Mango Oats Kichadi for Babies in Tamil: வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்த சுவையான மேங்கோ ஓட்ஸ் மசியல்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மாம்பழ சீசன் தொடங்கி விட்டாலே அனைத்து குட்டீஸ்களுக்கும் ஒரே குஷி தான்.சிறியவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மாம்பழமானது மிகவும் பிடிக்கும். மாம்பழமானது இயற்கையாகவே வைட்டமின்களையும்,மினரல்களையும்,நார்ச்சத்துகளையும் கொண்டது. ஆனால் இவற்றை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும்.
மேலும் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மாம்பழத்தினை கொடுக்கவேமாட்டோம்.இப்பொழுது உங்கள் குழந்தைகளும் மாம்பழத்தினை சுவைப்பதற்கான அருமையான ரெசிபி தான் இந்த மாம்பழம் ஓட்ஸ் மசியல். மாம்பழத்தில் இயற்கையாகவே வைட்டமின் ஏ,சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் ஓட்ஸில் குழந்தைகளுக்கு தேவையான மாங்கனீசு,பாஸ்பரஸ்,காப்பர்,வைட்டமின் பி1 மற்றும் ஜிங்க் ஆகியவை நிறைந்துள்ளன.எனவே இவற்றை குழந்தைகளுக்கு காலை நேர உணவாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் அளிக்கவல்லது.
Mango Oats Kichadi for Babies in Tamil:
- ஓட்ஸ்- 2 டேபிள் ஸ்பூன்
- மாம்பழம் -1 (சிறிய அளவு)
- சீரகத்தூள் இம்மியளவு.
குழந்தைகளுக்கான மேங்கோ ஓட்ஸ் மசியல்
செய்முறை
1.மாம்பழத்தினை நன்றாக கழுவி தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2.நன்றாக மசிக்கவும்.
3.ஒரு கப் தண்ணீருடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்க்கவும்.
4.கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.
5.அடுப்பினை அணைத்து மாம்பழ கலவையை சேர்க்கவும்.
6.நன்றாக கலக்கி பரிமாறவும்.
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால் இந்த ரெசிபியை ஆறு மாத காலத்திற்கு மேல் கொடுக்கலாம்.இந்த ரெசிபி கொடுப்பதற்கு முன்னால் குழந்தைகளுக்கு ஓட்ஸ் மற்றும் மாம்பழம் ஆகியவற்றை தனித்தனியாக அறிமுகப்படுத்திய பின்பு இதனை கொடுக்கலாம்.மேலும் இந்த உணவானது குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க வல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான மேங்கோ ஓட்ஸ் மசியல்
Ingredients
- 2 டே. ஸ்பூன் ஓட்ஸ் -1 () · இம்மியளவு
- 1 சிறிய அளவு மாம்பழம்
- இம்மியளவு சீரகத்தூள்
Instructions
- மாம்பழத்தினைநன்றாக கழுவி தோலை உரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
- நன்றாகமசிக்கவும்.
- ஒருகப் தண்ணீருடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்க்கவும்.
- கலவைகெட்டியாகும் வரை கிளறவும்.
- அடுப்பினைநிறுத்தி மாம்பழகலவையை சேர்க்கவும்.
- நன்றாககலக்கி பரிமாறவும்.
Leave a Reply