Verkuru veetu vaithiyam: கோடை காலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது ஐஸ்கிரீம் , மாம்பழம், விடுமுறை,தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களின் வீடு. கையில் குச்சி ஐஸுடன் தெருவெங்கும் சுற்றி திரிந்த காலங்களை மறக்க முடியாது அப்படித்தானே! ஆனால் அதனுடன் வெயில்,வியர்வை மற்றும் வியர்க்குரு போன்றவைகள் எரிச்சலூட்டும் என்பவை மறுக்க முடியாத ஒன்று.அதிலும் வியர்க்குரு வந்துவிட்டால் உடல் முழுவதும் முள் குத்துவது போன்ற அரிப்பு ஏற்படும். நம்மை விட குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.ஏனென்றால் குழந்தைகளுக்கு வியர்வை சுரப்பிகளின் வளர்ச்சி இன்னும் முழுமையடைந்திருக்காது.இதற்கு நாம் கடைகளில் கிடைக்கும் வித விதமான பவுடர்களை உபயோகிப்போம்.இப்பொழுது நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கையாக எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

வியர்க்குரு எதனால் ஏற்படுகிறது?
வியர்வைச் சுரப்பிகளிலிருந்து வியர்வை சுரந்து வெளியில் வரும் வழியில் ஏற்படும் அடைப்புகளே வேர்க்குரு உண்டாவதற்கான முதன்மைக் காரணமாகும். கோடைக்காலங்களில் வெப்பத்தின் காரணமாக அதிகமான வியர்வை சுரந்து, வியர்வை நாளங்கள் அடைக்கப்பட்டு, சிறு சிறு சிவந்த கொப்புளங்கள் உண்டாகின்றன.
Verkuru veetu vaithiyam:
ஐஸ்கட்டி

வியர்க்குரு ஏற்பட்டால் அரிப்பு அதிகமாக இருக்கும்.ஐஸ் கட்டிகள் இதற்கு சிறந்த வீட்டு வைத்தியமாகும். வேர்க்குரு உள்ள சருமத்தின் மீது ஐஸ்கட்டிகளைக் கொண்டு தேய்த்தால் குத்தும் உணர்வை இதமாக்கி வீக்கத்தினை வற்றச் செய்யும்.
கற்றாழை

கற்றாழையை தோல்களின் தோழன் என்றே கூறலாம்.வியர்க்குருவிற்கும் இது சிறந்த மருந்தாக அமைகிறது.கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் போன்ற பசையை வேர்க்குருவின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வியர்க்குரு விரைவில் குணமாகும்
இதையும் படிங்க: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை.
ஓட்ஸ்

குளிப்பதற்கு சிறிது நேரம் முன்பு தண்ணீரில் சிறிது ஓட்ஸ் போட்டு ஊற வைக்கவும்.அந்த தண்ணீரை உடல் முழுவதும் படும்படி நன்றாக ஊற்றவும்.ஒரு நாளைக்கு இரு முறை ஓட்ஸ் தண்ணீரால் குளிக்க நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனம்

தூய்மையான சந்தனம் அல்லது சந்தனப்பவுடர் போன்றவற்றை பன்னீர் கலந்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவவும்.சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பிலை

சிறிது வேப்பிலைகளை எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு மை போன்று விழுதாக அரைத்துக் கொள்ளவும். இவ்விழுதினை வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவவும். நன்கு உலர்ந்த பின் குளிக்கவும். வேப்பிலையில் உள்ள கிருமிநாசினி சக்தியானது, வேர்க்குரு தோன்றக் காரணமான கிருமிகளைக் கொன்று, சருமத்திற்கு உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. மேலும் வேறு சரும நோய்கள் ஏற்படாவண்ணமும் தடுக்கிறது.
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை விழுதாக அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் பூசி 2- 3 மணி நேரம் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் குளிக்க வியர்க்குரு குணமாகும்.
பருத்தி ஆடை

வியர்குருவினை தவிர்க்க மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.குழந்தைகளுக்கு வியர்க்குரு ஏற்பட்ட இடத்தினை ஆடைகளிட்டு மறைக்காமல் இருப்பது வியர்க்குரு விரைவில் குணமடைய வழி செய்யும்.
குளிர்ந்த நீரில் குளிக்கவும்

பெரும்பாலும் சோப்புகள் உபயோகிப்பதை தவிர்க்கவும். நலங்கு மாவு போன்றவற்றை உபயோகித்து குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
உடலை உலர வைக்கவும்

குளித்து முடித்த பின் உடலினை மெல்லிய பருத்தி துணிகள் கொண்டு மெதுவாக ஒத்தி எடுக்கவும்.இது பூஞ்சை தொற்றை வளர விடாமல் தடுக்கிறது.
வெயிலில் செல்வதை தவிர்க்கவும்

வெயில் காலங்களில், வெயிலில் செல்லாமல், நிழலிலோ, ஏர்கன்டிஷனரிலோ, சற்றுத் தொலைவிலுள்ள மின்விசிறிக் காற்றிலோ, இருக்க வேண்டும். இதனால் வியர்க்காமல் இருப்பதோடு, வேர்க்குருவும் வராது.

இதையும் படிங்க: குழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்.
Leave a Reply