Samai Pongal in Tamil: சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வரும் ஒன்று. மருத்துவர்களும் அதனையே பரிந்துரைப்பதால் தற்பொழுது சிறுதானியங்களை வைத்து விதவிதமாக என்னென்ன உணவுகள் சமைக்கலாம் என்று இணையதளத்தில் தேடுபவர்கள் நம்மில் ஏராளம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உண்மையில் அவை அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் நார்ச்சத்துக்களை பலமடங்கு கொண்டிருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
மேலும் நார்ச்சத்துக்கள் மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,மினரல்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இதில் அதிகம் தான்.
சிறுதானியங்கள் எனப்படும் நாம் பாரம்பரிய தானியங்களில் பல வகைகள் உண்டு என்றாலும் நாம் பெரும்பாலும் அறிந்தது கம்பு மற்றும் கேழ்வரகு.
இதைத்தவிர்த்து திணை, வரகு,குதிரைவாலி ,சோளம், சாமை போன்ற பல்வேறு ஆரோக்கியமான தானியங்களும் அடக்கம். இவற்றில் இன்று நாம் பார்க்க விருப்பது சாமை அரிசி பொங்கல்.
சிறுதானியங்கள் என்று தேடலில் அழுத்தினால் விதவிதமான ரெசிப்பிகள் கிடைக்கும் ஆனால் அவற்றினை குழந்தைகளுக்கு ஏற்றவாறு எப்படி செய்து கொடுப்பது என்று அனைத்து அம்மாக்களுக்கும் சந்தேகமாக உள்ளது
.உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிப்பதற்கான தான் குழந்தைகளுக்கு விதவிதமான சிறுதானிய உணவுகளை நாங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றோம்.
அவற்றில் இன்று நீங்கள் பார்க்கவிருக்கும் ஓர் எளிமையான ரெசிபி தான் சாமை அரிசி பொங்கல். குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்காமல் எளிதில் செரிமானம் ஆகும் விதத்தில் எப்படி செய்யலாம் என்று தான் இந்த ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரெசிப்பியினை சர்க்கரை சேர்க்காமல் குழந்தைகளுக்கு எட்டு மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
Samai Pongal in Tamil:
- சாமை 1 கப்
- கோகனட் சுகர் – 2 டே.ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/4 டீ.ஸ்பூன்
- குங்குமப்பூ – 2-3
சாமையின் மருத்துவ குணங்கள்:
- சாமையில் கால்சியச் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு பலம் அளிக்கக் கூடியது.
- சாமையில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கக்கூடியது.
- நாம் சாதாரணமாக உண்ணும் அரிசியைவிட சாமையில் நார்ச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் சர்க்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
- மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்சிக்கு உதவுகின்றது.
- இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.
- கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கக்கூடியது.
- சுண்ணாம்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது மேலும் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடியது.
Samai Pongal in Tamil:
செய்முறை
1. சாமை அரிசியினை 2-3 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
2.கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
3.தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த சாமை சேர்க்கவும்.
4.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர்க்கு பதிலாக பால் சேர்க்கவும்.
5.மிதமான தீயில் சில நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
6.20 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து இடையில் கிளறிக்கொண்டு இருக்கவும்.
7.கோகொனட் சுகர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
8.ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
குறிப்பு : ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கோகொனட் சுகர் சேர்க்க வேண்டாம்.
9.குங்குமப்பூ தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
சாமை அரிசி பொங்கல்
Ingredients
- சாமை-1 கப்
- கோகனட்சுகர் – 2 டே.ஸ்பூன்
- ஏலக்காய்தூள் – 1/4 டீ.ஸ்பூன்
- குங்குமப்பூ– 2-3
Notes
- சாமை அரிசியினை 2-3 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
- கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த சாமை சேர்க்கவும்.
- ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர்க்கு பதிலாக பால் சேர்க்கவும்.
- மிதமான தீயில் சில நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- 20 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து இடையில் கிளறிக்கொண்டு இருக்கவும்.
- கோகொனட் சுகர் சேர்த்து நன்றாகா கலக்கவும்.
- ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
- குறிப்பு : ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கோகொனட் சுகர் சேர்க்க வேண்டாம்.
- குங்குமப்பூ தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply