Ragi Recipe in Tamil :வெயில் காலம் வந்து விட்டாலே சூட்டை தணிப்பதற்கு நம் முன்னோர்கள் பெரும்பாலும் அருந்தியது கேப்பைக்கூழ்,கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு போன்றவைதான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் பெருகி வரும் நவநாகரீக காலத்தில் கூழ் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல்தான் நம்மில்பலரும் இருக்கின்றோம்.ஆனால் நம் வருங்கால சந்ததியினருக்கு பழங்கால உணவின் அருமைகளை எடுத்துரைக்கவேண்டியது நம்கடமை.
வெயில் காலம் வந்தவுடனே நாம் அருந்தும் கூல்ட்ரின்க்ஸ் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்களில் பெரும்பாலும் இருப்பவை ரசாயனம்தான்.
அவற்றை தவிர்த்து இயற்கை பானங்களான இளநீர் ,பதநீர்,நுங்கு போன்றவற்றை தருவது உடலுக்கு நம்மை விளைவிக்கும். நாம் இப்பொழுது கேப்பை கூழ் எனப்படும் ராகி கூழிற்கு வரலாம்.
நாம் வழக்கமாக காய்ச்சும் விதத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களை குடிக்க வைப்பது சற்று சிரமம்தான்.அவ்வாறெனில் எப்படி கொடுக்கலாம் என்று கேட்கின்றீர்களா? அதற்கான ரெசிபிதான் இந்த முளைகட்டிய ராகி மில்க்ஷேக்.
இதில் வழக்கமான ராகி பயன்படுத்தாமல் முளைகட்டிய ராகி சேர்த்துள்ளதால் சுவை இன்னும் சற்று கூடுதலாக இருக்கும்.மேலும் குழந்தைகளுக்கு பிடித்த டெஸ்டில் ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்த்துள்ளதால் குழந்தைகள் விரும்பி பருகுவர்.
முளைக்கட்டிய ராகியில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம்.மேலும் இதில் வைட்டமின்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மினெரல்ஸ்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் உடலுக்கு நன்மையளிக்கக்கூடியது.
Ragi Koozh Recipe in Tamil :
ராகியின் நன்மைகள்
- இயற்கையாகவே ராகியில் கால்சியம் சத்துக்கள் அதிகமிருப்பதால் குழந்தைகளின் சீரான எலும்பு வளர்ச்சி உதவுகின்றது.
- குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும் கூடியது.
- முளைக்கட்டிய ராகியில் நார்ச்சத்துக்கள் அதிகமிருப்பதால் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை வராமல் தடுக்கின்றது .
- ராகியில் இரும்பு சத்துக்கள் அதிகம்.
- வெயில் காலத்தில் ராகியினை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்கின்றது .
- தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைந்து தோலிற்கு பளபளப்பினை அளித்து இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்கின்றது.
ஏன் முளைகட்டிய ராகி சாதாரண ராகியை காட்டிலும் சிறந்தது ?
- முளைகட்டிய ராகியில் உள்ள இரும்புச்சத்தானது சாதாரணமான ராகியினை காட்டிலும் பத்து மடங்கு அதிகம்.
- வைட்டமின் பி 12 , மினரல்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை அதிகம்.
- முளைகட்டிய ராகியில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலானது எளிதில் கிரகிக்கின்றது.
- இதில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை சாதாரணமான ராகியை காட்டிலும் பல மடங்கு அதிகம்.
தேவையானவை
- முளைகட்டிய ராகி பவுடர் -4 டே.ஸ்பூன்
- தண்ணீர்- அரை கப்
- வெல்லத்தூள்- 2 டே.ஸ்பூன்
- கோகோ பவுடர் ஒரு டீஸ்பூன்
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர்– 2 டீஸ்பூன்
- பால் -ஒரு கப்
செய்முறை
1.மிதமான தீயில் வைத்து முளைகட்டிய ராகி பவுடரையும் தண்ணீரையும் சேர்த்து நன்கு கரைக்கவும்.
2.கட்டிகள் இல்லாமல் கரண்டியால் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
3.வெல்லத்தூள் மற்றும் கொக்கோ பவுடர் சேர்க்கவும்.
4.சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
5.டிரை ப்ரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
6.மிக்ஸி ஜாரில் ராகி கலவை,சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
7.மீதமுள்ள பால் சேர்த்து கலக்கவும்.
8.குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக் ரெடி.
இந்த சத்துள்ள சுவையான ட்ரிங்கினை வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நலம்.குழந்தைகளுக்கு ஒரு வயது வரை மாட்டுப்பால் கொடுக்கக்கூடாது என்பதால் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த டிரிங்கினை கொடுக்கலாம்.மேலும் இதில் சீனி சேர்க்காமல் சர்க்கரை சேர்த்துள்ளதால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு நன்மையளிக்கக்கூடியது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ராகி குடித்தால் உடல் எடையினை அதிகரிக்குமா?
ராகியில் பொதுவாகவே நார்ச்சத்துக்கள்,வைட்டமின்கள்,இரும்புச்சத்துக்கள் மற்றும் கால்சியம் அதிகம்.இது மிகசிறந்த ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்கின்றது.
குழந்தைகளுக்கு ராகியினை தினமும் கொடுக்கலாமா?
சத்துள்ளதாக இருப்பதால் குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு எத்தனை மாதத்தில் ராகி கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திலிருந்தே ராகி கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்
Ingredients
- முளைகட்டியராகி பவுடர் – 4 டே.ஸ்பூன்
- தண்ணீர்-அரை கப்
- வெல்லத்தூள்-2 டே.ஸ்பூன்
- கோகோபவுடர் -1 டீ.ஸ்பூன்
- டிரைஃப்ரூட்ஸ் பவுடர் -2 டீ.ஸ்பூன்
- பால்-ஒரு கப்
Instructions
- மிதமானதீயில் வைத்து முளைகட்டிய ராகி பவுடரையும் தண்ணீரையும் சேர்த்து நன்கு கரைக்கவும்.
- கட்டிகள்இல்லாமல் கரண்டியால் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்
- வெல்லத்தூள்மற்றும் கொக்கோ பவுடர் சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர்சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- டிரை ப்ரூட்ஸ்பவுடர் சேர்க்கவும்.
- மிக்ஸி ஜாரில் ராகி கலவை,சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மீதமுள்ள பால்சேர்த்து கலக்கவும்.
- குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக் ரெடி
Leave a Reply