Juice for Babies in Tamil: 6 மாத காலத்திலிருந்தே குழந்தைகளுக்கு திட உணவு முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை தான் முதலில் தேர்ந்தெடுப்போம்.ஏனெனில், பழங்கள் ஆரோக்கியமானவை என்பது நாம் அறிந்த ஒன்று தான்.ஆனால் குழந்தைகளுக்கு பழச்சாறு அருந்த கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையினை நாம் இப்பொழுது காணலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Juice for Babies in Tamil
ஆறு மாத காலம் வரை தாய்பால் மற்றும் பார்முலா மில்க் மில்க் மட்டுமே அருந்திய குழந்தைகளுக்கு சாப்பிட ஏதுவாக இருக்கும் என்பதால் நாம் திரவ உணவினை தேர்ந்தெடுப்பதுண்டு.
பெயரளவில் குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று நாம் சொன்னாலும் நாம் கொடுக்கும் உணவானது பெரும்பாலும் திரவ வடிவிலேயே இருக்கும்.
மேலும் பழச்சாற்றினை குழந்தைகளுக்கு அருந்த கொடுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பழங்களில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது என்பதால் அதனை ஜூஸ் வடிவில் கொடுக்கும்பொழுது குழந்தைகளுக்கும் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும் என்று நாம் நினைப்பதுண்டு.
மேலும் திட உணவினை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது உணவானது மேலும்,கீழும் சிந்தி ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ஆனால் பழச்சாற்றினை சிப்பரில் ஊற்றி குழந்தைகளுக்கு எளிதாக அருந்த கொடுக்கலாம்.
எனவே அம்மாக்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த திருப்தி கிடைக்கும். ஆனால் உண்மையில் பழச்சாறு வடிவில் கொடுக்கும்போது பழங்களில் இருக்கும் அனைத்து வைட்டமின்களும் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
பழச்சாறு அருந்துவது என்பதை பழங்களை உண்பதைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலான பழங்களில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள்,மினரல்ஸ் மற்றும் போலிக் ஆசிட் ஆகியவை நிறைந்திருக்கும்.எனவே பழங்களை உண்ணும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
ஆனால் ஜூஸ் கொடுக்கும்பொழுது பழங்களின் தோல் பகுதி மற்றும் சதைப்பகுதி ஆகியவை முற்றிலும் நீக்கப்படுவதால் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் மற்றும் முக்கியமான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை.
குறைந்த அளவு சத்துக்களும்,அதிக அளவு சர்க்கரை மட்டுமே குழந்தைகளுக்கு மிஞ்சும் எனவே, பழங்கள் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை ஒப்பிடும்போது பழங்கள் மட்டுமே முற்றிலும் சிறந்தது. கூற்று படி பழச்சாற்றில் சர்க்கரை மட்டுமே நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஒரு வயது வரை பழச்சாறு அருந்த கொடுக்கக்கூடாது.
மேலும் பழச்சாற்றுடன் ஒப்பிடும் பொழுது காய்கறி சாற்றில் சர்க்கரை குறைவாக இருந்தாலும், உப்பு சத்து அதிகம் இருப்பதால் அதுவும் குழந்தைக்கு ஒரு வயது வரை ஏற்றதல்ல.
மேலும்,குழந்தைகளுக்கு ஒரு வயது கடந்த பின்னரும் பழங்களை மட்டுமே முதல் தேர்வாக வைத்திருங்கள்.ஜுஸ் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை கொடுக்கலாம்.
Juice for Babies in Tamil:
குழந்தைகளுக்கு பழச்சாறு எவ்வளவு கொடுக்கலாம்?
- 1 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள்- ஒரு நாளைக்கு நாலு அவுன்ஸ் கொடுக்கலாம்.
- 4 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் -4 முதல் 6 அவுன்ஸ் கொடுக்கலாம்.
- 7 முதல் 18 வயது- ஒரு கப் முதல் இரண்டரை கப் வரை அருந்தலாம்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:
- குழந்தைகளுக்கு பீடிங் பாட்டில் மற்றும் சிப்பர்களில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.அவை குழந்தைகளின் ஈறுகளை பாதிக்கக் கூடும் என்பதால் கப் மற்றும் டம்ளரில் கொடுங்கள்.
- இரவு நேரம் படுக்க செல்வதற்கு முன் ஜூஸ் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
- பழச்சாற்றில் சர்க்கரை அதிக அளவு இருக்கக்கூடும் என்பதால் தண்ணீர் ஊற்றி ஜூஸ் கொடுப்பது நல்லது.
- டப்பாக்களில் அடைத்து வரும் பிரேசெர்வேட்டிவ்ஸ் கலந்த பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
- குழந்தைகளுக்கு பழச்சாறு அருந்த கொடுத்தாலும் குழந்தைகள் மற்ற உணவுகளையும்,ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Juice for Babies in Tamil
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுப்பது சிறந்ததா?
குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுப்பதை விட பழங்களாக அப்படியே சாப்பிட கொடுப்பது அதன் நார்ச்சத்துக்களை குழந்தைகள் தக்க வைத்துக் கொள்ள மிகவும் உதவும்.
எப்பொழுது குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு பொதுவாக பழங்கள் கொடுப்பது சிறந்தது. அப்படி நீங்கள் ஜூஸ் கொடுக்க நினைத்தால் பகல் நேரத்தில் சர்க்கரை சேர்க்காமல் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு மேல் சிறிதளவு கொடுக்கலாம்.
6 மாத குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கலாமா?
ஆறு மாத குழந்தைகளுக்கு நீங்கள் பழங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால். ஆப்பிள் போன்ற பழங்களை இட்லி குக்கரில் வேக வைத்து பின்பு அதனை மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். முதல் முதலாக கொடுக்கும்போது குழந்தைகளுக்கு மூன்று நாள் விதிகளை பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆறு மாத காலங்களில் என்னென்ன பழங்கள் குடிக்கலாம்?
குழந்தைகளுக்கு முதல் முதலாக கொடுக்கும் பொழுது ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களை கொடுப்பது சிறந்தது. அதன் பின் பப்பாளி,சப்போட்டா போன்ற பழங்களை மசித்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
Leave a Reply