Poosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் இருக்க வேண்டும். அதற்கான ரெசிபிதான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ்.கேரட்,பூசணிக்காய் போன்ற பழங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவை கலந்துள்ளதால் இதை பிங்கர் ஃபுட்ஸாக கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி உண்பர்.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்னாக்ஸாகவும் இதை கொடுக்கலாம்.
Poosani Finger Sticks for Babies:
தேவையானவை
- சர்க்கரை பூசணி – ½ கப்
- ரவை – 1/2 கப்
- அரிசி மாவு – 1 டே .ஸ்பூன்
- கார்ன் ஃபிளவர் மாவு – 1 டே.ஸ்பூன்
குழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்:
செய்முறை
Poosani Finger Sticks for Babies:
1.பூசணிக்காய் தோலினை நீக்கி நடுவில் உள்ள விதைகளை நீக்கவும்.
2.பூசணிக்காயினை நீளவாக்கில் வெட்டவும்.(குழந்தைகள் கையில் பிடித்து சாப்பிடுமாறு இருக்க வேண்டும்).
இதையும் படிங்க : குழந்தைகளுக்கான கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ்
3.ஒரு பவுலில் அரிசி மாவு மற்றும் கார்ன் ஃபிளவர் மாவை எடுத்து கொள்ளவும்.
4.தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5.பானை சூடாக்கி தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
6.பூசணி ஸ்டிக்ஸ்களை மாவு கரைசலில் முக்கி எடுக்கவும்.
7.ரவையில் புரட்டி எடுக்கவும்.
8. பானில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
9.மொறுமொறுப்பான பூசணி ரவா ஸ்டிக்ஸ் ரெடி.
இதையும் படிங்க: குழந்தைக்கு எப்போது திட உணவுகள் கொடுக்கலாம்?
பூசணிக்காயில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் B, விட்டமின் A, மினரல்ஸ், தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.பூசணிக்காய் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகள் பலவீனமாவதை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச் சத்துக்கள் சீரண உறுப்புகளுக்கு பலத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
Leave a Reply