6 months baby food chart in tamil: 6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் (இந்திய குழந்தைகளுக்கானது)
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
6 months baby food chart in tamil:
அம்மாக்களே… உங்கள் குழந்தை 6 வது மாதத்தை தொடும் போது திட உணவுகளை உட்கொள்ள தயாராகிவிட்டது என்று அர்த்தம்.. இந்த நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்… ஆனால் 3 நாள் விதியை பின்பற்றுவது அவசியம்…
திட உணவை கொடுக்கும் போது அது அவர்களுக்கு கூடுதல் உணவாகத் தான் இருக்க வேண்டும். தாய்ப்பால் தான் குழந்தைக்கு பிரதான உணவு என்பதை மறந்து விடாதீர்கள்…
குழந்தைக்கு உணவு கொடுக்க பயன்படுத்தும் பாத்திரங்களை வெந்நீரில் கழுவிய பின் பயன்படுத்துவது நல்லது.
குழந்தைக்கு சுமார் 90 மில்லி உணவை நீங்கள் ஒரு முறை கொடுக்க வேண்டும். இதனை நாளொன்றுக்கு 2 முறை கொடுத்து வர வேண்டும்.
6 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
6 month baby food:
முதல் வாரம் :
திங்கள் | நாளொன்றுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வீதம்( முதன்முதலில் கொடுக்க வேக வைத்து மசித்த ஆப்பிள் ஏற்றது) இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரலாம்… |
செவ்வாய் | வேகவைத்து மசித்த ஆப்பிளை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்க வேண்டும் |
புதன் | வேகவைத்து மசித்த ஆப்பிளை 3 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்க வேண்டும் |
வியாழன் | ஆப்பிளுக்கு பிறகு நீங்கள் காய்கறிகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதில் கேரட் குழந்தைக்கு ஏற்ற உணவு. கேரட்டை வேக வைத்து மசித்தோ அல்லது ஜூஸாகவோ ஒரு டேபிள் ஸ்பூன் என ஒருவேளை தரலாம்… |
வெள்ளி | வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை தரவும் |
சனி | வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 3 டேபிள் ஸ்பூன் என 2 வேளை தரவும். |
ஞாயிறு | காலையில் வேகவைத்து மசித்த ஆப்பிள்… மாலையில் வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸ்… |
2வது வாரம்:
குழந்தைக்கு உணவு கொடுக்கும் நேரத்தை உங்கள் வசதிக்கேற்ற படி அமைத்துக் கொள்ளலாம்…
பொதுவாக காலையில் 11 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் உணவு கொடுப்பது நல்லது..
நாள் | 11AM | 3PM |
திங்கள் | வேகவைத்து மசித்த கேரட் | அரிசி கஞ்சி |
செவ்வாய் | ரவை கீர் | வேகவைத்து மசித்த ஆப்பிள் |
புதன் | வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு | பார்லி கஞ்சி |
வியாழன் | வேகவைத்து மசித்த பருப்பு | வேகவைத்து மசித்த பேரிக்காய் |
வெள்ளி | சப்போட்டா கூழ் | கேரட் பீட்ரூட் சூப் |
சனி | கேரட் ஜூஸ் | வேகவைத்து மசித்த கேரட்பேரிக்காய் |
ஞாயிறு | வேகவைத்து மசித்த பரங்கிக்காய் | திராட்சை ஜூஸ் |
3வது வாரம்:
நாள் | 11AM | 3PM |
திங்கள் | அரிசி கஞ்சி | ஆப்பிள் கூழ் |
செவ்வாய் | பார்லி வேகவைத்த நீர் | வேகவைத்து மசித்த சுரைக்காய் |
புதன் | கேரட் ஜூஸ் | வேகவைத்து மசித்த பீட்ரூட் |
வியாழன் | உருளைக்கிழங்கு சூப் | ஏதேனும் தானிய வகை |
வெள்ளி | சர்க்கரைவள்ளி கிழங்கு மசித்தது | ஓட்ஸ் கஞ்சி |
சனி | ஆரஞ்ச் ஜூஸ் | வேகவைத்து மசித்த புடலங்காய் |
ஞாயிறு | மசித்த வாழைப்பழம் | அரிசி கஞ்சி |
4வது வாரம்:
நாள் | 11AM | 3PM |
திங்கள் | துவரம்பருப்பு பூண்டு மசியல் | பீட்ரூட் உருளைக்கிழங்கு மசித்தது |
செவ்வாய் | மசித்த அரிசி சாதம் | வேகவைத்து மசித்த சுரைக்காய் |
புதன் | ஓட்ஸ் கீர் | வேகவைத்து மசித்த பேரிக்காய் |
வியாழன் | வேகவை-த்து மசித்த கேரட் உருளை | கோதுமை கஞ்சி |
வெள்ளி | வேகவைத்து மசித்த காய்கறிகள் | திராட்சை ஜூஸ் |
சனி | பார்லி கஞ்சி | வேகவைத்து மசித்த புடலங்காய் |
ஞாயிறு | கேரட் ஜூஸ் | ரவை கீர் |
6 month baby food recipes:
குறிப்பு :
6 மாத குழந்தைக்கு என்னென்ன உணவு வகைகளை எல்லாம் கொடுக்கலாம் என்பதற்கான சாம்பிள் தான் இது. இந்த பட்டியலை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை…
இந்த உணவு வகைகள் எல்லாம் உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா? என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் உணவை எல்லாம் குழந்தை சாப்பிட வேண்டும் என நீங்கள் நினைப்பது கூடாது. இதில் பொறுமை ரொம்பவே முக்கியம். தனக்கு ஏற்ற உணவை குழந்தை முழுமையாக சாப்பிட கூடுதலாக 2 மாதங்கள் கூட ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்-
குழந்தைக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்பதை எப்படி கண்டறிவது?
நீங்கள் கொடுக்கும் உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கீழ்கண்ட உபாதைகள் ஏற்படும்…
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- வாந்தி
- தோல் தடித்தல்
- இடைவிடாத அழுகை(வயிற்று வலியின் காரணமாக)
உணவால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட ஒரு உணவின் மூலம் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக அந்த உணவை நிறுத்தி விட வேண்டும். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே உணவை கொடுக்கலாம். அப்போதும் நீங்கள் 3 நாள் சோதனையை பின்பற்றுவது அவசியம்…
குழந்தையின் உணவு பழக்கம் குறித்த ஒரு டயரியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் குழந்தைக்கு பிடித்த உணவு வகைகள் மற்றும் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள் குறித்து குறிப்பிட்டு வாருங்கள்…
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
6 months baby food chart in tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு திடஉணவு எப்பொழுது கொடுக்கலாம் ?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திலிருந்து திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு முன் தண்ணீர் கொடுக்கலாமா?
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி ஆறு மாத காலம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மற்றும் பார்முலா மில்க் மட்டுமே போதுமானது.தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை.
குழந்தைகளுக்கு உணவில் உப்பு சேர்க்கலாமா ?
குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும்வரை உணவில் உப்பு சேர்க்க கூடாது.
குழந்தைகளுக்கு உணவில் சர்க்கரை சேர்க்கலாமா ?
குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும்வரை சர்க்கரை சேர்க்கக்கூடாது.தேவைப்பட்டால் இனிப்பு சுவைக்கு பழக்கூழ் சேர்த்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுக்கலாமா?
மாட்டுப்பால் செரிமானம் ஆகாது என்பதால் ஒரு வயது வரை உணவில் மாட்டுப்பால் சேர்க்கக்கூடாது.
Leave a Reply