Protein Smoothie in Tamil: வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலின் தசைகள், எலும்புகள், தலைமுடி போன்ற எல்லாவற்றுக்கும் புரதச்சத்து எனப்படும் புரோட்டீனின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவேதான் புரதச்சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவினை குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே கொடுப்பதற்கு நான் பரிந்துரை செய்கின்றேன். உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் வளர்ச்சிக்கும் புரதம் என்பது மிகவும் அவசியமாகின்றது.
புரதம் பொதுவாக பருப்பில் உள்ளது என்று நாம் அனைவரும் அறிவோம். அது மட்டுமல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள பொருட்களை எல்லாம் வைத்து சுவையாக ஸ்மூத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் அல்லவா! இந்த புரோட்டின் ஸ்மூத்தி குழந்தைகளுக்கு சத்தான காலை உணவாக அமையும்.
- மேலும் இதில் ஆரோக்கியமான பழங்கள், நட்ஸுகள் மற்றும் ஆரோக்கியமான விதைகள் சேர்த்திருப்பதால் மிகவும் நன்மை அளிக்கக் கூடியது.
- இதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் இதைக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்:
- இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்ஸ் போன்றவற்றை தரக்கூடியது.
- இந்த ஸ்மூத்தியில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்திருப்பதால் மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் சேர்க்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் நட்ஸுகளில் உடலுக்கு தேவையான நார்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கக் கூடியது.
- மேலும் பாதாம் பருப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை வெளியேற்றி இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
- வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்றவை ஆரோக்கியமான சரும மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை அளிக்க கூடியது.
- இதில் சேர்க்கப்பட்டுள்ள உட் பொருள்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான எடை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- மேலும் பழங்கள் மற்றும் நட்ஸுகள் நிறைந்த ஸ்மூத்தியை குடிக்கும் பொழுது குழந்தைகளுக்கு எனர்ஜியை தருகின்றது. குறிப்பாக கோடை காலங்களில் உடல் சூட்டினை தவிர்த்து குழந்தைகளின் உடலினை நீர் சத்துடன் வைப்பதற்கு இந்த ஸ்மூத்தி மிகவும் உதவுகின்றது.
Protein Smoothie in Tamil
Protein Smoothie in Tamil:
- வாழைப்பழம்-1
- ஆப்பிள்-1
- பேரிச்சை-1
- பாதாம்- 10
- ஐஸ் கட்டிகள்
- ஆளி விதைகள்-1டேபிள் ஸ்பூன்
- சியா விதைகள்-1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்-அரை கப்
Protein Smoothie in Tamil:
செய்முறை
- வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஆப்பிளின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- பேரிச்சம் பழத்தின் கொட்டையை நீக்கவும்.
- பாதாம் பருப்பினை சில மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- நறுக்கி வைத்த வைத்த வாழைப்பழம், ஆப்பிள், பேரிச்சை, பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- தண்ணீரை சேர்க்கவும். ஸ்மூத்தி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும்.
- சிறிதளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து ஒரு அடி அடிக்கவும்.
- உங்களுக்கு பிடிக்கும் என்றால் பசும்பால் அல்லது தேங்காய் பால் போன்றவற்றை சேர்க்கலாம்.ஐஸ் கட்டிகள் தேவைப்படவில்லை என்றால் அதனை சேர்க்காமலும் செய்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Protein Smoothie in Tamil
Protein Smoothie in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
புரோட்டின் குழந்தைகளுக்கு அவசியமானதா?
வளரும் குழந்தைகளுக்கு தசைகள், எலும்புகள் மற்றும் மூளைகள் ஆகிய அனைத்து உறுப்புகளின் வளர்ச்சிக்கும் புரோட்டின் மிகவும் அவசியமாகும்.
புரோட்டின் ஸ்மூத்தியை எத்தனை முறை கொடுக்க வேண்டும்?
இதில் அனைத்து பழங்கள் மற்றும் நட்ஸ்கள் சேர்த்துள்ளதால் வாரம் இருமுறை கொடுக்கலாம்.
இதைத் தவிர வேறு பழங்கள் சேர்க்கலாமா?
ஆம் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஹெல்தியான புரோட்டின் ஸ்மூத்தி
Ingredients
- வாழைப்பழம்-1
- ஆப்பிள்-1
- பேரிச்சை-1
- பாதாம்- 10
- ஐஸ் கட்டிகள்
- ஆளி விதைகள்-1டேபிள் ஸ்பூன்
- சியா விதைகள்-1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்-அரை கப்
Notes
- வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஆப்பிளின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- பேரிச்சம் பழத்தின் கொட்டையை நீக்கவும்.
- பாதாம் பருப்பினை சில மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- நறுக்கி வைத்த வைத்த வாழைப்பழம், ஆப்பிள், பேரிச்சை, பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- தண்ணீரை சேர்க்கவும். ஸ்மூத்தி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும்.
- சிறிதளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து ஒரு அடி அடிக்கவும்.
உங்களுக்கு பிடிக்கும் என்றால் பசும்பால் அல்லது தேங்காய் பால் போன்றவற்றை சேர்க்கலாம். - ஐஸ் கட்டிகள் தேவைப்படவில்லை என்றால் அதனை சேர்க்காமலும் செய்து கொள்ளலாம்.
Leave a Reply