Home Remedy for Teeth Pain:”ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பதை எப்பொழுது நாம் மறந்தோமோ அப்பொழுதே பல் சம்மந்தமான பிரச்சனைகள் நம்மில் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டன.வித விதமான பற்பசைகளை உபயோகிப்பதால் நம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்று நாம் கருதிக்கொண்டிருக்கின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பற்சிதைவு மற்றும் பற்சொத்தை போன்றவை அனைவருக்கும் காணப்படும் பரவலான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படுகின்றது.பலதரப்பட்ட இனிப்புகள்,சாக்லேட்டுகள்,துரித உணவுகள் போன்றவை பற்களுக்கு எதிரிகளாகின்றன.
இதனால் பல்வலி பிரச்சனையும் பரவலாகிவிட்டது.பல்வலி திடீரென்று ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வதற்கு முன் செய்ய வேண்டிய எளிமையான வீட்டு வைத்தியத்தினை காணலாம்.
Home Remedy for Teeth Pain
1.உப்பு வைத்தியம்
கால் டீ.ஸ்பூன் கல்லுப்பினை ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்.காலை,மாலை மற்றும் இரவு என மூன்று நேரம் வாயை கொப்பளிக்க வேண்டும்.இதனுடன் மஞ்சள் தூளும் சுரத்து கொள்ளலாம்.பல் வலி படி படியாக குறையும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எதனால் ?
2.கொய்யா இலை வைத்தியம்
கொய்யா இலைகள் கொழுந்தாக இருந்தால் அப்படியே மென்று சாப்பிடலாம். கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக சுண்டியதும் அதை இளஞ்சூடாக்கி வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.
3.கிராம்பு வைத்தியம்
இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி குணமாகும்.கிராம்பு எண்ணெய்யும் பல் வலி உள்ள இடத்தில தடவலாம்.
4.புதினா இலைகள்
கைப்பிடி அளவு புதினா இலைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் ஆறியதும் சிறிது சிறிதாக குடிக்கலாம்.அந்த தண்ணீரை வைத்து வாயை நன்றாக கொப்பளிக்கலாம்.
5.சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தை அதன் சாறு வெளிவருமாறு இடிக்கவும்.அதனை பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும்.
6.வேப்பமர பட்டை
வேப்பமர பட்டை வேப்ப மரப்பட்டையோடு ஆறு கிராம்பு சேர்த்து நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
7.கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும்.
8.ஆயில் புல்லிங்
மாதம் ஒரு முறை நல்லெண்ணெயை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்து பின்பு துப்ப வேண்டும்.இது ஆயில் புல்லிங் எனப்படும்.இது பற்களுக்கும் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
இதையும் படிங்க: ஆறு மாத குழந்தைகளுக்கான ஆறு வகையான பழக்கூழ்
பற்களை பாதுகாக்கும் முறை
- காலை, இரவு என இருவேளையும் பல் துலக்குவது நல்லது.
- 3 மாதத்துக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
- அதிக குளிர்ச்சியான அல்லது அதிக சூடான உணவுகளை உண்ண கூடாது.
- குழந்தைக்ளுக்கு சாக்லேட்டுகள்,ஐஸ் கிரீம்கள் போன்றவற்றை தரக்கூடாது.
- சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பது அவசியம்.குழந்தைகளுக்கும் கற்று தாருங்கள்.
- அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்.
- உடல் நிலை சரில்லையென்றால் டூத் பிரஷை உடனடியாக மாற்றவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply