Sweet Potato Brownie: இப்பொழுதெல்லாம் பேக்கரிகளில் உலா வரும் விதவிதமான கேக்குகள் தான் குழந்தைகளை கவர்கின்றன. அவற்றில் விதவிதமான நிறங்களில் எசன்ஸ்கள் கலப்பதினால் அம்மாக்கள் தற்பொழுது ஆரோக்கியமான தேர்வுகளையே தேட ஆரம்பித்துள்ளனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அந்த வகையில் பேக்கரி வகைகளை தற்போது உருவெடுத்து இருக்கும் ஒரு நல்ல மாற்றம் தான் பிரவுனிகள் என்று சொல்லலாம். மைதா வகைகள் மட்டுமே நம் குழந்தைகளுக்கு கேக்குகளாக கொடுத்து வந்த காலம் போய் கேக்குகளையும் சத்தா கொடுக்கலாம் என்று தற்பொழுது இந்த பிரவுனி மாற்றம் பரவி வருகின்றது.
இவற்றிலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வகையில் மைதா மாவு கலக்காமல் கோதுமை மாவு மற்றும் நட்ஸ்,சத்து மாவு, பழங்கள், உலர் பழங்கள் சேர்த்து பல வகையான பிளேவர்களில் இவை கிடைக்கின்றன.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி வித்தியாசமான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சக்கரை வள்ளி கிழங்கு பிரௌனி.
Sweet Potato Brownie:
சக்கரவள்ளி கிழங்கு வைத்து குழந்தைகளுக்கு தோசை, பிங்கர் புட்ஸ் போன்றவற்றை எப்படி தரலாம் என்று பல வகையான ரெசிபிகளை நாம் பார்த்திருப்போம். என்று குழந்தைகளுக்கு பிடித்தமான பிரவுனி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அதற்கு முன்னால் சக்கரவள்ளி கிழங்கில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்.
- சக்கரவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் குழந்தைகளின் கண் பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் இவை உதவுகின்றன.
- மேலும் சருமத்தின் நிறம் பளபளப்பாக இருப்பதற்கும் இவை துணை புரிகின்றன.
- சர்க்கரைவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால் குழந்தைகள் வேகமாக விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை தருகின்றன.
- இதில் நிறைந்துள்ள விட்டமின் பி மற்றும் மாங்கனிஸ் போன்றவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- இதில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- அது மட்டுமல்லாமல் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கு தேவையான எதிர்ப்பு சக்தியை தரவல்லது.
- இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது. மேலும் ரத்த கொதிப்பு வராமல் தடுக்க வல்லது.
- இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற கிழங்காகும்.
Sweet Potato Brownie
- வேக வைத்த மசித்த சக்கரவள்ளி கிழங்கு – 1 கப்
- கோதுமை மாவு -அரை கப்
- கோகோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சக்கரை- கால் கப்
- வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- பால் – கால் கப்
- நறுக்கிய நட்ஸ் – டேபிள் ஸ்பூன்
Sweet Potato Brownie
செய்முறை
- சக்கரைவள்ளி கிழங்கினை வேகவைத்து அதன் தோலை நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
- ஒரு பவுலில் மசித்த சக்கரைவள்ளி கிழங்கு நாட்டு சக்கரை மற்றும் பட்டர் சேர்க்கவும்.
- அதனுடன் கோதுமை மாவு, கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சிறிதளவு பால் சேர்த்து மாவு பதத்திற்கு அதனை கலக்கவும்.
- கேக்கினை பேக் செய்யும் ட்ரேயில் இந்த மாவினை பரப்பி சமமாக்கவும் .
- 20 முதல் 25 நிமிடங்களுக்கு 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பேக் செய்யவும் .
- நறுக்குவதற்கு முன்னால் ஆறவிடவும்.
- பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுக்க நினைத்தால் அதற்கு இந்த சக்கரவள்ளி கிழங்கு பிரௌனி நல்ல தேர்வு ஆகும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Sweet Potato Brownie

அடக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த கேக்கினை கொடுக்கலாம்.
ஓவன் இல்லாமல் இதனை செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். பேக் செய்வதற்கு பதிலாக 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து எடுக்கலாம்.
கேக்கினை எத்தனை நாட்களுக்கு வைத்திருக்கலாம் ?
டப்பாவில் வைத்து பிரிட்ஜில் சேமித்து மூன்று நாட்கள் வரை வைத்திருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்னால் சூடு செய்து கொடுக்க வேண்டும்.
சக்கரை வள்ளி கிழங்கு பிரவுனி கேக்
Ingredients
- வேகவைத்து மசித்த சக்கரவள்ளி கிழங்கு- 1 கப்
- கோதுமை மாவு- அரை கப்
- கோகோ பவுடர்- 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சக்கரை - கால் கப்
- வெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
- பால்- கால் கப்
- நறுக்கிய நட்ஸ்- 1 டேபிள் ஸ்பூன்
Notes
- சக்கரைவள்ளி கிழங்கினை வேகவைத்து அதன் தோலை நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
- ஒரு பவுலில் மசித்த சக்கரவல்லி கிழங்கு, நாட்டு சக்கரை மற்றும் பட்டர் சேர்க்கவும்.
- அதனுடன் கோதுமை மாவ, கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சிறிதளவு பால் சேர்த்து மாவு பதத்திற்கு அதனை கலக்கவும்.
- கேக்கினை பேக் செய்யும் ட்ரேயில் இந்த மாவினை பரப்பி சமமாக்கவும்.
- 20 முதல் 25 நிமிடங்களுக்கு 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பேக் செய்யவும்.
- நறுக்குவதற்கு முன்னால் ஆறவிடவும்.











Leave a Reply