kambu payasam: நாம் பாரம்பரிய உணவுகளான சிறு தானியங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு வாழ்க்கை முறையை மாற்றிய பின்னர், புதுவிதமான நோய்களும் நம்மை குடிகொள்ள ஆரம்பித்து விட்டன. இன்றைய நோய்களுக்கான முக்கிய காரணம் உணவு முறைகள் தான் என்று பல விதமான ஆராய்ச்சிகளும் நமக்கு உண்மைகளை உரக்கச் சொல்லி விட்டன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இனி மாற்றம் என்பது நம் கைகளில் தான் உள்ளது என்பதை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் பலரும் திரும்பவும் சிறுதானிய உணவிற்கு மாறி வருகின்றனர். ஏன் எங்களுடைய ஆன்லைன் ஷாப்பில் கூட இன்றளவும் முளைகட்டிய சத்துமாவு தான் அனைத்து அம்மாக்களினாலும் விரும்பும் முதல் உணவாக உள்ளது.
இன்றைய தலைமுறை அம்மாக்கள் தன் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை தான் கொடுக்க விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒன்றே சான்றாகும். எவ்வாறாயினும் சிறுதானியங்களை உண்ண மறுக்கும் சில குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதற்காக நாம் அவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா?
நாம் செய்ய வேண்டியது எல்லாம் சிறுதானியங்களை குழந்தைகளுக்கு பிடித்தவாறு எப்படி கொடுக்கலாம் என்று மாற்றி யோசிக்க வேண்டும். அதற்கான ரெசிபி தான் இந்த கம்பு பாயாசம். கம்பு என்பது சிறுதானியங்களில் பிரதான உணவாகும். நம் முன்னோர்களும் அதனை ஒரு முக்கிய உணவாகவே வைத்துக் கொண்டிருந்தனர்.
கம்மங்கூழ் தமிழர்களின் பாரம்பரிய உணவாகும். ஆனால், கம்பை கூழாக செய்து தருவதை காட்டிலும் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அதற்கு முன் கம்பிலுள்ள எண்ணற்ற நன்மைகளை நாம் பார்க்கலாம்.
kambu payasam
kambu payasam
கம்பின் நன்மைகள்:
- கம்பில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன. அது மட்டுமல்லாமல் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன.
- கம்பில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியினை அளிக்க வல்லது. எனவே குழந்தைகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக விளையாடுவதற்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும்.
- கம்பி நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் வேதிப் பொருள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லவை.
- இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உணவினை எளிதில் செரிமான மடையச்செய்கின்றது. இதனால் மலச்சிக்கல் குழந்தைகளை அண்டாது.
- மேலும் கம்பில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பலமளிக்கும்.
- தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்த்து பளபளப்பினை அளிக்க வல்லது.
- கம்பில் கரோட்டின் எனப்படும் சத்து அதிகமாக இருப்பதால் இது இயற்கையாகவே முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உடல் சூட்டை தணிக்க வல்லது.
kambu payasam
- கம்பு பவுடர்
- சுக்குத்தூள்
- நெய்
- பனை வெல்லம் (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
kambu payasam
செய்முறை
1.கடாயினை சூடாக்கி அதில் நெய்யை ஊற்றவும்.
2.கம்பு மாவினை நெயில் போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு லேசாக நறுமணம் வரும் அளவிற்கு வறுக்கவும்.
3.அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.
4.அதனுடன் சுக்குத்தூள் சேர்க்கவும்.
5.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு செய்கின்றீர்கள் என்றால் என்னுடன் பால் மற்றும் வெல்லத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
6.டம்ளரில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
7.கம்பு மாவிற்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்தும் நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கோதுமை மாவில் இரும்பு சத்து தயா மின் நியாசின் கால்சியம் மற்றும் விட்டமின் பி6 போன்ற சத்துக்கள் உள்ளதால் அதுவும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான்.
குறிப்பு: ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பனைவெல்லம் மற்றும் பால் சேர்க்காமல் கொடுக்கலாம். ஏற்கனவே கம்பு குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கம் இருந்தால் தரமாக கொடுக்கலாம். அப்படி இல்லையெனில் மூன்று நாள் விதிமுறைகளை கடைபிடிப்பது சிறந்தது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
kambu payasam
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கம்பு பாயாசத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
தாராளமாக கொடுக்கலாம். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் பால் மற்றும், வெல்லம் சேர்க்காமல் கொடுக்கலாம். ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால் பால் சேர்த்து நீங்கள் சுவையாக கொடுக்கலாம் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களும் இதனை உட்கொள்ளலாம்.
கம்பு குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
கம்பில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன. அது மட்டுமல்லாமல் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு முற்றிலும் ஆரோக்கியமானது.
கம்பினை எத்தனை மாதம் முதல் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன், திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் முதலில் சிறிது கொடுக்க ஆரம்பித்து விட்டு குழந்தைகளுக்கு ஒத்துக்கொண்டால் நீங்கள் தாராளமாக கம்பு கொஞ்சம் நினைக்கலாம்.
Leave a Reply