sathu maavu recipe: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு தான் அதிகம் பேர் பார்த்த ஒரு பதிவாக இருக்கிறது. இதனை எப்படி எளிதாக தயாரிக்கலாம் என்பதையும் இங்கு கொடுத்துள்ளதால் இதற்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது.
என் அம்மா இதனை தயாரிக்கும் போது அவர்கள் கூடவே இருந்து இதனை பார்த்து கற்றுக் கொண்டேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…
சாதாரண முறையில் தயாரிக்கப்படும் சத்துமாவும் நல்லது தான். ஆனால் முளைகட்டியபிறகு தயாரிக்கப்படும் சத்துமாவில் அதிகளவிலான சத்துகள் நிரம்பியிருக்கிறது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
sathu maavu recipe for toddlers:
குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு தான் அதிகம் பேர் பார்த்த ஒரு பதிவாக இருக்கிறது. இதனை எப்படி எளிதாக தயாரிக்கலாம் என்பதையும் இங்கு கொடுத்துள்ளதால் இதற்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது.
என் அம்மா இதனை தயாரிக்கும் போது அவர்கள் கூடவே இருந்து இதனை பார்த்து கற்றுக் கொண்டேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…
சாதாரண முறையில் தயாரிக்கப்படும் சத்துமாவும் நல்லது தான். ஆனால் முளைகட்டியபிறகு தயாரிக்கப்படும் சத்துமாவில் அதிகளவிலான சத்துகள் நிரம்பியிருக்கிறது.
முளைகட்டிய சத்துமாவு குழந்தைகளுக்கு ஏன் நல்லது என்கிறோம்?
1. முளைகட்டுவதன் மூலம் தானியத்தில் இருக்கும் சத்துகள் பல மடங்கு அதிகமாகறிது.
2. முளைகட்டி தயாரிக்கும் முறையை எளிதாகவே செய்ய முடியும். இதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, துத்தநாக சத்து, வைட்டமின் சி சத்துகள் அனைத்தும் கிடைக்கும்.
முளைகட்டி சத்துமாவு தயாரிக்கும் முறை சிலருக்கு சோர்வை தரும் ஒரு செயலாக மாறிவிடும். ஆனால் இதை தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் கவனமாக இருத்தல் அவசியம். இது என் அம்மாவின் கைப்பக்குவத்தில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட முறை. இதுதொடர்பாக நிறைய பேர் கேட்டதன் காரணமாக இப்போது புதிதாக மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்…
பொருட்களை தேடி அலைந்து வாங்குவது, வறுப்பது, அரைப்பது என நேரம் செலவாகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?
எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட சத்துமாவை வாங்கி பயன்படுத்துங்கள்…
sathu maavu ingredients list:
குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவை தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள் :
இதில் நாங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் முளைகட்டி பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எந்த பொருட்களை எல்லாம் முளைகட்டி பயன்படுத்த முடியுமோ அவற்றை மட்டும் செய்யுங்கள்…
- சாதாரண அரிசி அல்லது ப்ரவுன் ரைஸ் – 200 கிராம்
- கோதுமை – 200 கிராம்
- கேழ்வரகு – 200 கிராம்
- கம்பு – 200 கிராம்
- பொட்டுக்கடலை – 200 கிராம்
- பச்சைப்பயறு – 200 கிராம்
- உளுந்து – 200 கிராம்
- சோளம் – 200 கிராம்
- ஜவ்வரிசி – 200 கிராம்
- நிலக்கடலை – 200 கிராம்
- கொண்டைக்கடலை அல்லது சுண்டல் – 200 கிராம்
- கொள்ளு – 100 கிராம்
- தட்டைப்பயறு – 100 கிராம்
- ஓமம் – 10 கிராம்
- சுக்கு – 10 கிராம்
- ஏலக்காய் – 15 கிராம்
- முந்திரி – 100 கிராம்
- பிஸ்தா – 100 கிராம்
- பாதாம் – 100 கிராம்
சத்துமாவில் சேர்க்கப்படும் பொருட்களை முளைகட்ட வைக்கும் முறை என்ன?
கீழ்கண்ட பொருட்களை முளைகட்டி பயன்படுத்த முடியும்
- கேழ்வரகு
- பச்சைப்பயறு
- உளுந்து
- சுண்டல்
- தட்டைப்பயறு
- கம்பு
- கொள்ளு
- கோதுமை
- சோளம்.
How to make sathu maavu in tamil:
செய்முறை :
1. முதலில் முளைகட்ட வேண்டிய தானியங்களில் உள்ள கற்கள் மற்றும் தூசிகளை நீக்கிவிட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
2. இதனை தனித்தனியாக ஒரு நாள் இரவு முழுவதும் அதாவது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
3. பின்னர் தண்ணீரை நன்றாக வடித்துக் கொள்ளவும்.
4. இந்த பொருட்களை எல்லாம் ஒரு காட்டன் துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொண்டு உலர்வான இடத்தில் வைக்கவும்.
5. இதனை சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்தால் அதிலிருந்து முளைகட்டிய வாசனை வரும். அதன்பிறகு அதனை எடுத்து பார்க்கவும். நீண்ட நேரம் வைத்திருந்தால் அதற்கேற்ற படி முழுமையாக முளைகட்டி இருக்கும்.
முளை கட்டிய தானியமானது கொஞ்சம் ஈரப்பதமாக இருக்கும். தொடும் போது கையில் ஒட்டிக் கொள்ளும் வகையில் இருக்கும். இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் தானியத்திலிருந்து அழுகிய நாற்றம் வந்தாலோ அல்லது பிசுபிசுப்பு தன்மை கொண்டதாக இருந்தால் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
இதையும் படிங்க:
பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்கவேண்டியவை…
கவனத்தில் கொள்ள வேண்டியது –
முளைகட்டுதல் என்பது தட்பவெப்ப சூழலை பொறுத்தும் தானியத்தின் வகையை பொறுத்தும் மாறுபடும். சில தானியங்கள் முளைகட்டுவதற்கு நீண்ட நேரம் கூட எடுத்துக் கொள்ளலாம்…
முளைகட்ட வைக்கும் போது கவனிக்க வேண்டியது:
பொதுவாக தானியங்கள் முளைகட்டுவதற்கு கதகதப்பான மற்றும் ஈரப்பதமான சூழலே சரியானது என The SafetyFood.org and FDA போன்ற அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இதுபோன்ற சூழலில் முளைகட்ட வைக்கும் போது சல்மோனில்லா, லிஸ்டீரியா மற்றும் ஈகோலி போன்ற பாக்டீரியாக்கள் உருவாகும்.
இதனை தவிர்க்க தான் முளைகட்டிய தானியங்களை நன்றாக வறுத்து பின் அதனை பொடித்துக் கொள்ளலாம் என உணவு மற்றும் மருந்துகளை நிர்வகிக்கும் அமைப்பு தெரிவிக்கிறது.
முளைகட்டிய தானியங்களை நன்றாக வறுக்கும் போது அதில் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன.
முளைகட்டிய தானியங்களை உலரவைப்பது
முளை கட்டிய தானியங்களை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்க வேண்டும்.
இதையும் படிங்க:வீட்டிலேயே கண்மை தயாரிப்பது எப்படி?
குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவை தயாரிப்பது எப்படி?
பொருட்களை வறுத்துக் கொள்ளும் முறை
1. தானியங்கள் முளை கட்டி காய வைத்த பிறகு, ஒவ்வொன்றையும் தனித்தனியாக கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
2. முந்திரி, பாதாம்,ஏலக்காய், ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, ஓமம் போன்ற பொருட்களை எல்லாம் நன்றாக சிவக்கும் படி கடாயில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளுங்கள்.
3. வறுத்த பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவும்.
இந்த பொருட்களுடன் சுக்கையும் சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை வீட்டில் அரைத்துக் கொள்வது கடினம் என்பதால் மில்லில் அரைத்துக் கொள்ளுங்கள்…
சத்துமாவு எப்படி தயாரிப்பது என்பதை படிப்படியாக உங்களுக்கு வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளோம்….
உங்களுக்கு வீட்டில் சத்துமாவு தயாரிக்க நேரமில்லையா? கவலை வேண்டாம். சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட மாவை உங்கள் முகவரிக்கே நாங்கள் அனுப்பி வைக்கிறோம்…
இதையும் படிங்க: குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்
சேமிக்கும் முறை:
முறையாக தயாரிக்கப்பட்ட சத்துமாவை நீங்கள் காற்றுப்புகாத ஒரு டப்பாவில் வைத்து ப்ரிட்ஜில் ஆறு மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். வெளியில் வைப்பதாக இருந்தால் 2 முதல் 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். பொதுவாக நான் மாவை மொத்தமாக அரைத்து டப்பர்வேர் பாக்ஸில் போட்டு வைத்து ப்ரிட்ஜில் வைத்து விடுவேன். வாரம் ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பயன்படுத்துவேன்…
6 முதல் 8 மாத குழந்தைக்கு சத்துமாவை கொடுக்கலாமா?
உலர் தானியங்கள் சேர்க்காத சத்துமாவை நீங்கள் கொடுக்கலாம். அதற்கு முன்னதாக நீங்கள் பருப்பு, கோதுமை, அரிசி போன்ற உணவு வகைகளை கொடுத்திருந்தால் சத்துமாவை நீங்கள் தாராளமாக கொடுக்கலாம். ஆனால் இதனை கொடுக்கும் போது நீங்கள் 3 நாள் விதிமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்…
8 மாத குழந்தைக்கு:
இதில் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் 8 மாத குழந்தைக்கு தாராளமாக கொடுக்கலாம். ஆனால் 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்.
சத்துமாவு கஞ்சியை எப்படி தயாரிப்பது?
அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் சத்துமாவை கலந்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை சூடுபடுத்தி நன்றாக ஒட்டும் பதம் வரும் வரை கிளறவும். நன்றாக மணம் வரும் போது இதனை இறக்கவும்.
ஒரு வருடத்திற்கு மேற்பட்ட குழந்தை எனில் ஒரு டேபிள் ஸ்பூன் பசும்பாலை இதனுடன் சேர்த்து கொடுக்கலாம்…
என்னுடைய குழந்தைக்கு இதனை செய்யும் போது ஒரு டேபிள் ஸ்பூன் மாவிற்கு 100 மில்லி பாலை கலந்து கொடுத்தேன்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட சத்துமாவை வாங்கி பயன்படுத்துங்கள்…
Leave a Reply