Pachai Payaru masiyal for babies: குழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுப்பதென்பது முக்கியமான தனி கலைதான்.ஏனென்றால் நாம் கொடுக்கும் உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு முதல் முதலாக ஆறு மாதத்திலிருந்துதான் திடஉணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.இக்காலகட்டத்தில் நாம் கொடுக்கும் உணவுதான் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடிப்படை.அதே சமயம் குழந்தைகள் விரும்பியும் உண்ண வேண்டும்.அதற்கான சரியான தேர்வுதான் பச்சைப்பயிறு மசியல்.இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

இதையும் படிங்க: என் குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா?
Pachai Payaru masiyal for babies:
- பச்சைப்பயிறு – 3 டே.ஸ்பூன் (2-3 மணி நேரம் ஊறவைக்கவும்)
- பூண்டு – 1 பல்
- சீரகத்தூள் – இம்மியளவு
- நெய்- 1 டீ.ஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்

இதையும் படிங்க: குழந்தைகளுக்கான சத்தான பேரிச்சம்பழம் எள் லட்டு
செய்முறை
1.குக்கரில் நெய் எடுத்து கொள்ளவும்.

2.ஊறவைத்த பச்சைப்பயிறு அதனுடன் சேர்க்கவும்.

3.பூண்டு மற்றும் சீரகத்தூளை அடுத்தடுத்து சேர்க்கவும்.


4.நல்ல நறுமணம் வரும்வரை சில நிமிடங்கள் வறுக்கவும்.

5.பச்சை பயறு வேகுவதற்கு தேவையான தண்ணீரை சேர்க்கவும்.

6.குக்கரை மிதமான தீயில் வைத்து 3 முதல் 4 விசில் விடவும்.

7.கட்டிகள் இல்லாமல் நன்கு சீராக மசிக்கவும்.

8.வெதுவெதுப்பாக பரிமாறவும்.

இதையும் படிங்க:குழந்தைகளுக்கான நலங்குமாவு செய்வது எப்படி?
- பச்சை பயிறு அதீத சத்துக்களை உள்ளடக்கியது.இதில் புரோட்டீன்கள் மற்றும் பைபர்கள் அதிக அளவில் உள்ளன.
- அநேக வைட்டமின், அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச்சத்து அடங்கியது.இது எலும்புகளுக்கு பலமளிக்கக்கூடியது.
- உடலுக்கு நோய் எதிர்ப்பு தன்மை தரும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இதில் மிகுந்துள்ளது.
- பச்சைப்பயிறு உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் பொலிவை தரக்கூடியது.
- இதில் உள்ள புரோட்டீன்கள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கின்றது
- இதில் நான் சீரகத்தூளை சேர்த்துள்ளேன்.குழந்தைகளின் வயதிற்கு ஏற்றவாறு நீங்கள் மசாலாப்பொருட்களை சேர்த்து கொடுக்கலாம்.
- இவ்வளவு நன்மைகள் நிறைந்தபச்சைப்பயறு மசியலை உங்கள் குழந்தைக்கு முதல் உணவாக தாராளமாக கொடுக்கலாம்.

Leave a Reply