Strawberry Banana Puree for Babies in Tamil: ஆறு மாத காலத்தை எட்டியவுடன் நம் செல்ல குழந்தைகளின் சுவை மொட்டுகள் திட உணவினை சுவைக்க ஆரம்பித்திருக்கும்.ஆப்பிள்,வாழைப்பழம்,பேரிக்காய் , உருளைகிழங்கு என அனைத்து ரெசிபிகளையும் கிட்டத்தட்ட சுவைத்திருப்பார்கள். வழக்கமான காய்கறி மற்றும் பழக்கூழ்கள் நம் குழந்தைகளுக்கு போர் அடிக்க ஆரம்பித்திருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அவர்களுக்கு வித்யாசமான பிளேவரில் செய்து கொடுக்கக்கூடிய சுவையான ரெசிபிதான் ஸ்ட்ராவ்பெர்ரி வாழைப்பழக்கூழ். இனிப்பு சுவையுடன் லேசான புளிப்பு சுவையும் கலந்த இந்த பழக்கூழை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்
ஸ்ட்ராவ்பெர்ரி வாழைப்பழ கூழ்
- ஸ்ட்ராவ்பெர்ரி – 3-4
- வாழைப்பழம் -1
Strawberry Banana Puree for Babies in Tamil:
செய்முறை
1.ஸ்ட்ராவ்பெரியினை நன்றாக கழுவி வெளியில் உள்ள முட்கள் போன்ற பகுதியினை சுரண்டி எடுக்கவும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2.வாழைப்பழத்தினை சிறு சிறு துண்டுகளாக்கவும்.
3.வெட்டி வைத்த பழங்களை நன்றாக மசிக்கவும் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
4.குழந்தைகளுக்கு பிரெஷாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு வழக்கமான திட உணவு ஆரம்பித்தவுடன் ஏழாவது மாதத்திலிருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம். கொடுப்பதற்கு முன்பு மூன்று நாள் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.குழந்தைகளை கவரும் வண்ணத்துடன் இருப்பதால் விரும்பி உண்பார்கள் இரண்டே இரண்டு பழங்களுடன் எளிதில் செய்து கொடுக்கலாம்.
கடைகளில் ஸ்ட்ராவ்பெரி பழங்களை வாங்கும் பொழுது பிரெஷான பழங்களை வாங்குவது சிறந்தது.வாழைப்பழத்திலும் , ஸ்ட்ராவ்பெரியிலும் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் சத்தான ரெசிபியாக இருக்குமென்பதில் ஐயமில்லை undefined
இதையும் படிங்க: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை…
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply