Instant Jam Mix: ஜாம் என்ற வார்த்தையை கேட்டாலே நம் குட்டிகளின் கண்கள் கோழி முட்டை போன்று பெரிதாகும். அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு ஜாம் என்றால் பிரியம். பிரட்டிற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி, தோசை ஏன் இட்லிக்கும் கூட ஜாம் தொட்டு சாப்பிடும் குழந்தைகள் உண்டு. ஆனால் நமக்குத்தான் செயற்கை நிறமூட்டிகள் நிறைந்த ஜாமினை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு உள்ளூர பயம் இருக்கும். என்னதான் பழங்கள் சேர்த்திருக்கின்றன என்று விளம்பர நிறுவனங்கள் ப்ரொமோட் செய்தாலும் அதில் உண்மையாகவே பழம் சேர்க்கப்படுகின்றதா…Read More
குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்[Ragi Recipe in Tamil]
Ragi Recipe in Tamil :வெயில் காலம் வந்து விட்டாலே சூட்டை தணிப்பதற்கு நம் முன்னோர்கள் பெரும்பாலும் அருந்தியது கேப்பைக்கூழ்,கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு போன்றவைதான். ஆனால் பெருகி வரும் நவநாகரீக காலத்தில் கூழ் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல்தான் நம்மில்பலரும் இருக்கின்றோம்.ஆனால் நம் வருங்கால சந்ததியினருக்கு பழங்கால உணவின் அருமைகளை எடுத்துரைக்கவேண்டியது நம்கடமை. வெயில் காலம் வந்தவுடனே நாம் அருந்தும் கூல்ட்ரின்க்ஸ் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்களில் பெரும்பாலும் இருப்பவை ரசாயனம்தான். அவற்றை தவிர்த்து…Read More
குழந்தைகளுக்கான பீட்ரூட் ஜாம்
Beetroot Benefits in Tamil: ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான். பிரட்டில் ஆரம்பித்து சப்பாத்தி,பிஸ்கட்,தோசை என எல்லாவற்றிற்கும் ஜாம் கேட்கும் குழந்தைகள் எல்லோர் வீட்டிலும் உண்டு. குழந்தைகள் ஏதோ சாப்பிட்டால் பரவாயில்லை என்று ஜாமினை வாங்கி கொடுக்கும் பெற்றோர்களும் நம்மில் ஏராளம். அதேநேரம் பிரசர்வேடிவ்ஸ் மற்றும் கலர் கலந்த ஜாமினை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றோம் என்ற நெருடலும் அம்மாக்களின் மனதில் ஏற்படும் என்பது தட்ட முடியாத உண்மை. பழங்களின் கலவை என கலர் கலராய்…Read More
கோதுமை ஸ்ட்ராவ்பெரி பனானா பான்கேக்
Wheat Strawberry Banana Pancake in Tamil: நம் குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுவோம்.வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசையினை கொடுக்கும்பொழுது “அம்மா போர் அடிக்குதும்மா” என்று சொல்லாத குழந்தைகள் இல்லை.உங்கள் குழந்தைகள் காலை உணவினை விரும்பி ருசித்து சாப்பிட வேண்டுமா? அதற்கு பான்கேக்தான் சரியான தேர்வாக இருக்கும்.அதிலும் கோதுமை ஸ்ட்ராவ்பெரி மற்றும் வாழைப்பழம் கலந்த பான்கேக் குழந்தைகளுக்கு சத்தான காலைஉணவாக இருக்குமென்பதில் ஐயமில்லை. Wheat Strawberry Banana Pancake in Tamil தேவையானவை…Read More
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்
Sweetcorn Vegetable Soup in Tamil: நாங்கள் ஹோட்டலுக்கு ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் என்னுடைய குழந்தைகள் தவறாமல் ஆர்டர் செய்வது என்றால் அது ஸ்வீட் கார்ன் சூப்தான்.அதன் இனிப்பு கலந்த சுவை எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆனால் தினமும் ஹோட்டலுக்கு சென்று குடிப்பது என்பது முடியாத ஒன்றல்லவா.அப்பொழுதுதான் இதை நாம் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.நாம் வீட்டிலேயே செய்து கொடுத்தால் ஸ்வீட் கார்னுடன் காய்கறிகளையும் சேர்த்து பரிமாறலாம் அல்லவா? இதோ உங்கள் குழந்தைகளுக்கான…Read More
பாலக்கீரை சப்பாத்தி
Pasalai keerai Chapathi in Tamil: குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவு வகைகளில் பிரதானமான ஒன்று கீரை வகைகள்.ஆனால் கீரை என்றாலே நமது வாண்டுகள் பத்து அடி தூரம் தள்ளி போய்விடுவார்கள்.கீரையை குழந்தைகள் உண்ண செய்வது எப்படி என்று பல முறை யோசித்திருப்பீர்கள்.அதற்கான ரெசிபிதான் இது.என் குழந்தைகளும் கீரை உண்ண விரும்ப மாட்டார்கள்.அவர்களுக்கு அதை எப்படி கொடுக்கலாம் ன்று யோசித்த பொழுது நான் ட்ரை செய்த ரெசிபிதான் இந்த பாலக்கீரை சப்பாத்தி .வாருங்கள் நாம் செய்முறையை பார்க்கலாம்….Read More
ஹோம் மேட் பீனெட் பட்டர் ரெசிபி
Homemade Peanut Butter Recipe in Tamil எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு சலிக்காத ஒன்று என்றால் அது பீனெட் பட்டர். வேர்க்கடலையுடன் உப்பும்,இனிப்பும் கலந்த இதனது சுவை ருசிக்கவே அபாரமாக இருக்கும்.இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கும் நல்லது.ஆனால் நாம் கடைகளில் வாங்கும் வேர்க்கடலை பட்டரில் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்துள்ளதால் நன்மைகள் குறைவுதான்,மேலும் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.எனவே நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் மேட் வேர்க்கடலை ரெசிபியை காணலாம்.இது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் உண்ணலாம். வேர்க்கடலை பட்டரை நாம் வீட்டிலேயே…Read More