Javvarisi Potato Cutlet: இதுவரை நம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் பற்றி பல வீடியோக்களை பார்த்திருப்போம். என்று நாம் பார்க்கப் போவது குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஸ்நாக்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் அதை கடையில் வாங்கி கொடுத்தால் தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர் என்ற அளவிற்கு வந்தாகிவிட்டது.
ஆனால் கடையில் விற்கும் ஸ்நாக்ஸ் வகைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது என்பதால் நாம் வாங்கிக் கொடுத்தாலும் வேண்டா வெறுப்பாக தான் வாங்கி கொடுப்போம்.
அப்படி என்றால் வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் கொடுப்பது என்றால் எதைத்தான் கொடுப்பது? என்று யோசிக்கும் அம்மாக்களுக்கான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தான் இந்த ஜவ்வரிசி உருளைக்கிழங்கு பன்னீர் கட்லெட்.
இந்த கட்லெட்டை செய்வது மிகவும் எளிது என்பதுடன் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் வாரம் ஒரு முறை இதனை தாராளமாக செய்து கொடுக்கலாம்.
இதில் சேர்த்து இருக்கும் உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி மற்றும் பன்னீர் ஆகிய மூன்றுமே குழந்தைகளுக்கு நன்மை பயக்கக் கூடியதாகும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிதாகும்.
Javvarisi Potato Cutlet:

இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கி இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
- ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை தரக்கூடியது.
- மேலும் ஜவ்வரிசி எளிதில் செரிமானமாக கூடியது என்பதால் எந்தவிதமான வயிற்று தொந்தரவும் ஏற்படாது.
- எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ரெசிபி.குளூட்டின் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற ரெசிபி ஆகும்.
- உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு நான் முழுவதும் தேவையான எனர்ஜியை அளிக்கின்றது.
- மேலும் இதில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.
- வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது.
- பன்னீரில் புரோட்டின் மற்றும் கால்சியம் அதிகம் என்பதால் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் உள்ள நல்ல கொழுப்புகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
பன்னீரில் ப்ரோபயாட்டிக் எனப்படும் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
Javvarisi Potato Cutlet:
- ஜவ்வரிசி- அரை கப்
- வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு- 2
- பன்னீர்- கால் கப்
- சீரகம்- அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- நெய்- 2 டீஸ்பூன்
செய்முறை
1.ஜவ்வரிசியினை 8 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.பன்னீரை துருவிக் கொள்ளவும்.
3.ஒரு பவுலில் ஊற வைத்த ஜவ்வரிசி, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் துருவிய பன்னீர் ஒன்றாக சேர்க்கவும்.
4.மசாலா பொருட்களை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
5.தேவையான வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
6.கடாயில் நெய் ஊற்றி கட்டிலட்டினை பொறிக்க ஆரம்பிக்கவும்.
7.பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
8.தக்காளி சாஸ் உடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
Javvarisi Potato Cutlet:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இதனை எண்ணெயில் பொறிக்காமல் செய்யலாமா?
அதிகமான எண்ணெய் சேர்க்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் இதனை தோசை கல்லில் பிரட்டியோ அல்லது மைக்ரோ ஓவனில் பேக் செய்தோ, ஏர் ஃப்ரை செய்தும் கொடுக்கலாம்.
ஜவ்வரிசி குழந்தைகளுக்கு நல்லதா?
ஜவ்வரிசி எளிதில் செரிமானம் ஆவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான இன்ஸ்டன்ட் எனர்ஜியை தரவல்லது.
இதில் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாமா?
இதில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான கேரட், பீட்ரூட், கீரை மற்றும் பச்சை பட்டாணி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கட்லட் உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எது நன்றாக இருக்கும்?
கட்லடுடன் தயிர், வீட்டிலே செய்த டொமேட்டோ சாஸ் மற்றும் சட்னி போன்றவை நன்றாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
ஜவ்வரிசி உருளைக்கிழங்கு பன்னீர் கட்லட்
Ingredients
- தேவையானவை
- ஜவ்வரிசி- அரை கப்
- வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு- 2
- பன்னீர்- கால் கப்
- சீரகம்- அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- நெய்- 2 டீஸ்பூன்
Notes
- ஜவ்வரிசியினை 8 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
பன்னீரை துருவிக் கொள்ளவும். - ஒரு பவுலில் ஊற வைத்த ஜவ்வரிசி, வேகவைத்து மசித்த
- உருளைக்கிழங்கு மற்றும் துருவிய பன்னீர் ஒன்றாக சேர்க்கவும்.
- மசாலா பொருட்களை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
- தேவையான வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
- கடாயில் நெய் ஊற்றி கட்டிலட்டினை பொறிக்க ஆரம்பிக்கவும்.
- பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
- தக்காளி சாஸ் உடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
Leave a Reply