Vitamin-d rich foods in tamil: கொரானா காலகட்டத்தில் சூரிய ஒளி கிடைக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி-யினை அதிகரிக்கும் 5 உணவு வகைகளை காணலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம் உடலின் சீரான வளர்ச்சிக்கும் வைட்டமின்களுக்கும் மறைமுக தொடர்பு எப்பொழுதுமே உண்டு. ஏன் நம் உடலில் ஏற்படும் சிறு சிறு வலிகளுக்கும் வைட்டமின்களுக்கும் கூட தொடர்பு உண்டு.
உதாரணமாக பல் வலி ஏற்படும் பொழுது நாம் பல் மருத்துவரை அணுகலாமா இல்லை வேறு ஏதேனும் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் எடுத்துக்கொள்ளலாமா? இல்லை மன அழுத்தத்தின் காரணமாக இது ஏற்படுகின்றதா? என்று நாம் யோசிப்பதுண்டு.
ஆனால் மருத்துவ ரீதியில் ஆராய்ந்தால் அந்த பல்வலிக்கு காரணம் சிறிதளவு சூரிய ஒளியும் மற்றும் வைட்டமின் டி குறைபாடும் காரணமாக இருக்கலாம். இப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வைட்டமின்களும் தொடர்பு உண்டு.
இந்த வைட்டமினின் சிறப்பம்சம் என்னவென்றால் உடலானது இந்த வைட்டமினை உணவின் மூலம் எடுத்துக் கொள்வது குறைவு மாறாக சூரிய ஒளியின் மூலம் தானாகவே தயாரித்துக் கொள்ளும்.
ஆனால் இந்த கொரானா காலகட்டத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்புவதே அரிதாகிப் போன பட்சத்தில் வைட்டமின் டி மட்டும் குழந்தைகளுக்கு சூரிய ஒளி மூலம் எவ்வாறு கிட்டும்.
அதற்கு மாறாக குழந்தைகளுக்கு வைட்டமின் டி அதிகம் உள்ள உணவு பொருட்களை எவ்வாறு கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
Vitamin-d rich foods in tamil:
வைட்டமின் டி-ன் நன்மைகள்:
- வைட்டமின் டி எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரத்தத்திற்கு தேவையான பாஸ்பரஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- உறுதியான பற்கள் மற்றும் ஈறுகளுக்கு வைட்டமின்-டி இன்றியமையாதது.
- இது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதின் மூலம் நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.
- நல்ல மனநிலையை பராமரிப்பதிலும் மனச்சோர்வைத் தடுப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.
- இது இதய நோய் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
- போதுமான வைட்டமின் டி பசியை அடக்கி, எடையைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
வைட்டமின் டி குறைபாடு உடலில் ஏற்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு இது கீழ்கண்ட தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
- வைட்டமின் டி குறைபாட்டின் மிகப்பெரிய பிரச்சனை ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு சிதைவு ஆகும்.இந்த பாதிப்பினால் எலும்பு திசுக்கள் கடினமாக இல்லாமல் மெலிவடைந்துவிடும்.
- வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் தமனி சுவர்களின் விறைப்பை பாதிக்கலாம், இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
- வைட்டமின் டி கிடைக்காத குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் உணவு உணர்திறன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
- வைட்டமின் D இன் குறைபாடு வலி மற்றும் தசை பிடிப்பினை ஏற்படுத்தும் ஹைபோகால்செமிக் டெட்டானியம் எனப்படும் நோயினை ஏற்படுத்துகின்றது.
- எதற்கும் ஆர்வமின்மை, அல்லது பொதுவான சோக உணர்வு.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்
Vitamin-d rich foods in tamil:
எண்ணெய் மீன்
எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் வைட்டமின் D இன் சிறந்த மூலமாகும், குறிப்பாக சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் ஹாலிபுட். போன்றவற்றில் இச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
100 கிராம் சால்மன் மீன் 526 IU வைட்டமின் D ஐ வழங்குகிறது. மத்தி 100 கிராமில் 170 IU ஐ வழங்குகிறது. வைட்டமின் டி தவிர, எண்ணெய் மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை சிறு குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கரு ஆரோக்கியமற்றது என்றும், வெள்ளைக்கருவை மட்டுமே சாப்பிடுவது நல்லது என்பது பலரின் கருத்து. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் பெரும்பாலான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
6 மாதங்களில் முட்டைகளை உண்ணத் தொடங்கிய குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் தொடங்கிய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி-யின் அளவு சூரிய ஒளி மற்றும் கோழியின் உணவு போன்ற காரணிகளைப் பொறுத்தது என்றாலும், சராசரியாக, ஒரு பெரிய முட்டையின் மஞ்சள் கருவில் 37 IU வைட்டமின் டி கிடைக்கிறது.
முக்கியமாக சூரிய ஒளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும் கோழிகள் மற்ற கோழிகளை காட்டிலும் .3-4 மடங்கு அதிகமான வைட்டமின் டி-யினை தருகின்றன.
இறைச்சி
இறைச்சி என்பவை கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவை என அறியப்பட்டாலும் அவை வைட்டமின்-டி யினை உற்பத்தி செய்யக்கூடியவை. அதிக அளவில் இல்லாவிட்டாலும் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் -டி யினை இறைச்சிகள் தருகின்றன.
சாதாரண சிவப்பு இறைச்சியை விட, உறுப்பு இறைச்சிகளில் அதிக அளவு வைட்டமின்-டி உள்ளது. உதாரணமாக, 100 கிராம் கல்லீரல் கிட்டத்தட்ட 40 IU வைட்டமின் D ஐ வழங்குகிறது, அதே நேரத்தில் 100 கிராம் சிறுநீரகம் சுமார் 35 IU ஐ வழங்குகிறது
சீஸ்
சீஸ் வகைக்கு ஏற்ப சீஸில் உள்ள வைட்டமின் டி அளவு மாறுபடும். ரிக்கோட்டா மற்றும் செடாரில் போன்ற சீஸ் வகைகளில் 100 கிராமில் முறையே 25 IU மற்றும் 24 IU அளவு கொண்ட வைட்டமின் D உள்ளது.
இதைத் தொடர்ந்து போன்டினா,முயீன்ஸ்டர் மற்றும் மொன்டெரெய் வகை சீஸ்களில் 100 கிராமில்,22 IU வைட்டமின் D நிறைந்துள்ளது .மற்ற பாலாடைக்கட்டிகளான ப்ளூ சீஸ், பிரை மற்றும் கௌடா போன்றவை 100 கிராமுக்கு 18 IU வைட்டமின் D ஐக் கொண்டுள்ளது.
காளான்கள்
காளான்கள் வைட்டமின் டி-க்கான மிகச்சிறந்த தாவர ஆதாரங்களில் ஒன்றாகும். காளான்களில் காணப்படும் எர்கோஸ்டெரால் எனப்படும் புரோ-வைட்டமின் இதற்கு காரணம்ஆகும்.
இது மனிதர்களைப் போலவே சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி-யை தயாரிக்கிறது.ஆனால், வைட்டமின் வகைகளில் வேறுபாடு உள்ளது – காளான்கள் வைட்டமின் டி2 ஐ உற்பத்தி செய்ய வல்லது.
ஆனால் நம் உடல்கள் வைட்டமின் டி3 ஐ உற்பத்தி செய்கின்றன. வைட்டமின் டி-3 வைட்டமின் டி2 யினை காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், காளான்களும் நமது இரத்தத்தில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகின்றன. காளான் வகையைப் பொறுத்து, அவை 100 கிராமுக்கு 700 IU முதல் 2,300 IU வரை வைட்டமின் டி-யினை வழங்கக்கூடியது.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கான சோளம் ராகி டேட்ஸ் கஞ்சி (இரும்புச்சத்து நிறைந்த எளிதான ரெசிபி)
உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், காட் லிவர் ஆயில் போன்ற மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
சூரிய ஒளி அல்லது உணவு மூலங்கள் மூலம் உங்களுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும்,வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்களை எடுத்து கொள்ளலாம்.
அதிகப்படியான வைட்டமின் டி-யும் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தேவையான அளவினை எடுத்துக்கொள்வது சிறந்தது.
Vitamin-d rich foods in tamil
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply