Diaper Rash Home Remedy in Tamil: குழந்தைகளுக்கு டயபர் உபயோகிப்பதால் ஏற்படும் ரேஷசை போக்கும் எளிமையான வீட்டு வைத்தியம்
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
டயபர் உபயோகிப்பது என்பது இப்பொழுது வழக்கமான ஒன்றாகிவிட்டது.நம் அம்மாக்கள்,பாட்டிமார்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளையே இடுப்பில் சுற்றி வைத்தனர்.ஆனால் இப்பொழுது பெருகி விட்ட “யூஸ் அண்ட் த்ரோ” கலாச்சாரத்தில் பருத்தி உடைகள் மறைந்தே போய்விட்டது.வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. இவை உபயோகிப்பதற்கு வசதியாக இருந்தாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.அதில் முக்கியமான ஒன்று டயபர் ரேஷஸ் எனப்படும் டயபர் அரிப்பு.
Diaper Rash Home Remedy in Tamil:
டயபர் அரிப்பு என்றால் என்ன?
குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் இடங்களில் தோலில் ஏற்படும் சிவப்பு நிற தடிமன் டயபர் ரேஷஸ் எனப்படும்.இது குழந்தைகளுக்கு அரிப்பை ஏற்படுத்தி எரிச்சலூட்டும் உணர்வினை அளிக்கும்.குழந்தைகள் எரிச்சல் தாங்கமுடியாமல் அடிக்கடி அழுவர்.
இதையும் படிங்க: குடற்புழுவிற்கான வீட்டு வைத்தியம்
டயபர் அரிப்பிற்கான காரணங்கள்:
- குழந்தைகள் சிறுநீர் அல்லது மலம் கழித்தவுடன் உடனடியாக மாற்றாமல் நீண்ட நேரம் வைத்திருப்பது.
- டயாபரினால் குழந்தைகளின் சருமத்தினை துடைப்பது.
- ஈஸ்ட் தொற்றுகள்.
- பாக்டீரியா தொற்றுகள்.
- வாசனை திரவியங்கள் கலந்த டயாபரினை உபயோகிப்பது.
- குழந்தைகள் அணியும் டயபர் மிகவும் இறுக்கமாக இருந்தால் தடிப்பு ஏற்படும்.
- குழந்தைகளுக்கு ஆன்டி-பையோட்டிக் கொடுக்கும்பொழுது அல்லது குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஆன்டி-பையோட்டிக் எடுத்து கொள்ளும் பொழுதும் ஏற்படும்.
- குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது…
Diaper Rash Home Remedy in Tamil:
வீட்டு வைத்தியங்கள்:
அரிப்பினை போக்க பலவகை க்ரீம்கள் கிடைக்கின்றன. இருப்பினும் இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த அரிப்புகளை கவனித்தால் தான் பின்நாட்களில் தொற்றுகளும், எரிச்சலும் வருவதை தவிர்த்திட முடியும். சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தொடர்ந்து டையபர்களில் படுவதால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும். நாம் வீட்டிலேயே செய்ய கூடிய எளிமையான சிகிச்சை முறைகளை காணலாம்.
தாய்ப்பால்
மிகவும் எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த வீட்டு வைத்தியம்.குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தாய்ப்பாலினை நன்றாக தடவி சிறிது நேரம் ஆற விட வேண்டும்.தாய்ப்பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் விரைவில் குணமடைய செய்கின்றது.
தேங்காய் எண்ணெய்
நம் அனைவரின் வீட்டிலும் சுலபமாக கிடைக்கும் ஒன்று தேங்காய் எண்ணெய்.பாதிப்பே ஏற்பட்ட இடத்தில தேங்காய் எண்ணெயினை மெதுவாக தடவி சிறிது நேரம் ஆறவிடவும்.செக்கில் வாங்கிய தூய தேங்காய் எண்ணெயினை உபயோகப்படுத்தவும்.
ஓட்ஸ் குளியல்
அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கும் சிறந்த வலி நிவாரணி ஓட்ஸ் ஆகும்.ஒரு டே.ஸ்பூன் ஓட்ஸினை குழந்தைகள் குளிக்கும் நீரினில் போட்டு குழந்தைகளை சிறிது நேரம் அந்த நீரினில் உட்கார செய்யலாம்.ரேஷஸ் அதிகமாக இருந்தால் ஒரு நாளைக்கு இரு முறை செய்யலாம்.
தயிர்
தயிர் நல்ல நிவாரணியாக இருக்கும்.வீட்டிலேயே தயாரித்த தயிராக இருந்தால் மிகவும் சிறப்பு.தயிரை அரிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.தயிரில் இயற்கையாகவே பூஞ்சைகளை எதிர்க்கும் திறன் இருப்பதால் உணவுடன் கலந்து சாப்பிட கொடுத்தலும் நல்ல பயன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்
இயற்கையாக கிடைக்கும் சிறந்த நிவாரணி.கற்றாழை மடலின் தொலைய நீக்கியபின் நடுவில் இருக்கும் ஜெல் போன்ற பகுதியினை தடிப்பு உள்ள இடங்களில் தடவ வேண்டும்.இது அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து விடுதையளிக்கும்.
பேக்கிங் பவுடர்
டயபர் ராஷை போக்க மற்றொரு சிறந்த வழி, பேக்கிங் பவுடர். 3-4 கப் தண்ணீரில் 2-3 டேபிள் ஸ்பூன் பேகிங் சோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு துணியை இந்த நீரில் முக்கி எடுத்து, குழந்தைக்கு ராஷஸ் இருக்கும் இடத்தில் ஒத்தி எடுக்கவும். பிறகு மற்றொரு காய்ந்த துணியால் அந்த இடத்தை துடைத்து விடவும்.சிறிது நேரம் கழித்து டயப்பர் உபயோகிக்கவும்.
முட்டையின் வெள்ளைக் கரு
இரண்டு முட்டைகளை உடைத்து வெள்ளை கருவினை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ரேஷஸ் உள்ள இடங்களில் தடவவும்.சிறிது நேரம் கழித்து துணியால் துடைத்து எடுக்கவும்.
கார்ன் பிளவர் மாவு
டயபர் அணிவிப்பதற்கு முன்பு சருமமா நன்றாக உலரந்தவுடன் டால்கம் பவுடருக்கு பதிலாக கார்ன் பிளவர் மாவினை உடயோகிக்கலாம்.ஆனால் ஈரப்பதத்தோடு பூச கூடாது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் உள்ள ஈரப்பதம், ராஷை போக்கி. சருமத்திற்கு மென்மையான தோற்றத்தைத் தருகிறது. 1 ஸ்பூன் தண்ணீரில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதனை குழந்தைக்கு பாதிப்பு உண்டான இடத்தில் தடவவும்.
காற்றோட்டம் அவசியம்
குழந்தைகளுக்கு இரவு நேரங்கள் மற்றும் வெளியில் அழைத்து செல்லும் பொழுது மட்டும் டயபர் அணிவிக்கலாம்.மற்ற நேரங்களில் குழந்தைகளின் சருமத்தை காற்றோட்டமாக விடுவது அவசியம்.டையபர் அரிப்புகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டிய மிகச்சிறந்த இயற்கையான வழிமுறைகளில் இதுவும் சிறந்த வழிமுறையாகும்.
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?
டயபர் அரிப்பு ஒரு சில நாட்களில் நிவாரணமடையவில்லை என்றாலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தாலும் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
டயபர் அரிப்பினை தடுக்கும் முறைகள்
- குழந்தை மலம் அல்லது சிறுநீர் கழித்தவுடன் உடனடியாக டயபரை மாற்ற வேண்டும்.
- ஒவ்வொரு முறை டயபரை மாற்றும் பொழுதும் வெது வெதுப்பான நீரினால் சுத்தம் செய்து நன்கு உலர்ந்தவுடன் மீண்டும் டயபரை உபயோகிக்க வேண்டும்.
- வாசனை திரவியங்கள் கலந்த டயபரை உபயோகிக்க வேண்டாம்.
- மிகவும் டைட்டாக இருக்கும் டயபரை பயன்படுத்த வேண்டாம்.
- குழந்தைகளின் டயப்பரை துவைப்பதற்கு நறுமணம் மிகுந்த டிடர்ஜென்ட்டை பயன்படுத்த வேண்டாம்.
- சந்தையில் கிடைக்கும் வைப்ஸ் பயன்படுத்தி குழந்தையை சுத்தம் செய்வதைவிட, மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்.
- மென்மையான துணிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டையபர்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்யுங்கள். இந்த துணி டையபர்கள் உங்கள் குழந்தைக்கு இதமூட்டி அழகிய சருமத்தை பாதுகாக்கின்றன.
குழந்தைகளுக்காக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான ஆர்கானிக் உணவுகள்…முற்றிலும் இயற்கையானது!
Leave a Reply