழத்தில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கும் தன்மை உடையது.
- கொய்யாப்பழத்தை உட்கொள்ளும் பொழுது உணவு எளிதில் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் தொந்தரவு போன்றவை ஏற்படாது.
- கொய்யாப்பழத்தில் விதைகள் அதிகமாக இருப்பதால் விதைகளை நீக்கி விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிற்று வலி ஏற்படாது.
- கொய்யா பழத்தை பகல் நேரத்தில் சாப்பிடுவதே சிறந்தது. இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- கொய்யா பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
- கொய்யாவில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- கொய்யாவில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
- கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு சிறந்தது.
Guava for babies in Tamil
Guava for babies in Tamil:
தேவையானவை
- கொய்யாப்பழம்.
Guava for babies in Tamil
செய்முறை
1.கொய்யா பழத்தை நன்கு கழுவி தோலை நீக்கவும்.
2.நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
3.விதைகளை நீக்கவும்.
4.சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
5.சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
6.ஆறவிடவும்.
7.நைசாக அரைக்கவும்.
8.குழந்தைகளுக்கு பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Guava for babies in Tamil
Guava for babies in Tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது பக்குவமாக கொடுக்க வேண்டிய விதத்தில் கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமானது.
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் கொய்யாப்பழத்தினை மேற்கண்ட ரெசிபியில் கூறியது போல் பக்குவமாக செய்து கொடுக்கலாம்.
கொய்யாப்பழம் கொடுப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
கொய்யாப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
குழந்தைகளுக்கான கொய்யாப்பழம் மசியல்
Ingredients
- 1 கொய்யாப்பழம்
Notes
.
Leave a Reply