Carrot puree for 8 Months Babies:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் கொடுப்பதற்காக ஆரோக்கியமான பல்வேறு ரெசிபிகளை நாம் இதுவரை பார்த்திருப்போம். காய்கறி கூழ்,பழ கூழ்,அரிசி சாதம் ,பருப்பு சாதம் போன்ற பலவகை சாத வகைகளை நாம் பார்த்திருப்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி 8 மாத குழந்தைகளுக்கான சத்தான கேரட் கீரை மசியல். பொதுவாகவே கேரட் மற்றும் கீரை இரண்டுமே பல்வேறு சத்துக்கள் உள்ளடக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இவை இரண்டையும் எப்படி குழந்தைகளுக்கு உணவாக செய்து கொடுப்பது என்று நமக்குள் சந்தேகம் இருந்திருக்கும். ஆனால் அவற்றை குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதற்கு ஏற்றவாறு எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை நாம் இப்பொழுது காணலாம்.
Carrot puree for 8 Months Babies:
Carrot puree for 8 Months Babies
- இந்த ரெசிபியில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை நிறைந்திருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக் கூடியது.
- மேலும் இதில் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் அடைய செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
- பாலக்கீரையில் இயற்கையாகவே மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையினை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகின்றது.
- மேலும் இந்த ரெசிபியில் கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதால் மன அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலினை இலகுவாக வைக்கக் கூடியது.
- மேலும் கேரட்டில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் பார்வை மேம்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று ஆகும்.
Carrot puree for 8 Months Babies:
- கேரட்- 1
- கீரை -மூன்று முதல் நான்கு இலைகள்
- சீரகத்தூள் -இம்மியளவு
- பெருங்காயம் –இம்மியளவு
செய்முறை
- கேரட்டினை நன்கு கழுவி தோலினை நீக்கவும்.கீரையினையும் நன்கு கழுவி எடுக்கவும்.
- கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.கீரையினை பொடியாக நறுக்கவும்.
- கேரட் மற்றும் கீரை போன்றவற்றை குக்கரில் ஒரு கிண்ணத்தில் வைத்து ஆவியில் வேக விடவும்.
- இரண்டு விசில் வந்ததும் அடுப்பினை அணைக்கவும்.
- இரண்டையும் ஆற வைத்து ஒன்றாக மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைக்கவும்.
- சீரகத்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
குறிப்பு: குழந்தைகளுக்கு முதலில் இந்த ரெசிபியை கொடுக்கும்போது மூன்று நாள் விதிமுறைகளை பயன்படுத்துவது நல்லது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு கேரட் நல்லதா ?
கேரட்டில் விட்டமின் ஏ, மினரல்ஸ் மற்றும் பல வகையாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் கண் பார்வை மற்றும் நோய் ஏற்புத்திறனை அதிகரிக்க கூடியது.
எட்டு மாத குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாமா ?
மெக்னீசியம் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் தசை வளர்ச்சியினை அதிகரிக்க கூடியது.
இந்த கஞ்சியினை எப்பொழுது குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம் ?
குழந்தைகளுக்கு கேரட் மற்றும் கீரை போன்றவற்றை தனித்தனியாக அறிமுகப்படுத்திய பின்பு 8 மாத காலத்திற்கு பிறகு இந்த ரெசிபியை நீங்கள் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய
1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
கேரட் பாலக்கீரை மசியல்
Ingredients
- கேரட்-1
- கீரை-மூன்று முதல் நான்கு இலைகள்
- சீரகத்தூள்-இம்மியளவு
- பெருங்காயம்–இம்மியளவு
Notes
- கேரட்டினை நன்கு கழுவி தோலினை நீக்கவும்.கீரையினையும் நன்கு கழுவி எடுக்கவும்.
- கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.கீரையினை பொடியாக நறுக்கவும்.
- கேரட் மற்றும் கீரை போன்றவற்றை குக்கரில் ஒரு கிண்ணத்தில் வைத்து ஆவியில் வேக விடவும்.
- இரண்டு விசில் வந்ததும் அடுப்பினை அணைக்கவும்.
- இரண்டையும் ஆற வைத்து ஒன்றாக மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைக்கவும்.
- சீரகத்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
Leave a Reply