Pala keerai Sadham: குழந்தைகளுக்கு மதிய உணவு என்றாலே நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது சாதம்தான்.சிறிதளவு சாதம் கொடுத்தாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தி கொடுப்பதோடு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கக்கூடியது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நாம் இதுவரை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பால் சாதம்,தயிர் ஓட்ஸ் கிச்சடி,தயிர் சாதம், தயிர் கிச்சடி,கீரை சாதம் என்று பலவகையான மதிய உணவு வகைகளை பார்த்திருப்போம்.அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது பாலை கீரை பருப்பு கிச்சடி.
பாலக் கீரையை பருப்புடன் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு தேவையான புரோட்டினுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்களும் கிடைக்கும்.அரசி மூலம் கார்போஹைட்ரேட் கிடைக்கும் என்பதால் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஆற்றல் நிறைந்த உணவாக பாலக் கீரை பருப்பு சாதம் அமையும்.
Pala keerai Sadham:
- பாலக்கீரை ஒரு கப்
- அரிசி 1 டே.ஸ்பூன்
- துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்
- ரகம் ஒரு டீஸ்பூன்
- பூண்டு ஒரு பல்.
செய்முறை
1.அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2.குக்கரில் சிறிதளவு நெய் ஊற்றவும்.
3.சீரகத்தூள்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
4.கீரையை சேர்த்து வதக்கவும்.
5. அரிசி, பருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
6. 3 முதல் 4 விசில் வரும் அளவிற்கு வேகவைக்கவும்.
7.நன்றாக மசிக்கவும்.’
8.குழந்தைகளுக்கான கீரை பருப்பு சாதம் ரெடி.
பாலக் கீரையின் நன்மைகள்:
- பாலக்கீரை உடல்சூட்டினை தணிக்க வல்லது.
- வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.
- இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
- ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய வல்லது.
- போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது நிறைந்துள்ளன.
- நீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதம் உள்ளது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான பாலக் கீரை பருப்பு சாதம்
Ingredients
- 1 கப் பாலக்கீரை
- 1 டே.ஸ்பூன் அரிசி
- 1 டீஸ்பூன் துவரம்பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 பல் பூண்டு
- 1 டீ.ஸ்பூன் நெய்
Instructions
- அரிசிமற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி அரை மணி நேரம்ஊறவைக்கவும்.
- குக்கரில் சிறிதளவு நெய்ஊற்றவும்.
- சீரகத்தூள் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- கீரையைசேர்த்து வதக்கவும்
- அரிசி, பருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர்சேர்க்கவும்.
- 3 முதல் 4 விசில் வரும் அளவிற்கு வேகவைக்கவும்.
- நன்றாகமசிக்கவும்.’
- குழந்தைகளுக்கான கீரை பருப்பு சாதம்ரெடி
Leave a Reply