Home Remedy for Teeth Pain:”ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பதை எப்பொழுது நாம் மறந்தோமோ அப்பொழுதே பல் சம்மந்தமான பிரச்சனைகள் நம்மில் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டன.வித விதமான பற்பசைகளை உபயோகிப்பதால் நம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்று நாம் கருதிக்கொண்டிருக்கின்றோம். பற்சிதைவு மற்றும் பற்சொத்தை போன்றவை அனைவருக்கும் காணப்படும் பரவலான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படுகின்றது.பலதரப்பட்ட இனிப்புகள்,சாக்லேட்டுகள்,துரித உணவுகள் போன்றவை பற்களுக்கு எதிரிகளாகின்றன. இதனால் பல்வலி பிரச்சனையும் பரவலாகிவிட்டது.பல்வலி திடீரென்று ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வதற்கு முன் செய்ய…Read More
காய்ச்சலுக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்
Fever Home remedies in Tamil: குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் நமக்கு என்ன செய்வதென்றே தெரியாது.மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க என்ன செய்வதென்று தடுமாறுவோம்.லேசான காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன் எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் உடல் வெப்பநிலை அதிகமாகாமல் பார்த்து கொள்ளலாம்.அதற்கு முன் காய்ச்சல் வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகள்…Read More
வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்
Vayitru Pokku remedies in Tamil: வயிற்றுபோக்கு வந்தாலே நம்மை வாட்டி வதைத்து விடும்.பெரியவர்களுக்கே அதை தாங்கும் சக்தி குறைவுதான்.குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு வந்தால் துடித்து போய்விடுவார்கள்.உடலில் உள்ள நீர்சத்து வெளியேறி குழந்தைகளை சோர்வடைய செய்துவிடும்.எடை உடனடியாக குறைந்ததுபோல் தோன்றும்.பொதுவாக வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தாலோ, இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.குழந்தைகளுக்கு என்றால் ஒரு நாளைக்கு மேல் வயிற்றுப்போக்கு நீடித்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும். ஆனால்…Read More
பூச்சி கடிக்கான எளிமையான வீட்டு வைத்தியங்கள்
Poochi Kadikkana Veetu Viathiyam:விலங்கினங்களில் அதிகமான எண்ணிக்கையினை கொண்டுள்ளது பூச்சியினம்.மழைக்காலமானாலும்,வெயில் காலமானாலும் அவைகள் இல்லாத இடத்தில் நாம் இருக்க முடியாது.பூச்சிகளை விஷப்பூச்சிகள் மற்றும் விஷமற்ற பூச்சிகள் என வகைப்படுத்தலாம்.விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் நாம் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.இவை தவிர அன்றாட வாழ்வில் கொசுக்கள்,எறும்புகள்,விஷமற்ற சிறு பூச்சிகள் போன்றவை சில நேரம் நம்மை கடிப்பதுண்டு.அவை தடிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.பூச்சி கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் குணமாக்கலாம்.அவற்றை காண்போம். இதையும்…Read More
சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
Sali veetu vaithiyam-Omam othadam: குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டாலே மிகவும் சிரமம்தான்.குணமாவதற்குள் அவர்களை மிகவும் சோர்வடைய வைத்து விடும்.சளியின் தொடக்க நிலையிலேயே குணப்படுத்தி விட்டால் முற்றி போகாமல் தடுக்கலாம்.சளி மற்றும் இருமலுக்கான ஏராளமான வீட்டு வைத்தியங்களை நாம் இதற்கு முன் பார்த்திருக்கின்றோம்.ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போகின்றது ஒத்தட வைத்தியம். நாம் சமையலுக்கு அன்றாடம் உபயோகிக்கும் நறுமண பொருட்களில் முக்கியமான ஒன்றுதான் ஓமம்.இது எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு…Read More
டயபர் அரிப்பிற்கான எளிமையான 10 வீட்டு வைத்தியம்
Diaper Rash Home Remedy in Tamil: குழந்தைகளுக்கு டயபர் உபயோகிப்பதால் ஏற்படும் ரேஷசை போக்கும் எளிமையான வீட்டு வைத்தியம் டயபர் உபயோகிப்பது என்பது இப்பொழுது வழக்கமான ஒன்றாகிவிட்டது.நம் அம்மாக்கள்,பாட்டிமார்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளையே இடுப்பில் சுற்றி வைத்தனர்.ஆனால் இப்பொழுது பெருகி விட்ட “யூஸ் அண்ட் த்ரோ” கலாச்சாரத்தில் பருத்தி உடைகள் மறைந்தே போய்விட்டது.வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. இவை உபயோகிப்பதற்கு…Read More
சளி இருமலை போக்கும் மிட்டாய்
Homemade Cough Drops in Tamil(sali irumal nenga): மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே! என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து…Read More
மழைக்காலத்தில் கொசுக்களை விரட்ட இயற்கையான வழிகள்
Kosuvai Viratum Iyarkai Valigal: மழைக்காலம் வந்தாலே கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து விடும்.மனிதர்களுக்கு வரும் வித விதமான காய்ச்சல்களுக்கு கொசுக்கள் முக்கிய காரணியாக அமைகின்றது.மேலும் டெங்கு,மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்புவது கொசுக்கள் மட்டுமே.இவற்றிலிருந்து குழந்தைகளை காப்பதே நமக்கு பெரிய சவால்.வீட்டில் நாம் கொசுக்களை விரட்ட பல வகையான செயற்கை விரட்டிகள்,கிரீம்கள் ஆகியவற்றை பயன்படுத்தினாலும் அவற்றில் கலந்துள்ள ரசாயனங்கள் நம் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்பது மறுக்கமுடியாத உண்மை. ரசாயனம் கலந்த வாயுக்களை நாம் சுவாசிக்கும்…Read More
குடற்புழுவிற்கான வீட்டு வைத்தியம்
Kudalpulu Veetu Vaithiyam in Tamil:குடற்புழு பிரச்சனை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று.உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22 கோடி குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது.பல்வேறு வழிகளில் நம் உடலுக்குள் நுழையும் புழுக்கள் நம்மை அறியாமலேயே பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும்.இதை கட்டுப்படுத்த பல்வேறு வழிகள் உண்டு என்றாலும் குழந்தைகள் விஷயத்தில்…Read More
வியர்க்குருவை விரட்ட எளிமையான வீட்டு வைத்தியம்
Verkuru veetu vaithiyam: கோடை காலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது ஐஸ்கிரீம் , மாம்பழம், விடுமுறை,தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களின் வீடு. கையில் குச்சி ஐஸுடன் தெருவெங்கும் சுற்றி திரிந்த காலங்களை மறக்க முடியாது அப்படித்தானே! ஆனால் அதனுடன் வெயில்,வியர்வை மற்றும் வியர்க்குரு போன்றவைகள் எரிச்சலூட்டும் என்பவை மறுக்க முடியாத ஒன்று.அதிலும் வியர்க்குரு வந்துவிட்டால் உடல் முழுவதும் முள் குத்துவது போன்ற அரிப்பு ஏற்படும். நம்மை விட குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.ஏனென்றால்…Read More