Purple Cabbage Soup in Tamil: இதுவரை நாம் பல்வேறு சூப் வகைகளை பார்த்திருப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் சூப் இதுவரை நீங்கள் எங்கும் கேள்விப்படாத அளவிற்கு வித்தியாசமான சூப்பாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் சூப் குடித்தால் குடிக்க மறுக்கின்றார்கள் என்று கூறும் அம்மாக்களுக்கு இந்த சூப் நன்கு கை கொடுக்கும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காய்கறியினை குழந்தைகளுக்கு பிடித்தவாறு அட்டகாசமான நேரத்தில் கொடுத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்வார்கள் அதற்கான ரெசிபி தான் இந்த பர்பிள் கலர் காலிஃப்ளவர் சூப்.
பொதுவாக பிங்க் நிறம் என்றாலே பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் ஆகிய இருவருக்கும் பிடித்த நிறம் என்றால் அதனை பர்பிள் கலர் என்று சொல்லலாம்.
எனவே தான் சூப் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு வேறு எப்படி கொடுத்தால் குடிப்பார்கள் என்று யோசித்த பொழுது குழந்தைகள் விரும்பிய நிறத்தில் கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக குடிப்பார்கள் என்பதற்காகவே இந்த சூப்பினை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
பர்பிள் கலரில் சூப் எப்படி என்று தானே நீங்கள் யோசிக்கின்றீர்கள்? இயற்கையாகவே பர்பிள் கலரில் கிடைக்கும் முட்டைக்கோசை வைத்து தான் இந்த வித்தியாசமான சூப்பினை நாம் இன்றைக்கு பார்க்கப் போகின்றோம்.
உண்மையில் இந்த சூப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள் போன்ற அனைத்தையும் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஆற்றல் மிகுந்த உணவாக இந்த சூப் இருக்கும்.

Purple Cabbage Soup in Tamil:
இந்த சூப்பினை பார்ப்பதற்கு முன்னால் முட்டைக்கோசில் இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
- இந்த முட்டைக்கோசில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமாக இருப்பதால் செல்கள் சிதைவடையாமல் தடுக்கின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.
- முட்டைக்கோசில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து சளி மற்றும் தொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
- வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
- இதில் உள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து கண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
- கால்சியம் மற்றும் வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை அளிக்கக் கூடியது.
கல்லீரல் மற்றும் உடலின் பல பகுதிகளில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இது உதவுகின்றது. - மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் ரத்த அழுத்தத்தின் அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றது.
- கலோரிகள் குறைவு என்பதால் குறைந்த கலோரியில் உடல் எடையினை கட்டுக்குள் வைக்க இந்த சூப் உதவும்.
முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே மற்றும் போலேட் எனப்படும் சத்து ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
Purple Cabbage Soup in Tamil:
- பர்பில் நிற முட்டைக்கோஸ் (நறுக்கியது)- இரண்டு கப்
- சமையல் எண்ணெய் அல்லது பட்டர்- 1 டேபிள்ஸ்பூன்
- வெங்காயம்-1
- கேரட்-1
- உருளைக்கிழங்கு-1
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
Purple Cabbage Soup in Tamil:
செய்முறை
- கடாயினை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் முட்டைக்கோஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்களுக்கு காய்கறிகள் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
- அடுப்பை அணைத்த பின் காய்கறிகள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு ஒன்றாக அரைக்கவும்.
- ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மேலே கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.
- இதில் முட்டைகோஸ் மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளும் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் இந்த ஒரே சூப்பின் மூலம் கிடைக்கும்.
- மேலும் பார்ப்பதற்கும் நன்கு கவர்ச்சிகரமான வண்ணத்துடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
Purple Cabbage Soup in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Purple Cabbage Soup in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வழக்கமாக சூப் சாப்பிடாத குழந்தைகள் இதனை குடிப்பார்களா?
நீங்கள் வழக்கமாக கொடுக்கும் சூப்பினை காட்டிலும் குழந்தைகள் விரும்பும் வண்ணத்தில் இருப்பதால் குழந்தைகளுக்கு கட்டாயம் இதனை குடிப்பார்கள்.
வேறு காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாமா?
இதில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் தவிர நீங்கள் விருப்பப்பட்டால் பட்டாணி, குடைமிளகாய் மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
காலை உணவிற்கு பதிலாக இந்த சூப்பினை கொடுக்கலாமா?
இதில் அனைத்து வைட்டமின்களும் கலந்துள்ளதால் காலை உணவிற்கு பதிலாக கட்டாயமாக தரலாம் ஆனால் அதனுடன் புரோட்டினை தரக்கூடிய ஏதாவது உணவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கான பர்பிள் முட்டைகோஸ் சூப்
Ingredients
- பர்பில் நிற முட்டைக்கோஸ் நறுக்கியது- இரண்டு கப்
- சமையல் எண்ணெய் அல்லது பட்டர்- 1 டேபிள்ஸ்பூன்
- வெங்காயம்-1
- கேரட்-1
- உருளைக்கிழங்கு-1
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
Notes
- செய்முறை கடாயினை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் முட்டைக்கோஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும். சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்களுக்கு காய்கறிகள் நன்றாக வேகும் வரை சமைக்கவும். அடுப்பை அணைத்த பின் காய்கறிகள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு ஒன்றாக அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மேலே கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும். இதில் முட்டைகோஸ் மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளும் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் இந்த ஒரே சூப்பின் மூலம் கிடைக்கும். மேலும் பார்ப்பதற்கும் நன்கு கவர்ச்சிகரமான வண்ணத்துடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
Leave a Reply