Ellu Sadam in Tamil: இட்லி மற்றும் தோசைக்கு பொதுவாக சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக உளுந்து மற்றும் எள்ளு பொடியில் நல்லெண்ணெய்யை ஊற்றி தொட்டு சாப்பிடுவதே அலாதி பிரியம் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம்மில் பலரும் இந்த சுவைக்கு அடிமையானவர்கள் தான். உண்மையில் சொல்லப்போனால் பொடியானது சட்டினியை காட்டிலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணை ஊற்றி சாப்பிடுவதும் நம்மில் வழக்கம். குழந்தைகளுக்கும் இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து கொடுத்தால் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.
எனவே குழந்தைகளுக்கு ஏற்றவாறு எள்ளுப்பொடி இனி எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் எள்ளில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு தேவையான நார்ச்சத்து எள்ளில் நிறைந்துள்ளது.
- எள்ளில் அதிகளவு மெக்னீசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகின்றது. மேலும் ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைப்பதற்கும் இது துணை புரிகின்றது.
- எள் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
- எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எள் வழங்குகின்றது.
- இதனால் எலும்பு தேய்மானம் அடையாமல் ஆரோக்கியமாக இருக்க துணை புரிகின்றது.
- ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவல்லது.
- எள்ளில் ஏராளமான இரும்பு சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு வலிமை அளிக்ககூடியது.
- கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எள் எடுத்துக் கொண்டால் அதை சரி செய்கின்றது.
- இதில் சேர்க்கப்படும் கருப்பு உளுந்தில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உளுந்தம் பருப்பில் உள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க கூடியது.
- ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் உளுந்து உதவுகின்றது.
- பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
உடல் சூட்டினை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க உளுந்து உதவுகின்றது. - இடுப்பு எலும்பு வலிமை பெறுவதற்கு கருப்பு உளுந்து உதவுகின்றது.
- உளுந்தில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் காப்பர் போன்றவை நிறைந்துள்ளதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
Ellu Sadam in Tamil
Ellu Sadam in Tamil:
தேவையானவை
- வெள்ளை எள் – 4 டேபிள்.ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு -2 டேபிள்.ஸ்பூன்
- சீரகம்- 2 டீ.ஸ்பூன்.
Ellu Sadam in Tamil
செய்முறை
1.வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் எள்ளு சீரகம் மற்றும் உளுந்தை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2.நன்றாக ஆறவிடவும்.
3.மூன்றையும் சேர்த்து ஒன்றாக அரைக்கவும்.
4.குழந்தைகளுக்கான எள்ளு பொடி ரெடி.
எள்ளு பொடி சாதம் தயாரிப்பது எப்படி?
- சூடான சாதத்தினை ஒரு பவுலில் எடுத்து முன்னரே நன்றாக மசித்துக்கொள்ளவும்.
- நெய் மற்றும் 4 டீஸ்பூன் எள்ளு பொடி நெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
- குழந்தைகளுக்கான எள்ளுசாதம் ரெடி.
Ellu Sadam in Tamil
இந்த பொடியில் சேர்க்கப்படும் எள்ளு,சீரகம் மற்றும் உளுந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.மேலும் இதில் இரும்பு சத்துக்கள்,புரோட்டின்,மெக்னீசியம் ,ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பொடியினை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணெய் ஊற்றி மதிய உணவாக குழந்தைகளுக்கு கொடுத்தால் இதைவிட சத்தான உணவு வேறு ஒன்றும் இருக்காது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எள்ளு பொடி கொடுக்கலாமா?
இதில் உளுந்து, எள்ளு மற்றும் சீரகம் மட்டுமே சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு தாராளமாக சாதத்தில் பிசைந்து கொடுக்கலாம்.
எள்ளு பொடி சாதத்தை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுக்க ஆரம்பித்த பின்னர், முதல் கட்ட உணவுகளை அறிமுகப்படுத்திய பின்பு மதிய நேரத்தில் சாதம் கொடுக்கும் பொழுது எள்ளு பொடியையும் சேர்ந்து நன்றாக பிசைந்து கொடுக்கலாம்.
பெரியவர்களுக்கு எள்ளு பொடி சாதம் தயாரிப்பது எப்படி?
பெரியவர்களுக்கு தயாரிக்கும் பொழுது உங்கள் சுவைக்கு ஏற்றார் போல் மிளகாய் வத்தல் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு தயாரித்தால் காரம் சரியாக இருக்கும்.
குழந்தைகளுக்கான எள்ளு சாதம்
Ingredients
- 4 டேபிள்.ஸ்பூன் வெள்ளை எள்
- 2 டேபிள்.ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 2 டீ.ஸ்பூன் சீரகம்-
Notes
- வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் எள்ளு சீரகம் மற்றும் உளுந்தை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- நன்றாக ஆறவிடவும்.
- மூன்றையும் சேர்த்து ஒன்றாக அரைக்கவும்.
- குழந்தைகளுக்கான எள்ளு பொடி ரெடி.
- சூடான சாதத்தினை ஒரு பவுலில் எடுத்து முன்னரே நன்றாக மசித்துக்கொள்ளவும்.
- நெய் மற்றும் 4 டீஸ்பூன் எள்ளு பொடி நெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
- குழந்தைகளுக்கான எள்ளுசாதம் ரெடி.
Leave a Reply