walnut drink: பொதுவாக நட்ஸ் வகைகள் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். எனவே அதையே குழந்தைகளுக்கு மருந்தாகவும் கொடுத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போன்று நமக்கு இருக்கும் அல்லவா. அதற்கான ரெசிபி தான் இந்த வால்நட்பால்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சர்க்கரையின் இனிப்பு சுவையுடன், வால்நட்டின் கிரீம் சுவையும் சேர்ந்து குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்ஸ்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற அனைத்தையும் இந்த ரெசிபி கொடுக்கும்.
walnut drink:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் வால்நட்டில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- வால்நட்டில் இயற்கையாகவே ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுவதால் குழந்தைகளின் மூளை திறனை அதிகரிக்க தேவையான சத்துக்களை இது தருகின்றது. எனவே வளருகின்ற குழந்தைகளின் மூளையும் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும்.
- இதில் அடங்கியுள்ள நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
- இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க துணை புரிகின்றது.
- இது நிறைந்துள்ள மெக்னீசியம், காப்பர் மற்றும் மாங்கனிசு போன்றவை எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள், புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை இணைந்து குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்கக் கூடியது.
walnut drink:
- மை லிட்டில் மொப்பட் நாட்டுச்சக்கரை- 2 டேபிள் ஸ்பூன் (ஒரு வயது குழந்தைகளுக்கு மேல்)
- தண்ணீர்- தேவையான அளவு
- நெய்- 2 டேபிள் ஸ்பூன்
- வால்நட்- 2 டேபிள் ஸ்பூன்
- கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள்-1 சிட்டிகை
walnut drink:
செய்முறை
- முதலில் சக்கரையுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி ஓரமாக வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் நெய் ஊற்றி வால்நட்டினை சேர்த்து வறுத்து பொடி செய்து ஒரு ஓரமாக வைக்கவும்.
- அதே கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
- ஏற்கனவே தயாரித்த சக்கர பாகினை கோதுமை மாவில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
- அதனுடன் வால்நட் பவுடர், தேவையான அளவு தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வால்நட் பால் ரெடி.
குளிர் காலத்தில் இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது பருத்தி பால் கொடுத்த அதே சுவையுடன் இந்த வால்நட் பால் இருப்பதால் குழந்தைகள் விரும்பி குடிப்பர். அதே சமயம் இளஞ்சூட்டுடன் குடிப்பதால் இதில் உள்ள ஆரோக்கியமான உணவு பொருட்கள் குழந்தைகளின் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டுமானால் வாரம் ஒரு முறை இதேபோன்று செய்து கொடுக்கலாம். சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் மறுக்காமல் வாங்கி குடிப்பர்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
walnut drink:
இதமான வால்நட் பால்
Ingredients
- தேவையானவை
- மை லிட்டில் மொப்பட் நாட்டுச்சக்கரை- 2 டேபிள் ஸ்பூன் ஒரு வயது குழந்தைகளுக்கு மேல்
- தண்ணீர்- தேவையான அளவு
- நெய்- 2 டேபிள் ஸ்பூன்
- வால்நட்- 2 டேபிள் ஸ்பூன்
- கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள்-1 சிட்டிகை
Leave a Reply